பல்லவி:
சபரிவாசன் நோக்கி பயணம் - பரந்தாமன்
அவனை நெஞ்சில் கொண்டால் துன்பம் தீரும்
மலையேறிப் புகழ்ப்பாடி திருமேனித்
தான் கண்டிட மனம் துள்ளித்துள்ளி
தினம் ஏங்கும் - அவன் முகம் கண்டு
பூரிப்போகும் (சபரிவாசன்)
சரணம் 1:
தென்னை யாவும் போட்டிப் போடும் சண்டைக் கொள்ளும்
தன் தேங்காயை சபரிக்குத் தாரும் - சுவாமிமார் இருமுடியில்
தேங்காய் தான் ஏறிடவே காற்றாய்ப் பாடல்கள் பாடும்
மற்றத் தென்னைகள் சோகத்தில் மூழ்கும் (சபரிவாசன்.. தீரும்)
சரணம் 2:
நெய்யினைத் தேங்காய் சுமக்கும் இருமுடி ஏறும் - அந்த
ஐயனைத் தீண்டிடச் செல்லும்- நெய்யோ
நீ கற்பூர ஆழிக்குத்தான் செல்வாய் எனச் சொல்ல
தேங்காய் கள்ளமாய் சிரிக்கும் (சபரிவாசன்.. தீரும்)
சரணம் 3:
கற்பூர ஆழி சென்றாலும் துயர் இல்லை- உனை
நான் தொட்டு அவன் குளிக்கத் தாரேன் - கற்பூர ஆழியில்
சாம்பலாய்ப் போனாலும் அவன் வாசம் செய்யும் சபரிமலை
அதில் வாசம் செய்யும் என் சாம்பல் (சபரிவாசன்.. தீரும்)
சரணம் 4:
அந்தத் தேங்காய்க்கும் உனைத் தொழவேண்டி எண்ணம்-
நாங்கள் அதையும் கூட்டி வாரோம்
உன் தரிசனம் தாராய் மணிகண்டா!!
ஸ்வாமியே சரணம் அப்பா!!
ஐயப்ப சரணம் அப்பா!
பாடலாய்