கண்கள் உன்னை தேடுதடி கண்மணி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி
மழைக்காக ஏங்கும் உழவன் போல
உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி
மழைக்காக ஏங்கும் உழவன் போல
உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி
நீ சொல்லாய்
நீ சொல்லாய்
காரணங்கள் என்னவென்று
நீ சொல்லாய்
கண்ணுறங்கும் வேளையிலும்
மனமுறங்கா நிலைதந்து
எங்கே நீ உள்ளாயோ?
கண்முன்னே வாராயோ?
சொல்லடி சொல்லடி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி
கண்ணே என் கண்மணியே
அழகே என் செல்வமே
தளிரே என் தங்கமே
தூங்கு என் செல்லமே
சரணம் 1:
நிலவும் நட்சத்திரங்களும் நீ தூங்காமல் வாராதாம்
மின்மினிப்பூச்சிக்கூட ஆசையாய் மின்னாதாம்
ஆந்தைகள் கூட்டம் வந்து திட்டுதென்னை கண்மணியே
நீயும் கொஞ்சம் தூங்கு கண்ணே
தாலேலோ தாலேலோ
சரணம் 2:
மயிலைத் தன் தோகை கொண்டு விசிறிவிட சொல்கிறேன்
குயிலையும் கொண்டு வந்து பாடிடச் செய்கிறேன்
சரஸ்வதி அவளும் வந்து வீணையிங்கு மீட்டணுமோ
நீயும் கொஞ்சம் தூங்கு கண்ணே
தாலேலோ தாலேலோ
பாடல்கள் பல்லாயிரம் தந்தார் இளையராஜா
தன்னிசியால் தாய்மடியை உணர்வித்தார் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா
சரணம் 1:
நாத்திகரும் இசை தெய்வம் இவரே என்பார்
ஆத்திகரோ இசைத் தூதர் இவரே என்பார்
பிள்ளைகளைத் தாலாட்டும் நீலாம்பரி
இவர் தாரும் சுகமான பாடலொலி
இவர் கை அசைவில் வாத்தியங்கள்
சிந்தை வழி மெல்லிசைகள்
காற்றோடு இணை சேர்ந்து
பல்லவி:
பாடல்கள் பல்லாயிரம் தந்தார் இளையராஜா
தன்னிசியால் தாய்மடியை உணர்வித்தார் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா
சரணம் 2:
மூகாம்பிகை பெறாமகன் இவரே
ஞானத்தந்தை ரமணரின் வடிவே
தமிழ் காத்த பாண்டியரின் குலமே
இசைத்தமிழால் பூஜிக்கும் இசையே
இவரே இசையே
இவர்தந்த இசையாலே
மனம் யாவும் மகிழ்வாலே
இசை என்னும் வழியாலே
மருத்துவம் செய்திட
கடை பல்லவி:
இன்னும்
பாடல்கள் பல்லாயிரம் தாரீர் இளையராஜா
உம்மிசையால் ஆயிரங்கள் சுகம் தாரீர் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா
வேலவா சண்முகா அழைக்கிறோம் முன்னர் வா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா
சரணம் 1:
பக்தரெல்லாம் கூடி நின்று ஆரோஹரா என்பர்
காவடியும் சுமந்து வந்து உந்தன் அடி சேர்வர்
உந்தன் பெயர் சொல்லி சொல்லி மலைமீது ஏறி
கோபுரம் தான் கண்ட பின்னே பரவசம் கொள்வர்
வேலவன் வேலினை கண்டதும் ஆனந்தம்
சரணம் 2:
வீரமுண்டு காதலுண்டு ரெண்டும் சேர்ந்த வேலவா
தமிழாக ஆகி நிற்கும் கலிதீர்க்கும் சண்முகா
