Saturday, November 29, 2014

வைத்தி வீட்டு மணி


மூர்த்தியும் கணேசனும் இறச்சகுளம் தெற்கு தெருவை  சேர்ந்த சகோதரர்கள். மூர்த்தி இறச்சகுளம் அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு. கணேசன் நான்காம் வகுப்பு. பள்ளி முடிந்து வீடுத் திரும்பிக் கொண்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தி விடுமுறை வேறு. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை. இருவரும் வகுப்பு முடிந்து வீடுத் திரும்பிக்கொண்டிருந்தனர்.

"மூர்த்தி அண்ணே! இந்த வருஷம் பிள்ளையார் சதுர்த்திக்கு ஒரு பத்து கொழுக்கட்டையாவுது திங்கனும்னே. தாணு வாத்தியார் வீட்லதான் கோவிலுக்கு செய்யராங்களாம்."
"ஃபங்க் வாத்தியார் வீட்லையா? நான் வர மாட்டேன்போ. காத திருகிவிட்டுருவாறு. கணக்குல நூத்துக்கு நாப்பது லே. "
"கோயில்ல பிரசாதமாத் தருவாங்க. வீட்டுக்கு போக வேண்டாம், பட்டருக்கு மூக்குப் பொடி கொடுத்து வாங்கிடலாம்னே."
"சரி லே கணேஷா!"
"லேய் கணேஷா! அங்கப் பாரு லே ஒரு நாய்க்குட்டி ரோட்டுல ஓடிக்கிட்டிருக்கு."
"ஆமாம் அண்ணே. அழகா இருக்கு."
"ஆமாம் லே."
"அண்ணே நம்ம இந்த நாய்க்குட்டிய வீட்டுக்கு  எடுத்துட்டு போய் வளப்போம் ணே."
"போ லே. அம்மே ஏசுவாக."
"நீ போ அண்ணே. நான் பாத்துட்டு வரேன்."

மூர்த்தி  அங்கிருந்து கிளம்பினான். கணேசன் நாய்க்குட்டியை ரசித்தவாறு சாலையிலேயே இருந்தான். தனது ஒரு கண்ணை மூடி  இரு கைகளையும் மடித்து கேமராவைப் போல் வைத்து புகைப்படம் எடுத்தான்,

"எவ்வளவு அழகா இருக்க! எங்க வீட்டுக்கு வரியா? நாளைக்கு கொழுக்கட்டைலாம் இருக்கு.", என்று நாய்க்குட்டியைப் பார்த்து கேட்டான்.

நாய்க்குட்டி பள்ளத்தில் தேங்கி இருக்கும் நீரில் அதன் முகம் தெரிவதைப் பார்த்து அதனை சுற்றியும் சாடியும் கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு மிதிவண்டி வேகமாக வந்து நாய்க்குட்டியின் அருகே இடிப்பது போல் சென்றது. ஒரு நொடி கணேசன் அதிர்ந்து போனான்.

வேகமாக நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டான்.
"ஏத்திருப்பான். நீ என் கூட வந்துடு. வீட்டுல நான் இருக்கேன். அண்ணன் இருக்கான். அம்மை அப்பாலாம்  இருக்காங்க. சரியா?", என்று கூறி வீட்டை நோக்கி நடந்தான்.

வெளியில் மூர்த்தி நின்று கொண்டிருந்தான்.
"லே! தூக்கிட்டு வந்துட்டியா. அடிதாமுலே உனக்கு."
வீட்டிற்குள் எடுத்து சென்று ஒரு ஓரமாக நாய்க்குட்டியை அமர வைத்தான்.
"அம்மே! அம்மே! நம்ம வீட்டுக்கு நாய்க்குட்டியக் கூட்டிவந்துருக்கேன்."
"என்ன லே சொல்லுத? அப்பா அடிபோடுவாரு. எடுத்துட்டு வெளில விட்டுடு."
"இல்ல அம்மே!"
"சொன்னாக் கேக்கமாட்டியா?", என்று அடிப்பது போல் வேகமாக வந்தார்.
"வேண்டாம் மோ.", என அழத் துவங்கினான்.
"அழாதே. அப்பா வரட்டும். சரின்னு சொன்னாருன்னா இருக்கட்டும்.",என்று கூறிவிட்டு சென்றாள்.

அழுகையும் சிரிப்பும் சேர்ந்து கணேசன் முகம் மாறியது. வேகமாக வெளியே ஓடி வந்தான்.
"மூர்த்தி அண்ணே! அம்மை சரின்னு சொல்லிட்டா. அப்பா சரின்னா சரியாமாம்?"
"அதோ அப்பா வராருலே. போய் கேளு."
வேகமாக தெரு முனைக்கு ஓடினான்.
"அப்பா!"
"மக்கா! லீவு விட்டுட்டாங்களா?"
"விட்டுட்டாங்கப்பா..!"
"சொல்லு மக்கா."
"ரோட்டுல ஒரு நாய்க்குட்டி அழகா இருந்துச்சுப்பா.நான் எடுத்துட்டு வந்துட்டேன். நம்ம கூட இருக்கட்டும் பா."
"சரி மக்கா! இருக்கட்டும்."

