Monday, January 7, 2013

தெய்வீக விவாதம்

வடிவேலன் ஆறுபடையன்
வேலாயுதன் நான்

புலிவாகனன் சபரிவாசன்
சாந்தரூபன் நான்

தந்தைக்கே கற்பித்த
அறிவில் சிறந்தவன் நான்

அன்னை பிணிக்கு புலிப்பால் கொணர்ந்த
அன்பின் அடிமை நான்

குறத்தியை மணம்புரிந்து
ஜாதிகளை திறந்தவன் நான்

ஜாதிகளே வேண்டாமென
பட்டையும் நாமமும் கலந்து
வந்தவன் நான்
வாவரின் தோழன் நான்

பெண்கள் வாசமே இல்லாதவன் நீ
இருதாரம் கொண்டு
இல்லறத்தில் சிறந்தவன் நான்

இருதாரமெனும் பெண்ணவமதிப்பு வேண்டாமென
இருதாரம் கொண்ட சாஸ்தாவின்
பாவமன்னிப்பு அடையாளமாய்
பிரம்மச்சரிய அவதாரம் கொண்டவன் நான்

கோவிலுக்கு வந்த புஷ்கலையை
உள்ளிழுத்து கொண்ட
காமுகனின் அவதாரம் தானே நீ!!!

கண்டதெற்கெல்லாம் கோபம் கொண்டு
மலைக்கு மேல் கோவணம் அணிந்து
நின்றவன் தானே நீ!!!
 

சூரசம்ஹாரத்திற்கு செந்தூர் வந்து பார்
மக்கள் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை

மகரவிளக்கிற்கு பம்பை அருகிலும் வரவேண்டாம்
கால்வைக்க இடமின்றி
நம்பிக்கை இழந்திட போகிறீர்

பக்தர்களை உன்பக்கம் இழுக்க
சரவணன் தம்பியே சரணம் ஐயப்பா என்று
என் பெயர் தேவை உனக்கு!!

அகந்தை வேண்டாம்
அதை கேட்டேனும்
உன்னிடம் வரட்டுமே என்று தான்!!

நிறுத்துங்கள்!!
நீவீர் எம்மைந்தர் அல்லர்
என அறிக்கை விட்டுவிட்டு
காற்று வாங்கும் என் கோவில்களுக்கு
உங்கள் பக்தர்களை இழுத்திடுவேன்!!

இவைகளை கேட்ட யானைமுகன்
அவனவனுக்கு ரெண்டு பெண்டாட்டி
எனக்கு ஒன்றிற்கே வழியில்லை
பெரிய கோவிலும் இல்லை
கூட்டம் போட்டு சதுர்த்தியில் வணங்குவோரும்
கடலில் என்னை வீசிவிடுகிறார்கள்
என்று கூறும்போதே
வருத்தமிகுதியில் கண்களில் கண்ணீர்!!

1 comment: