Tuesday, December 24, 2013

மேகம் ஆண் நிலம் பெண்


நண்பர் ஒருவருக்காக ஒரு மழை காதல் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. மேகத்தை ஆணாகவும் நிலத்தை பெண்ணாகவும் மழைத்துளியை காதலாகவும் ஆக்கிவிட்டேன்.

பல்லவி

பெண்: துளி துளி மழைத்துளி
             மேகம் சிந்தும் மழைத்துளி
             இதுதான் இங்கே காதல் வார்தை
ஆண் : துளி துளி மழைத்துளி
             நிலம் தொடும் மழைத்துளி
             அடடா அதுதான் சுக வார்த்தை

அனுபல்லவி

பெண்: பார்க்காமல் தொலைதூரம் நிற்கும்
             வான்மேகம் இவன் தானோ
ஆண் : முத்தம் தான் பூமிக்கு தந்தேன்
              இதமான மழையாய் காதல்

சரணம் 1

ஆண்: அன்பே உன் தோளினில் பட்டு
             ஏதேதோ நானும் ஆனேன்
பெண்: நீயும் தான் இதழினை தீண்ட
             என்னுள் சொர்க்கம் அன்பே
ஆண் : சுவர்கத்தில் வந்து நானும்
             உன்னுள்ளே சேரலானேன்
பெண்: நீயும் தான் என்மேல் வந்தால்
             நகமும் புன்னகை பூக்கும்
ஆண் :மழை தந்து உன்னை தீண்டியேதான்
             என்னை இங்கு நானும் நன்கு உணர்ந்தேன்
             எந்தன் அணு எல்லாம்
             மெல்ல சிரித்திட
             புகைப்படம் எடுத்து நானும் தருவேன்
பெண் :அருகில் அருகில் நீ வந்திட
             உருகி உருகி தினம் வேண்டுவேன்
             நனைந்து நனைந்து உள்ளம் நிறைந்திட
             காதல் பிச்சை நானும் கேட்கிறேன்
ஆண் :அட காதல் ராணி துளி கண்ணீர் வேண்டாம்
              தினம் தினம் நானும் அடைமழை தருகிறேன்

சரணம் 2

ஆண் : எந்தன் உயிர் காதலை
               நீயும் தான் அறிந்தாயோ
பெண் : எந்தன் சிறு பூக்களும்
              உன்னிடம் சொல்லிடும் காதல்
ஆண் :  எந்தன் சிறு தூரலை
               உனக்காக நானும் தந்தேன்
பெண் : எந்தன் சிறு புருவமும்
               அழகாய் ஆட்டம் ஆடும்
ஆண் : உன்னில் நானும் ஒன்று சேர்ந்தது
              வரும் அந்த வாசம் என்னை ஈர்க்கும்
              மீண்டும் மீண்டும் வந்து
               காதல் தினம் செய்து
               மனமும் மனதில் பதிந்து நின்றேன்
பெண் :உயிரே உயிரே நீ வந்திடு
              எனக்கு எனக்கு காதல் தந்திடு
              நீயும் நானும் சேரும் சாட்சியே
              வீசுகின்ற மண்வாசமே
ஆண் : குழப்பம் வேண்டாம்
              வருத்தம் வேண்டாம்
              மண்வாசம் நம் காதல் சொல்லட்டும்
             

Sunday, December 8, 2013

எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா

சஹானா ராகத்தில் அமையுமாறு எழுதியது. விரைவில் பாட்டும் இணைக்கப்படும்.

பல்லவி:
எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா
எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா
கேட்கிறதா கேட்கிறதா

சரணம் 1:
வள்ளியுடன் சோலையில் இருப்பாயோ
நீ அப்பனுக்கு பாடம் உரைப்பாயோ
எந்தன் கூக்குரல் தான் கேட்டிடுமோ
நீயும் வந்து என்னை பார்பாயோ

எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா
கேட்கிறதா கேட்கிறதா

சரணம் 2:
பழனியில் தேரினில் போவாயோ
செந்தூரில் சூரனை அழிப்பாயோ
எந்தன் மனத்தேரினில்  வருவாயோ
உள்ளிருக்கும் சூரனை அழிப்பாயோ

எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா
கேட்கிறதா கேட்கிறதா

சரணம் 3:
சரவண பொய்கையில் இருப்பாயோ
என்னுள் நீ வர மாட்டாயோ
பாலபிஷேகம் தான் அறிவாயோ
என் கண்ணீர் உன்மேல் விழவில்லையோ

எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா
எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா
கேட்கிறதா கேட்கிறதா