Wednesday, May 15, 2013

கொஞ்சம் சிரி

சோகங்கள் வேண்டாமே நீயும் தான் கொஞ்சம் சிரி
கண்ணீரே வேண்டாமே கண்ணாடி கலங்கிடுமே
உந்தன் பொய்யில்லா சிரிப்பினை கண்ணாடி கொண்டாடும்
உந்தன் கன்னத்து குழி கண்டு கண்ணாடி வெட்கம் கொள்ளும்

உந்தன் புன்னகையில் யாழ் இசையும் தோற்றிடுமே
உந்தன் கண்ணில் கண்ணீர் அடடா தேம்பி வருவது ஏன்
நீயும் தான் அழுவதை கண்டால்
நிலவும் வராது போகும்
உன் கண்ணீர் பூமியில் பட்டால்
பூகம்பம் வந்திட கூடும்
நீயோ சிரித்தால்
வானம் எங்கும்
மேகம் கூடி
மழையும் பொழியும்
காகித பூவில் கூட மனம் வீசும்
வண்ணத்து பூச்சிகள் கூட நெடுநாள் வாழும்
நெடுநாள் வாழும்
நெடுநாள் வாழும்

உந்தன் சிரிப்பின் அலையே
பூச்சிக்கும் இசையாகும்
உந்தன் சிரிப்பின் அலையே
பூச்சிக்கும் இசையாகும்
அந்த ஒலியினை கேட்டிட
பறவைகள் பரதம் ஆடும்
அந்த இசையினை கேட்டிட பாம்பும்
காதுகள் கேட்கும்
அந்த இசையினை கேட்டிட பாம்பும்
காதுகள் கேட்கும்
மரமும் அதற்கு அசைந்து கொடுக்கும் 
கடலின் அலையும் சுகமாய் உணரும் 
எல்லோரும் ரசித்திட கொஞ்சம் சிரி 
சோகங்கள் எதற்கு கொஞ்சம் சிரி 
கொஞ்சம் சிரி 
கொஞ்சம் சிரி





இது ஹிந்தி திரைப்படம் Striker இல் இடம்பெற்ற சம் சம் என்ற பாடலை தமிழில் அழகுபடுத்தி பார்க்கும் முயற்சி. கிழே இருக்கும் இந்த காணொளி இந்த பாடலின் உடையது. தமிழில் பொருந்த பாடுங்கள். வரியை மாற்றி அமைப்பினும் பொருள் மாறாது இருக்கும்படி எழுதி உள்ளேன்
நீயும் தான் கொஞ்சம் சிரி சோகங்கள் வேண்டாமே முதல்
கொஞ்சம் சிரி சோகங்கள் எதற்கு வரை அவ்வாறே எழுதி உள்ளேன்.
கடைசி வரியிலிருந்து மேலே போயினும் ஒரு கவிதை.
கொஞ்சம் சிரியுங்கள் பாடலை பாடி. பாடலை பாடி கொஞ்சம் சிரியுங்கள். :)