Tuesday, July 17, 2012

நாம் - அவர்களும் இவர்களும்






அவனைப்பற்றி அதிகம் புறம் பேசியதால் 
இவர்களின் முதல்வனானான் இவன்.
இவனென்ன பெரிய இவனா என
ஏளனம் செய்வான் ஓர் அவன்.
அவன்தான் சரியென அவனை
முதல்வராக்கினர் அவர்கள்.
இவர்கள் அவர்களை பிடிக்காதவர்கள்.

காரணமேதென  வினவினால்
அவன் நூல் அணிந்தவன்
இவன் குடும்பமே ஆளும்
என காரணங்கள்.

இது போதாதென
அவர்களின் நாலாமவன் மூணாமிவனை
இழி பேசினான்
இவனுக்கு மூன்று தாரங்கள் என
இப்படியும் காரணங்கள்.

அவன் இவன் என்றெதெற்கு
நாமென இருப்போம் என்று
அவனும் இவனும் இல்லாதொருவன் கூறியதால்
அவ்வொருவன் உவன் என
மூன்றாம் அணி ஆனான்.
உவனுக்கு சிவப்பன் எனப்  பெயரும் வைத்தான்.

இது போதாதென
அவர்களில் இரண்டாம் நிலை அவர்கள் இவர்கள் 
மூன்றாம் நிலை அவர்கள் இவர்கள் என 
கடைநிலை அவன் இவன் வரை பிரிவுகள். 
இவர்களும் அவர்களுக்கு சளைத்தவரல்லர். 
இதிலும் கடைநிலை வரை பிரிவுகள். 


அக்காலத்தில் 
அவன் சைவனாகவும்
இவன் வைணவனாகவும் 
உவன் சமணனாகவும் இருந்திருப்பார்களோ?
இவைகளில் இப்போதும் கடைநிலை வரை
பிரிவுகள் இருக்கிறதே!!

2 comments:

  1. iam not able to understand but i understood avan even uvan avarkal evarkal, Aeyvargal, but the imagination and poem is excellent it will not be clear to these, those and their's and here's and where's, who's and so on......

    Good keep it up daa Ramanan(Avan-Evan)

    ReplyDelete
  2. கொஞ்ச நாள் முன்பு "அவர்களும் இவர்களும்" என்று ஒரு கவிதை எழுதி விகடனுக்கு அனுப்பினேன். அவர்கள் போடுகிறார்களா என்று தெரியவில்லை.

    இந்தக் கவிதையில் அவர்கள் யார்? இவர்கள் யார் என்று நன்கு ரூம் போட்டு யோசிக்க வைக்கிறீர்கள். நல்ல வார்த்தை விளையாட்டு. ரசிக்க வைக்கிறது. நன்றி

    ReplyDelete