சிவனுக்கு பாடம் தந்தாய் சுவாமிமலை ஏறி
உம்மை காண நாமும் வந்தோம் சந்தனம் பூசி
கந்தனாய் வேலனாய் நிற்கிறாய் சண்முகா
ஆதனூர் பறையர் குலத்தினில்
தலைவனாம் நந்தன்
தில்லை காண நாளை செல்வேன்
என நாளும் சொல்லி
சிவமே மனத்தில் கொண்டனன்
நெற்றியில் திருநீரும்
கழுத்தில் மாலையும்
வாயில் நமச்சிவாயமும் கொண்டு
பூனுல் அணியா அந்தணனாய்
இந்த பாவிப் பறையன்
உயிர்பலி கொடுத்து பூசைகள் வேண்டாம்
கடும் நோய்க்கு பூசாரி சூடிட வேண்டாம்
படைத்தவனுக்கே எதற்கு பலி வழிபாடு
சிவன் பெயர் சொல்லி போற்றி பேரானந்தம்
எனத் தன் கூட்டத்திற்கு கூறினான்
மாற்று சிந்தனை மனச்சிக்கல்-
பித்துப் பிடித்த மடையன் என
பலிபூசாரி சொல்லிட
சிவப்பித்தன் தான் என
பாடினன் நந்தன்
ஆதனூர் அந்தணர் நிலந்தனை
உழுது வாழ்க்கை நடத்தினன் நந்தன்
இவன் மக்கள் யாவரும்
இவனோடு உழுது
செல்வத்தை ஈட்டினர்
தில்லை செல்ல அனுமதி கேட்க
என்றும் அந்தணர் கேலி செய்தார்
பறையனுக்கு எதற்கு தில்லை
தில்லை சென்றால் இங்கே சோறு இல்லை
தொழிலே தெய்வம் என பதில்கள்
நந்தன் மனமோ சிவனையே நாடிட்டு
திருப்பங்கூர் செல்ல திட்டம் ஆயிற்று
அவன் மக்கள் சிலர் சேர்ந்தும் ஆயிற்று
பறையனுக்கு கோவிலில் என்ன வேலை
என சிலர் வராமலும் ஆயிற்று
நந்தன் கோவிலுக்கு செல்ல
நந்தி சிலையோ உயர்ந்து
வழிமறைத்து நின்றது
(பாடலாக) பாடல் -1
பூனுல் இல்லை கோவிலுள் செல்ல
பாகையும் இல்லை கோவில் செல்ல
நந்திக்கு நந்தன் மேல் என்ன பகை?
சிவலிங்க தரிசனம் என் குலத்தார்
காண நந்தி தடை
மலைப்போலே நந்தி
இதுபோலே கண்டது இல்லை
இந்த பாவிப் பறையன்
உன்னைக் காணேனோ?
நந்தி நீயேயாயினும்
சற்று விலகாயோ?
என நந்தன் பாட
பாடல்-2
நந்தி! எனைக்காண நந்தன் இங்கு வந்தான்
நந்தி! எனைக்காண நந்தன் இங்கு வந்தான்
விலகாயோ நீ விலகாயோ
சிலை நீ என நான் அறிவேன்
சிலை நீ அதை நான் அறிவேன்
தில்லை செல்லாது இங்கே வந்த்திட்ட
நந்தன் தான் எனை காண விலகாயோ?
பறையனென்று உள்ளே வரமால்
தான் பறையனென்று உள்ளே வரமால்
மனதினுள்ளே என்னை நினைத்து
என்னை காணாது மனம்வாடும்
நந்தன் தான் எனை காண விலகாயோ?
தில்லை கூட செல்லாது
உயர்தில்லை கூட செல்லாது
எனை காண மனம் ஏங்கி
மாந்தரோடு கூடி நின்று
நந்தன் தான் எனை காண விலகாயோ?
குலம்கொண்டு பிரித்தெடுத்து
கோவிலுள்ளே நுழையாது
மூடரவர் சொன்னதற்கு
பாவமாய் அங்கே நிற்கும்
நந்தன் தான் எனை காண விலகாயோ?
(பாடல் முற்று)
என சிவனும் பாட
ஆங்கே சிலையும் விலகிற்று
ஆனந்த தரிசனம் கண்டனன் நந்தன்
ஊர்திரும்ப,
பறைபாவிக்கு கோவில் ;
உழுது யார் திண்ணுவார் ?
