கதை எண் - 1
"ஒரே
அழுகாட்சியா இருந்தது. அழுகப் போட்டினே சொல்லலாம்.
என்னோட அப்பா, அம்மா, பாட்டி,
அக்கா எல்லாருமே அழுதுட்டே இருந்தாங்க. நான் உன் அப்பாவோட
தானே கல்யாணம்
முடிஞ்சு கிளம்பினேன்! எல்லாரும் சந்தோசமால்ல இருக்கணும். ஆனா
எல்லாரும் ஒரே அழுக. நான்
கார்ல ஏறிட்டேன். எல்லாரும் அழறதப் பாத்துட்டு எனக்கும்
அழுக வந்துடுச்சு. கார் கிளம்பும் போது,
என் கைல லேசா தண்ணி
பட்டது. திரும்பிப் பாத்தா, நான் அழறதப் பாத்து உங்கப்பா அழுதுட்டு இருக்காரு!", தன் குழந்தையைத் தூங்க
வைக்க இவ்வாறு கதையினைச் சொல்லிக் கொண்டிருந்தாள் லக்ஷ்மி.
___________________________________________________________________
கதை எண் - 2
"நானும்
எவ்வளவோ கல்யாணத்துக்குப் போயிருக்கேன். இந்தப் பொண்ணுங்க கல்யாணம்
முடிஞ்சு மாப்பிள்ளை வீட்டுக்குப் போற நேரம், கையமுயாக் கையமுயான்னு எல்லாரும் அழுதுட்டு இருப்பாங்க. அப்பாவுக்கு அதப் பாக்கும்போதெல்லாம் சிரிப்பா
வரும். உங்க அம்மாவும் அழுதுருவாங்கலோன்னு
நெனச்சேன். நல்ல சிரிச்ச முகமா
அப்பிடியே வந்தாங்க. நீ தான்
ஆட் மேன் அவுட் மாதிரி
அழாம வந்துருக்கே, அழுகையே வரலயான்னு கேட்டேன்.
உங்கம்மா லக்ஷ்மி- 'அஸ்வின், உன் கூட வரதுக்கு
நான் ஏன் அழனும்? அழத் தான் விட்டுருவியா நீ' ன்னு கேட்டாங்க.
எப்படி இருந்தது தெரியுமா?", அன்று பெட்டைம் கதை
சொல்ல அஸ்வின் டர்ன்.
No comments:
Post a Comment