அவன்: சார் காபியா? டீயா?
இவன்: காபியே சொல்லிடுங்க சார்
அவன்: ரெண்டு காபி தம்பி
அவன்: ரொம்ப சங்கடமா இருக்கு சார் சில சமயம்
இவன்: என்ன சார்? என்ன ஆச்சு? நீங்க இந்த மாதிரிலாம் சொன்னா எப்படி? சந்தோசமா பாஸிட்டிவா இருந்தா தானே சார் நீங்க.
அவன்: என்ன பண்றது சார். நாம எல்லாருக்கும் அன்பு செஞ்சு நல்லது செஞ்சாலும், எல்லாரும் அப்படி நமக்கு திருப்பி நினைக்கறது இல்லையே. நன்றியும் மன்னிப்பும் சொல்றதுக்கு கூட மனசு இல்ல சார் பலருக்கு.
இவன்: புரியுது சார்
அவன்: நாம எல்லார் மேலயும் காட்டுற அன்பு நமக்கு திருப்பி கெடைக்கலனா ஒரு சோகம் வருது பாருங்க. மன வேதன சார்.
இவன்: காபி எடுத்துக்குங்க சார்.
அவன்: நான் எதையும் எதிர்பார்த்து செய்யல. ஆனா அப்பப்போ மனசு கேக்குது சார்.
இவன்: ஹ்ம்ம்
அவன்: வெறுப்பு உணர்ச்சி வருது சார்.
இவன்: உங்கள பார்த்து பாசிட்டிவிட்டி தெரிஞ்சிக்கிட்டேன் சார். உங்களுக்கு இந்த மனநிலை இப்படி வந்துருக்க வேண்டாம். நான் ஒன்னு சொல்லட்டா சார்.
அவன்: சொல்லுங்க சார்
இவன்: இந்த அன்புக்கும் நியூட்டன் மூன்றாம் விதி மாதிரி இக்குவல் அண்ட் ஆப்போசிட் ரியாக்சன் கண்டிப்பா இருக்கு சார். கர்மான்னும் சொல்லலாம். தமிழ்லயே அழகா சொல்லிருக்காங்க தினை விதைச்சா தினை தான் சார்.
அவன்: எப்போ பா?
இவன்: கிடைக்கும் சார் நியூட்டன் காலத்த வெச்சி சொல்லலையே. இக்குவல் என்ன சார்? அதுக்கு மேலையே கிடைக்கும் அன்பு, காதல்ல எல்லாம்.
அவன்: பேச்சுக்கு நல்லா இருக்கு சார்.
இவன்: சார் உங்களுக்கு திருப்பி வரணும்னு இல்ல சார். உங்களப் பாத்து நாலு பேரு ஏதாவது செய்யறான் சார். நான் அத நேர்லப் பாக்குறேன். அது கூட ஒரு ரியாக்சன். எங்கயோ படிச்ச ஞாபகம் சார். எதோ ஒரு மரம் வேர் விடறதுக்கே மாசங்கள் ஆகுமாம்.
அவன்: சரி. நீ சொல்றதே சரின்னு வச்சுக்குவோம். வஞ்சம் புடிச்சவன், ஏமாத்தி வாழறவன் எல்லாம் நல்லா வசதியா இருக்கானே.
இவன்: மாறும் சார். இங்கத் தொடங்குற அன்பும் நல்ல எண்ணங்களும் பரவும் சார். அன்பு நிறைஞ்சிட்டா வஞ்சம் அழிஞ்சிடும். வஞ்சம் இன்னொரு பெரிய வஞ்சத்தால அழியறதோட அன்புனால இல்லாமப் போகட்டும் சார்.
அவன்: இந்த காபி மாதிரி புத்துணர்ச்சியா இருக்குப்பா நீ பேசுறது
இவன்: சார் உங்களுக்குப் போய்
அவன்: இக்குவல் ரியாக்சன் உணர்றேன் உங்க பேச்சுல.
இவன்: சார்!

No comments:
Post a Comment