காதலில் கொஞ்சி காமத்தில் சிறந்து
ஒருடலான அந்நாளோ?
பிள்ளையொன்று பெற்று அவன்
வளர்ச்சியில் மகிழ்ச்சி கண்ட அந்நாளோ?
வயதில் முகம் சுருகி அழகு குறைந்தும்
நீயே அழகு என்றென்னவளிடம்
சொன்ன அந்நாளோ?
பிள்ளை படிக்க நாமும் படித்த அந்நாளோ?
அவன் விருதுகளால் சூழும்போது நம்பிள்ளையும்
சிறப்பான் என்று மனமகிழ்ந்த அந்நாளோ?
பிள்ளைக்கே பிள்ளையாகி அவன்
கவனிப்பில் கண்கள் கலங்கிய அந்நாளோ?
அழகான நாள் எதுவென்று அறிய
முனைந்த நாளில் என்தாரம் இல்லை
காலா! அவள் பிரிவால்
ஒரு நாளும் அழகில்லை
மீண்டும் அவளை காணும்
அழகான நாள் எந்நாளோ?
ஒருடலான அந்நாளோ?
பிள்ளையொன்று பெற்று அவன்
வளர்ச்சியில் மகிழ்ச்சி கண்ட அந்நாளோ?
வயதில் முகம் சுருகி அழகு குறைந்தும்
நீயே அழகு என்றென்னவளிடம்
சொன்ன அந்நாளோ?
பிள்ளை படிக்க நாமும் படித்த அந்நாளோ?
அவன் விருதுகளால் சூழும்போது நம்பிள்ளையும்
சிறப்பான் என்று மனமகிழ்ந்த அந்நாளோ?
பிள்ளைக்கே பிள்ளையாகி அவன்
கவனிப்பில் கண்கள் கலங்கிய அந்நாளோ?
முனைந்த நாளில் என்தாரம் இல்லை
காலா! அவள் பிரிவால்
ஒரு நாளும் அழகில்லை
மீண்டும் அவளை காணும்
அழகான நாள் எந்நாளோ?
pinra da!!
ReplyDeletegood one da .. keep going
ReplyDeleteDear Ramana
ReplyDeletehi ramana nice kavithai keep it up. but iam not able to get the last para what is 'Kala'?
Kala means, Yemadharma Rajan... Nall Kavithai... Innum Yethirpaarkirom....
ReplyDelete