Sunday, December 8, 2013

எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா

சஹானா ராகத்தில் அமையுமாறு எழுதியது. விரைவில் பாட்டும் இணைக்கப்படும்.

பல்லவி:
எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா
எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா
கேட்கிறதா கேட்கிறதா

சரணம் 1:
வள்ளியுடன் சோலையில் இருப்பாயோ
நீ அப்பனுக்கு பாடம் உரைப்பாயோ
எந்தன் கூக்குரல் தான் கேட்டிடுமோ
நீயும் வந்து என்னை பார்பாயோ

எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா
கேட்கிறதா கேட்கிறதா

சரணம் 2:
பழனியில் தேரினில் போவாயோ
செந்தூரில் சூரனை அழிப்பாயோ
எந்தன் மனத்தேரினில்  வருவாயோ
உள்ளிருக்கும் சூரனை அழிப்பாயோ

எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா
கேட்கிறதா கேட்கிறதா

சரணம் 3:
சரவண பொய்கையில் இருப்பாயோ
என்னுள் நீ வர மாட்டாயோ
பாலபிஷேகம் தான் அறிவாயோ
என் கண்ணீர் உன்மேல் விழவில்லையோ

எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா
எந்தன் ஓலம் கேட்கிறதா முருகையா
கேட்கிறதா கேட்கிறதா