என அந்தணனும் திட்ட
நந்தன் மனம் உடைந்தான்
கூட சென்றவருக்கும்
வேலை இல்லை என ஆனது
நாளை நாளை என
பல நாளைக் கடந்தான் நந்தன்
தில்லை செல்ல வழி இல்லை என ஆனது
பாடல்-3
அந்தணன் வீடு சென்றான்
நந்தன்-அந்தணன் வீடு சென்றான்
அந்தணன் வெளியே வந்தான்
அந்தணன் வெளியே வந்தான்
நந்தன்-அந்தணன் வீடு சென்றான்
மடையன் தான் தில்லை செல்ல
என்ன வழி கூறும் ஐயா
மடையன் தான் தில்லை செல்ல
என்ன வழி கூறும் ஐயா
நிலவு வந்து கேட்கணுமோ
அந்த வானம் வந்து கேட்கணுமோ
சிவன் தனை காண இந்த மடையன்
செல்ல வேண்டும்
தில்லை செல்ல வேண்டும்
செல் நீ செல்
நாளை காலையே செல்
உழுதிட்ட பயிர் யாவும்
நாளை நெல் ஆயினால் செல்
மடையா! இப்போ வீட்டுக்கு செல்
(பாடல் முற்று)
நந்தன் மறுநாள் கழனி செல்ல
நிலம் யாவும் நெல்லாய் இருந்தது
செய்தி அறிந்து அந்தணன் ஓடி வந்தான்
பாடல்-4
நந்தா நீ இல்லை மடையன்
இந்த பாவிதான் மடையன்
நந்தா நீ இல்லை மடையன்
அந்தணன் ஆனால் என்ன
பறையன்தான் ஆனால் என்ன
சிவனுக்கு தொழுகை செய்ய
இந்தப் பாவி மடையன் சொன்ன
வார்த்தையெல்லாம்
மன்னித்து நந்தா தில்லை செல்வாய்
நீ தில்லை செல்வாய்
(பாடல் முற்று)
என பாடி நந்தன் காலில் விழுந்தான் அந்தணன்
பாடல்-5
காலினில் விழலாமோ
எந்தன் காலினில் விழலாமோ
தாய் தந்தை முதியவர் சிவநாதன் தவிர
காலிலும் விழலாமோ
யார் காலிலும் விழலாமோ
அந்தணர் பறையர் பிரிவில்லை
சிவன் கண்ணினில் யாவவரும்
ஒன்றென அறியவேண்டாமோ
அந்தணர் பறையர் பிள்ளை
யார் என்றாலும்
செத்தபின் சாம்பல் தான்
என அறியவேண்டாமோ
அதை அறியவேண்டாமோ
சாதிகள் இல்லை என சொல்லிடவே
தில்லைநாதனும் என்னை படைதிருப்பானோ?
என்னை படைத்திருப்பனோ ?
அவனை காண வேண்டாமோ?
நான் காண வேண்டாமோ?
இருகண்ணிருக்கும்போதே
அவனை காண வேண்டாமோ?
(பாடல் முற்று)
அந்தணன் எழுந்தான்
தில்லை செல்ல தானே
செல்வம் கொடுத்தான்
தன் குற்றம் அறிந்தான்
மனிதம் மட்டுமே சாதி என்றான்
நந்தனார் தில்லை அடைந்தார்
கோவில் திறந்தவுடன்
மலராக மாறி
சிவன்பாதம் அடைந்தார்
இரவு கனவில் நாம் காதலர்களாய் இருந்தோம் என்றும் கனவில் நடந்தவற்றையும் பெண்ணிடம் ஆண் பாடலாய் சொல்கிறார்.
பல்லவி:
நேற்று ஒரு கனா
அதில் நீயும் நானும் ஜோடி
நேற்று ஒரு கனா
அதில் நீயும் நானும் ஜோடி
நம்போல் யாருமில்லை
இந்த காதலுலகில்
சரணம்:
உன் கண்களை பார்த்து வந்ததில்லை
உன் வார்த்தையை கேட்டு வந்ததில்லை
உன் புருவம் பார்த்தேன் காதல் அங்கே
சொல்லிவிட்டேன் சொல்லிவிட்டேன் அந்த நொடி காதல்
வாழ்க்கையெல்லாம் வாழ்க்கையெல்லாம் தொடர்ந்தது காதல்
நாம் கைகோர்த்தால் பேரழகு
சேர்ந்து நடந்தால் ஓரழகு
அழகே உருவாய் காதல் அங்கே
அன்புக்கடல் காதற்கடல் நீந்தி சென்றோம்
இணைராகம் துணைராகம் பாடியே வாழ்ந்தோம்
முடியில் நரைவர எமன் வந்தான்
தோள்கள் சுருங்கிட எமன் வந்தான்