வீட்டுக்கு வந்த தந்தையிடம் நாய்க்குட்டியை தூக்கி வந்து காண்பித்தான்.
"அழகா இருக்கான் மக்கா!"
"பேர் வைப்போமா பா?", என்றான் மூர்த்தி.
"என்ன பெயர் வைக்கலாம்?"
கணேசன் ஏதோ சொல்ல வாயெடுக்க, "டோனி, ஜிம்மி இது மாதிரி வைப்போம் பா ", என்றான் மூர்த்தி.
"வேதகாரங்க பேர் எதுக்கு? அதெல்லாம் வேண்டாம் மக்களே."
"மணின்னு வைப்போம் பா.", என்றான் கணேசன்.
"நல்லா இருக்கப்போ. அப்படியே வெச்சிடுவோம்."

நாய்க்குட்டியைத் தூக்கிக் கையில் வைத்து தெருவினை சுற்றி வந்தான் கணேசன் .
"மணி! எங்க வீட்டு நாய்.", என்று காண்பவரிடம் எல்லாம் கூறினான்.
சதுர்த்தி மாலை இரண்டு கொழுக்கட்டைகளை அதற்கு கொடுத்துவிட்டு திருநீரும் பூசிவிட்டான்.

மணிக்கு உணவு வைப்பதை மூர்த்தியின் தந்தை வைத்தியலிங்கம் வழக்கமாக கொண்டு இருந்தார்.
மணியைப் பார்த்து, "மக்களே!", என்று சொன்னால் வாலாட்டத் தொடங்கும் மணி. மணியின் மீது வைத்தி அதிக அன்பு காட்டினார்.
மணி வளரத் தொடங்கினான்.

குட்டியாய் இருந்த அழகு இப்போதில்லை என்று கணேசன் மணியோடு விளையாடுவதையும் கொஞ்சுவதையும் குறைத்துக்கொண்டான்.
மணி, மூர்த்தியும் கணேசனும் பள்ளிக்கு செல்லும் போது அவர்களுடன் பள்ளிக்கூட வாசல் வரை சென்று திரும்பும். வைத்தி வரும் நேரமும் சரியாக பேருந்து நிறுத்தம் சென்று விடும். பிஸ்கட் கொடுத்து மணியிடம் பேசிக்கொண்டே வருவார். அவரது மனைவி கடைக்கு செல்கையிலும் கோவிலுக்கு செல்கையிலும் அவருடனே சென்று வாசலில் அமர்ந்து கொள்ளும்.

இவ்வாறே நாட்கள் சென்றன. கணேசனுக்கு ஏழாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறை வந்தது. அண்ணனும் தம்பியும் வீட்டிலேயே இருந்தனர்.
வைத்தி வேலைக்குக் கிளம்பினார். மணி அவருடனே பேருந்து நிறுத்தம் வரை சென்றது.
"மக்கா! சாயந்தரம் வந்துடு. அப்பா பிஸ்கட் வாங்கிட்டு வாரேன்", என்று சொல்லிவிட்டு பேருந்தில் ஏறினார்.
பேருந்து பூதத்தான் கோவில் தாண்டும் வரை அங்கு நின்றுவிட்டு, மணியும் கிளம்பினான்.

மாலை, மாட்டுக்கு கழனித்தண்ணி வாங்க செண்பகம் வந்தாள்.
"செண்பகம், கொல்லையில கழனிக் குடம் கெடக்கு. எடுத்துக்கம்மோ" , என்று டீ.வி பார்த்துக்கொண்டே கூறினாள் சிவகாமி.
செண்பகம் சென்ற நேரம், மணி அந்த குடத்தில் தன் வாயினை விட்டது. சிறிய வாய்க் கொண்ட எவர்சில்வர் குடம். மணியின் தலை குடத்தில் மாட்டிக்கொண்டது. செண்பகம் மணியின் முகத்தை குடத்தில் இருந்து எடுக்க முயன்றாள். முடியவில்லை.

"எக்கா! எக்கா! மணி தல கொடத்துல மாட்டிக்கிட்டு. எடுக்க முடியுல.", என்று கூறினாள்.
கணேசன் வேகமாக கொல்லைக்கு ஓடினான்.
"மணி!", என்று கூறிவிட்டு அழத் தொடங்கினான்.
நேரம் செல்ல  மணியும் அழத் தொடங்கினான்.
கணேசன் குடத்தை இறுக்கிப் பிடிக்க, மூர்த்தி மணியை குடத்திலிருந்து எடுக்க முயன்றான். முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.
மணி, வைத்தியலிங்கத்தைக் கூட்டி வர பேருந்து நிறுத்தம் செல்லும் நேரம் வந்தது. மணி ஊளையிட்டு அழுதவாறு இருந்தான். குடத்தினை அறுக்கும் முயற்சியைத் தொடங்கினான் மூர்த்தி. பலனில்லை. மரம் அறுக்கும் சாஸ்தான் வெளியூர் சென்றாயிற்று. அவர் இருந்தால் மெசின் வைத்து குடத்தை எடுத்திருப்பார்.

