Thursday, April 5, 2012

முடிவுரை

சுவாச கோளாறு
முடிவுரைக்கு முன்னுரையாக

பெயர்த்தி தோளில்
துயில்கையில்
பல்லில்லா சிரிப்பு
முடிவுரையின் பொருளுரைக்கு
முதல் வரியாக

வண்ண வண்ண மாத்திரைகள்
என்னவளின் போதனைகள்
பெயர்த்தியவள் பதிலறியா கேள்விகள்
மகனோடு மகிழுந்து பயணங்கள்
காலை நடைபயிற்சியில் நண்பர்கள்
தினமும் மாலை கோவில்கள்
அவ்வப்போது சிகிச்சைகள்
என முடிவுரையே
ஆயிரம் பக்கங்கள்


இன்னும் பக்கங்கள் ஆயிரம் வேண்ட
காகித பற்றாகுறையோ
இறைவன் வைத்தான்
முடிவுரைக்கு முற்றுபுள்ளி...




3 comments:

  1. Super boss, ennama kavithai eluthareenga... adutha pa.vijay than!!!

    ReplyDelete
  2. really superb ... impressed. congrats da

    ReplyDelete