Sunday, April 7, 2013

இல்லாமை இல்லாமை ஆகட்டும்

கைகட்டி கூனிட்டு நின்ற  காலம் போயிற்று
பணம் படைத்தவர் பாடல்களுக்கு பக்கவாத்தியங்களாய்
இல்லாதவர்கள் அசைந்துகொடுக்கும் காலமிது

தேவைகள் தானோ மனிதனை
மத்தளமாகவும் ஜால்ராவாகவும் ஆக்குகிறது
இரு வேடதாரிகள் பலர் இங்கே
சிறந்த நடிகருக்கும் சிறந்தவர் இங்கே

பணமோ இங்கு கச்சேரி
ஜால்ரா வயலின் ஆக நினைக்கிறது
வயலின் வாய்பாட்டு பாட வளைந்து கொடுக்கிறது
இல்லாதவன் பக்கவாத்தியம்,
 பாடகன் ஆகும் வரை.



பணக்கச்சேரி பாடலோடு முடியட்டும்
பக்கவாத்தியங்கள் வாய்பாட்டு பாடட்டும்
இல்லாதவரே இல்லாமல் போகட்டும்
இல்லாமை இல்லாமை ஆகட்டும்

1 comment:

  1. இல்லாமை இல்லாமை ஆகட்டும்

    ReplyDelete