Tuesday, August 28, 2012

ஐயப்பனுக்கு சஹானா மாலை

பாடல் எழுத காரணம் 

                         சமீப காலமாக சஹானா ராகம் மீது ஓர் அலாதி பிரியம். சஹானாவில் வந்த திரைப்பாடல்களை சேகரித்து வந்தேன். இதே நேரத்தில் சென்ற வாரம் சபரிமலை சென்று வந்தேன். கோவிலில் ஐயப்பன் பாடல்கள் ஒலிக்கும். மலையாளத்தில் யேசுதாஸ் சஹானா ராகத்தில் பாடிய பாடல் ஒன்றை ஒலிபரப்பினார்கள். தமிழில் ஐயப்பனுக்கு சஹானாவில் பாடல் உள்ளதா என தேடலானேன். வீரமணி அவர்களின் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் தொகுப்பில் ஐயப்பனை காண வாருங்கள் என்ற பாடலில் ராகமாலிகாவில் தொகையறா இருக்கும். அதில் சஹானாவும் உண்டு. அனால் சஹானாவில் முழுபாடல் கிடையாது. எழுதுவோமே என இன்று எழுதலானேன்.

                       
                   இந்த பாடலை தமிழ் சினிமாவில் முதல் சஹானாவான கண்ணகி திரைபடத்தின் "பத்தினியே உன்போல்" பாடலின் மெட்டை மனதில் கொண்டு எழுதி இருக்கிறேன். அதன் வீ டியோவை இங்கு இணைக்கிறேன். அதே மெட்டில் பாடி சஹானாவை அனுபவியுங்கள். இறை அருள் பெறுங்கள்.



பல்லவி

ஐயப்பனை உள்ளம் நித்தமும் நினைத்தால்
பாவங்கள் நீங்கிடுமே
சுவாமி ஐயப்பனை உள்ளம் நித்தமும் நினைத்தால்
பாவங்கள் நீங்கிடுமே
சுவாமி ஐயப்பனை

அனுபல்லவி

சரண கோஷமே அவனுக்கு பிடிக்கும்
சரண கோஷமே அவனுக்கு பிடிக்கும்
அவன் பெயர் சொன்னால் நம் மனம் குளிரும்
அவன் பெயர் சொன்னால் நம் மனம் குளிரும்
ஐயப்பனே

சரணம்

அன்னைக்கு புலிப்பால் தந்திட்ட தெய்வம்
வாவரன் தோழன் ஒப்பற்ற தெய்வம்
அன்னைக்கு புலிப்பால் தந்திட்ட தெய்வம்
வாவரன் தோழன் ஒப்பற்ற தெய்வம்
பந்தளம் தனிலே வாழ்ந்திட்ட தெய்வம்
பந்தளம் தனிலே வாழ்ந்திட்ட தெய்வம்
வாழ்வில் சிறந்திட வழிபுரி நாளும்
வாழ்வில் சிறந்திட வழிபுரி நாளும்

பல்லவி


ஐயப்பனை உள்ளம் நித்தமும் நினைத்தால்
பாவங்கள் நீங்கிடுமே
சுவாமி ஐயப்பனை
                                                  -இரமணன் கோத்தது 

No comments:

Post a Comment