நம் காதல் கண்டான் பூரிப்படைந்தான்
எமராஜன் கண்களிலே காதலைக் கண்டான்
காதலுலகில் மரணம் இல்லை சொல்லிச் சென்றான்
பல்லவி:
நேற்று ஒரு கனா
அதில் நீயும் நானும் ஜோடி
நேற்று ஒரு கனா
அதில் நீயும் நானும் ஜோடி
நம்போல் யாருமில்லை
இந்த காதலுலகில்
சபரிவாசன் நோக்கி பயணம் - பரந்தாமன்
அவனை நெஞ்சில் கொண்டால் துன்பம் தீரும்
மலையேறிப் புகழ்ப்பாடி திருமேனித்
தான் கண்டிட மனம் துள்ளித்துள்ளி
தினம் ஏங்கும் - அவன் முகம் கண்டு
பூரிப்போகும் (சபரிவாசன்)
சரணம் 1:
தென்னை யாவும் போட்டிப் போடும் சண்டைக் கொள்ளும்
தன் தேங்காயை சபரிக்குத் தாரும் - சுவாமிமார் இருமுடியில்
தேங்காய் தான் ஏறிடவே காற்றாய்ப் பாடல்கள் பாடும்
மற்றத் தென்னைகள் சோகத்தில் மூழ்கும் (சபரிவாசன்.. தீரும்)
சரணம் 2:
நெய்யினைத் தேங்காய் சுமக்கும் இருமுடி ஏறும் - அந்த
ஐயனைத் தீண்டிடச் செல்லும்- நெய்யோ
நீ கற்பூர ஆழிக்குத்தான் செல்வாய் எனச் சொல்ல
தேங்காய் கள்ளமாய் சிரிக்கும் (சபரிவாசன்.. தீரும்)
சரணம் 3:
கற்பூர ஆழி சென்றாலும் துயர் இல்லை- உனை
நான் தொட்டு அவன் குளிக்கத் தாரேன் - கற்பூர ஆழியில்
சாம்பலாய்ப் போனாலும் அவன் வாசம் செய்யும் சபரிமலை
அதில் வாசம் செய்யும் என் சாம்பல் (சபரிவாசன்.. தீரும்)
சரணம் 4:
அந்தத் தேங்காய்க்கும் உனைத் தொழவேண்டி எண்ணம்-
நாங்கள் அதையும் கூட்டி வாரோம்
உன் தரிசனம் தாராய் மணிகண்டா!!
ஸ்வாமியே சரணம் அப்பா!!
ஐயப்ப சரணம் அப்பா!
நண்பர் ஒருவருக்காக ஒரு மழை காதல் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. மேகத்தை ஆணாகவும் நிலத்தை பெண்ணாகவும் மழைத்துளியை காதலாகவும் ஆக்கிவிட்டேன்.
பல்லவி
பெண்: துளி துளி மழைத்துளி
மேகம் சிந்தும் மழைத்துளி
இதுதான் இங்கே காதல் வார்தை
ஆண் : துளி துளி மழைத்துளி
நிலம் தொடும் மழைத்துளி
அடடா அதுதான் சுக வார்த்தை
அனுபல்லவி
பெண்: பார்க்காமல் தொலைதூரம் நிற்கும்
வான்மேகம் இவன் தானோ
ஆண் : முத்தம் தான் பூமிக்கு தந்தேன்
இதமான மழையாய் காதல்
சரணம் 1
ஆண்: அன்பே உன் தோளினில் பட்டு
ஏதேதோ நானும் ஆனேன்
பெண்: நீயும் தான் இதழினை தீண்ட
என்னுள் சொர்க்கம் அன்பே
ஆண் : சுவர்கத்தில் வந்து நானும்
உன்னுள்ளே சேரலானேன்
பெண்: நீயும் தான் என்மேல் வந்தால்
நகமும் புன்னகை பூக்கும்
ஆண் :மழை தந்து உன்னை தீண்டியேதான்
என்னை இங்கு நானும் நன்கு உணர்ந்தேன்
எந்தன் அணு எல்லாம்
மெல்ல சிரித்திட
புகைப்படம் எடுத்து நானும் தருவேன்
பெண் :அருகில் அருகில் நீ வந்திட
உருகி உருகி தினம் வேண்டுவேன்
நனைந்து நனைந்து உள்ளம் நிறைந்திட
காதல் பிச்சை நானும் கேட்கிறேன்
ஆண் :அட காதல் ராணி துளி கண்ணீர் வேண்டாம்
தினம் தினம் நானும் அடைமழை தருகிறேன்
சரணம் 2
ஆண் : எந்தன் உயிர் காதலை
நீயும் தான் அறிந்தாயோ
