Monday, March 4, 2013

அம்மா

பாத்திரம் விலக்கையில்
ஒரு கை பின்னிருந்து
கையை விலக்கி  கூறியது
உனக்கேன் இது
நான் பார்த்து கொள்கிறேன் என்று

இதில் மட்டும் ஒரு அகந்தை
வியர்வை சிந்தவும் விடாத அகந்தை
பொறாமை குணம் வேறு
இவன் செய்திடுவானே என்ற பொறாமை
இதிலும் ஒரு பெருமிதம்
தன மகன் பருக்கை விடாமல்
ரசித்து உண்டுள்ளான் என்று

கைகள் இதனை செய்யும்போது
கண்கள் கூறியது
அங்கே பார் பால் பொங்கிற்று
அவன் துயிலுமுன்
அருந்த கொடு என்று



அவளின் எல்லா உறுப்பும்
இரு வேலை செய்யுமோ
கண்கள் பேசிடும்
பின்கழுத்தும் தொலை தூரம் பார்க்கும்
சுவாசம் அணைக்கும்

கடவுளுக்கு ஏன் இந்த வஞ்சகம்?
அவனுக்கும் அன்னை உண்டே 
அவள் உறுப்புகளும் 
இரு வேலை செய்யுமோ?
நம் அன்னையை மிஞ்சிடுவாளோ?

இருக்காது - இது ஒவ்வொரு 
மகனுக்கும் மகளுக்கும் 
இருக்கும் அகந்தை 
பெருமை உண்மை !! 

2 comments:

  1. Well said. Expecting more...........

    ReplyDelete
  2. read this da... interesting subject but i felt u could ve written it better.. happens when you set the bar higher yourself to the reader :-)

    ReplyDelete