பெண் : எந்தன் சிறு பூக்களும்
உன்னிடம் சொல்லிடும் காதல்
ஆண் : எந்தன் சிறு தூரலை
உனக்காக நானும் தந்தேன்
பெண் : எந்தன் சிறு புருவமும்
அழகாய் ஆட்டம் ஆடும்
ஆண் : உன்னில் நானும் ஒன்று சேர்ந்தது
வரும் அந்த வாசம் என்னை ஈர்க்கும்
மீண்டும் மீண்டும் வந்து
காதல் தினம் செய்து
மனமும் மனதில் பதிந்து நின்றேன்
பெண் :உயிரே உயிரே நீ வந்திடு
எனக்கு எனக்கு காதல் தந்திடு
நீயும் நானும் சேரும் சாட்சியே
வீசுகின்ற மண்வாசமே
ஆண் : குழப்பம் வேண்டாம்
வருத்தம் வேண்டாம்
மண்வாசம் நம் காதல் சொல்லட்டும்
பஜனை பாடலை அல்லவா இப்படி "Gangs of Wasseypur" படத்தில் பயன்படத்தி உள்ளனர் என்று தோன்றியது . "ஓ வுமனியா" என்று கேட்கும் போது "ஓம் முருகா" என்று ஒரு உள்ளோடல் வேறு. எழுதி விடுவோமென எழுதலானேன். வேறு மொழியில் தாறுமாறான அர்த்தம் கொண்ட பாடலை முருகன் பெயரில் எழுதிவிட்டானே என்று எண்ணுவோருக்கு- நல்ல பஜனை மெட்டில் இறைவன் பெயர் இருக்கட்டுமே. விநாயகர் சிலைக்கும் துப்பாக்கி கொடுத்து அழகு பார்க்கும் உலகம் இது. கீழே உள்ள வீடியோவை க்ளிக்கவும். அதே மெட்டில் முருகனை பாடவும்.
முருகன் வருவான் குமரன் வருவான்
மயில்வாகனன் வருவான் கதிர்வேலன் வருவான்
சோகங்கள் வேண்டாமே நீயும் தான் கொஞ்சம் சிரி
கண்ணீரே வேண்டாமே கண்ணாடி கலங்கிடுமே
உந்தன் பொய்யில்லா சிரிப்பினை கண்ணாடி கொண்டாடும்
உந்தன் கன்னத்து குழி கண்டு கண்ணாடி வெட்கம் கொள்ளும்
உந்தன் புன்னகையில் யாழ் இசையும் தோற்றிடுமே
உந்தன் கண்ணில் கண்ணீர் அடடா தேம்பி வருவது ஏன்
நீயும் தான் அழுவதை கண்டால்
நிலவும் வராது போகும்
உன் கண்ணீர் பூமியில் பட்டால்
பூகம்பம் வந்திட கூடும்
நீயோ சிரித்தால்
வானம் எங்கும்
மேகம் கூடி
மழையும் பொழியும்
காகித பூவில் கூட மனம் வீசும்
வண்ணத்து பூச்சிகள் கூட நெடுநாள் வாழும்
நெடுநாள் வாழும்
நெடுநாள் வாழும்
உந்தன் சிரிப்பின் அலையே
பூச்சிக்கும் இசையாகும்
உந்தன் சிரிப்பின் அலையே
பூச்சிக்கும் இசையாகும்
அந்த ஒலியினை கேட்டிட
பறவைகள் பரதம் ஆடும்
அந்த இசையினை கேட்டிட பாம்பும்
காதுகள் கேட்கும்
அந்த இசையினை கேட்டிட பாம்பும்
காதுகள் கேட்கும்
மரமும் அதற்கு அசைந்து கொடுக்கும்
கடலின் அலையும் சுகமாய் உணரும்
எல்லோரும் ரசித்திட கொஞ்சம் சிரி
சோகங்கள் எதற்கு கொஞ்சம் சிரி
கொஞ்சம் சிரி
கொஞ்சம் சிரி
இது ஹிந்தி திரைப்படம் Striker இல் இடம்பெற்ற சம் சம் என்ற பாடலை தமிழில் அழகுபடுத்தி பார்க்கும் முயற்சி. கிழே இருக்கும் இந்த காணொளி இந்த பாடலின் உடையது. தமிழில் பொருந்த பாடுங்கள். வரியை மாற்றி அமைப்பினும் பொருள் மாறாது இருக்கும்படி எழுதி உள்ளேன்
நீயும் தான் கொஞ்சம் சிரி சோகங்கள் வேண்டாமே முதல்
கொஞ்சம் சிரி சோகங்கள் எதற்கு வரை அவ்வாறே எழுதி உள்ளேன்.
கடைசி வரியிலிருந்து மேலே போயினும் ஒரு கவிதை.
கொஞ்சம் சிரியுங்கள் பாடலை பாடி. பாடலை பாடி கொஞ்சம் சிரியுங்கள். :)
சமீப காலமாக சஹானா ராகம் மீது ஓர் அலாதி பிரியம். சஹானாவில் வந்த திரைப்பாடல்களை சேகரித்து வந்தேன். இதே நேரத்தில் சென்ற வாரம் சபரிமலை சென்று வந்தேன். கோவிலில் ஐயப்பன் பாடல்கள் ஒலிக்கும். மலையாளத்தில் யேசுதாஸ் சஹானா ராகத்தில் பாடிய பாடல் ஒன்றை ஒலிபரப்பினார்கள். தமிழில் ஐயப்பனுக்கு சஹானாவில் பாடல் உள்ளதா என தேடலானேன். வீரமணி அவர்களின் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் தொகுப்பில் ஐயப்பனை காண வாருங்கள் என்ற பாடலில் ராகமாலிகாவில் தொகையறா இருக்கும். அதில் சஹானாவும் உண்டு. அனால் சஹானாவில் முழுபாடல் கிடையாது. எழுதுவோமே என இன்று எழுதலானேன்.
இந்த பாடலை தமிழ் சினிமாவில் முதல் சஹானாவான கண்ணகி திரைபடத்தின் "பத்தினியே உன்போல்" பாடலின் மெட்டை மனதில் கொண்டு எழுதி இருக்கிறேன். அதன் வீ டியோவை இங்கு இணைக்கிறேன். அதே மெட்டில் பாடி சஹானாவை அனுபவியுங்கள். இறை அருள் பெறுங்கள்.
பல்லவி
ஐயப்பனை உள்ளம் நித்தமும் நினைத்தால்
பாவங்கள் நீங்கிடுமே
சுவாமி ஐயப்பனை உள்ளம் நித்தமும் நினைத்தால்
பாவங்கள் நீங்கிடுமே
சுவாமி ஐயப்பனை
அனுபல்லவி
சரண கோஷமே அவனுக்கு பிடிக்கும்
சரண கோஷமே அவனுக்கு பிடிக்கும்
அவன் பெயர் சொன்னால் நம் மனம் குளிரும்
அவன் பெயர் சொன்னால் நம் மனம் குளிரும்
ஐயப்பனே
சரணம்
அன்னைக்கு புலிப்பால் தந்திட்ட தெய்வம்
வாவரன் தோழன் ஒப்பற்ற தெய்வம்
அன்னைக்கு புலிப்பால் தந்திட்ட தெய்வம்
வாவரன் தோழன் ஒப்பற்ற தெய்வம்
பந்தளம் தனிலே வாழ்ந்திட்ட தெய்வம்
பந்தளம் தனிலே வாழ்ந்திட்ட தெய்வம்
வாழ்வில் சிறந்திட வழிபுரி நாளும்
வாழ்வில் சிறந்திட வழிபுரி நாளும்
பல்லவி
ஐயப்பனை உள்ளம் நித்தமும் நினைத்தால்
பாவங்கள் நீங்கிடுமே
சுவாமி ஐயப்பனை
-இரமணன் கோத்தது
Thanks to my dad, I got some knowledge about Carnatic songs and was able to tell the ragas of some songs when heard then. Though I listen to all ragas, there is always a special love for Sahana. As my readers may not know about Carnatic songs. I will take you through Tamil and Malayalam cinema songs and teleserial songs based on Sahana.
Please click the songs in the titles to hear the song in thiraipadal.com or youtube.com
1.Pathiniye unpol
Singer: PU Chinnappa
Movie: Kannagi
Composer: SV Venkataraman
Year: 1942
PU Chinnapa has the crown as the first singer to sing Sahana in cinema. PU Chinnappa and MK Thiagaraja Bhagavadhar are very proficient in Classical singing. The flawless rendition is the must hear.
2.Thamiye Painthamizh
Singer: MK Thiagaraja Bhagavathar
Movie: Sivakavi
Composer: Papanasam Sivan
Year: 1943
MKT is a prolific singer on par with great classical singers of yesteryear. Papanasam Sivan is called as Thyagarajar of Tamil. A Sahana of their combination is classic. Such a sweet song. No video or audio of the song is available in web. Will upload once it is uploaded in youtube.
3.Udal uruga
Singer: Bharata Ratna MS Subbulakshmi
Movie: Meera
Composer: SV Venkataraman
Year: 1945
MS Subbulakshmi's Ragamalika. Anything from her is precious. And a Sahana from her is even more precious for me. It is a Ragamalaika and the Sahana part of the song is from 1:07 to 1:51.
Such a beautiful rendition. The way TMS sings "Thaen endhum malaraagi vaan endhum nilavagi sindhai kavarndhidudhe" is simply superb. Hear and get drenched in Sahana
6.Engo Pirandhavaram
Singer: P Susheela
Movie: Bommai
Composer: S.Balachandar
Year: 1963
P Susheela in her early days. Such a sweet voice for Sahana. The song took the classical form of Sahana and is very good to hear.
7.Maranthai enni kalangidum Vijaya
Singer: Seergazhi Govindarajan
Movie: Karnan
Composers: Vishwanathan Ramamurthy
Year: 1963
A ragamalika from Seerkazhi Govindarajan. Sahana part of the song is from 0:43 to 1:34. A 53 seconds of delight.
7.Parthen Sirithen
Singers: PB Srinivas, P Susheela
Movie: Veera Abhimanyu
Composer: KV Mahadevan
Year: 1965
Well! The trademark song. Many would say the best cine song on Sahana. KV Mahadevan is such a legend, he used PB Srinivas and P Susheela, the sweetest voices of then. Such a rendition. Kannadasan's lyrics is a great plus for the song. The lines flow in your ear like honey. One can't leave this song when they discuss about Sahana.
8.Nee enge
Singer: P Susheela
Movie: Mannippu
Composer: SM Subbiah Naidu
Year:1969
Susheela and Chitra sang many songs in Sahana. This is one among them. Saram part of this song is Sahana.
8.Athi nathan ketkindran
Singer: S Janaki, TM Sundararajan
Movie: Ganga Gowri
Composer: MS Viswanathan
Year: 1973
If P Susheela did wonders with Sahana, this song is S Janaki's turn. Such beautiful singing.
9.Aagayam Mazha pozhinja
Singer: Vani Jayaram
Movie: Dhikkatra Parvathi
Composer: Veenai Chittibabu
Year:1974
All the fantastic female singers have crowned Sahana. It is Vani amma's turn. This song is not entirely Sahana. It is a Ragamalika of Ragas Anandha Bhairavi, Behag, Sahana and Neelambari. The Sahana part is from 1:47 to 2:30.
10.Ennadi Naanamendru anaippan
Movie: Ananda Bhairavi
Composer: R.Ramanaujam
Year: 1978
No video or audio format of the song is available in the net. Will upload the song once it is uploaded in the internet.
10.Unnal Mudiyum thambi Nadhaswaram bit
Performer: Karaikuruchi Arunachalam
Movie: Unnal Mudiyum Thambi
Year: 1988
Ilaiyaraaja, the legend knows where to fit a music. The legend who is acclaimed as "King of BGM" used this piece of late Karaikurichi Arunachalm wisely. The scene will be like Gemini Ganesan will send Kamalhasan from home. Kamal's brother will play this bit for him. Will make anyone to cry. There isn't a single song in Sahana from Ilaiyaraaja till now.
10.Indha veenaiku theriyadhu
Singer: Chitra
Serial: Rail Sneham
Composer: VS Narasimman
Year: 1992
KB's favourite raga- Sahana. That is why he named one of his serials as Sahana. Chitra being good in classical, she has sung the song very beautifully.
11.Andha veenaiku theriyadhu
Singer: KJ Yesudas
Serial: Rail Sneham
Composer: VS Narasimman
Year: 1992
Tamils have to be destined to Kerala for giving us great singers. KJ Yesudas, Chitra, Sujatha and the list follows. The male version of the song.
12.Rukku Rukku
Singers: Kamal Haasan, Sujatha
Movie: Avvai Shanmugi
Composer: Deva
Year : 1996
Kamal Haasan, a singing pro himself, in female voice is the highlight of the song. Good to hear.