வைத்தி பேருந்து நிறுத்தம் அடைந்தார். மணி அங்கு வரவில்லை. அருகில் இருந்த பழக்கடையில் மணி வந்தானா என விசாரித்தார். வராததை அறிந்து கொண்டு வீட்டிற்குச் சென்றார்.

தந்தை வந்ததைக் கண்டு கணேஷன் வேகமாக ஓடினான்.
"யப்போ! மணி தல கழனிக்கொடத்துல மாட்டிக்கிட்டு போ. ரெண்டு மணி நேரம் ஆகுது. எடுக்க முடியல போ. அழுதிட்டே இருக்கான்.", என்றான்,
வேகமாக கொல்லைக்கு ஓடினான்.
மணி அழுதுக் கொண்டிருந்தது.
"மக்கா!", என்று கூப்பிட்டார் வைத்தி.
மணி வைத்தியின் குரலை கேட்டு வாலாட்டத் துவங்கினான்.
"அப்பா வந்துட்டேன்லப்போ, அழக்கூடாது."
அப்போதே அழுகையை நிறுத்தியது மணி.
குடத்தினை அறுக்க முயற்ச்சித்தார் வைத்தி. பலனில்லை. பல்வேறு முயற்சிகள் எடுத்தார். வலியில் மணி அழுதது. முதுகினைத் தடவிக் கொடுத்தே இருந்தான். அழுகை குரலும் குறைந்தது.
"அழக்கூட சக்தி இல்லையே போ! மூர்த்தி இங்க வா.", என்று மூர்த்தியை அழைத்தார்,

மூர்த்தியினை குடத்தை இழுத்துப் பிடிக்க கூறி விட்டு, மணியை மறுமுனையிலிருந்து பிடித்து இழுத்தான். மணி வலியில் கத்தியது. இருப்பினும் பிடித்து வெளியில் எடுத்தான். சுவாசிக்க முடியாமல் திணறியது மணி.

மடியில் அமரவைத்து தடவிக் கொடுத்தார் வைத்தி. வாலாட்டியபடியே இருந்தது மணி. சுவாசிக்கத் தடுமாறியது மணி. தான் வாங்கிய பிஸ்கட்டை எடுத்து வருமாறு கணேசனிடம் கூறினார்.

கணேசன் வேகமாக சென்று பிஸ்கட் எடுத்து வர சென்றான். அவன் திரும்பி வரும்போது மணியின் வாலாட்டல் நின்றிருந்தது.

"மணி! மணி! மக்களே! அப்பா!! நீங்க மக்கான்னு கூப்பிடுங்க . அவன் வாலாட்டுவான்.", என்று கூறி அழ ஆரம்பித்தான்.
"இனி ஆட்ட மாட்டான்போ. அவ்வளவுதான். இனி தாத்தா, பாட்டி பாத்துக்குவாங்க!", என்றார் வைத்தி.

மணியை பழையாற்றங்கரையில் சென்று புதைத்து வரும் வரை ஜன்னல் வழியாக வீதியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் கணேசன்.

Tuesday, October 7, 2014

தனுமதி

                           காலை ஐந்தரை மணிக்கு வீட்டு வாயிலில் கோலமிட்டு கொண்டிருந்தாள் பாக்கியம். வெங்கிடு வீட்டினுள் விபூதிப் பெட்டியைத் தேடியவாறு இருந்தார்.

"பாக்கியம். இந்த விபூதி டப்பா எங்கடி", கேட்டவாறு வெளியில் வந்தார் வெங்கிடு.
"ஃபிரிட்ஜ் மேல பாருங்கோ"
வாயிலில் இருந்த செய்தித்தாளை எடுத்து உள்ளே நுழைந்தார் வெங்கிடு.
நெற்றியில் பட்டை இட்டுவிட்டு செய்தித்தாளை வாசிக்கத் துவங்கினார்.

"ஒன்பது மணிக்கு டி.எல்.எஃப். ல இருக்கணும்  . இப்படித் தூங்கிண்டு இருக்காப் பாருங்கோ. ஷங்கரும் நைட் டியூட்டி முடிச்சிட்டு வந்துட்டான். ஆறரை ஆறது."
"என்னப் போல இருக்கா. ஆறுக்கு முகூர்தத்த வெச்சிண்டு அஞ்சரைக்கு எழுந்தேனே நம்ம கல்யாணத்துல.", சொல்லி ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தார் வெங்கிடு.
"சிரிப்பப் பாரு. தனுமதி!!! எழுந்துடு டி. மணி ஆறரையாச்சுப் பார். தனுமதி!!"
"எழுந்துக்கறேன் மா.", தூக்கம் கலந்த குரலில் கூறி எழுந்தாள் தனுமதி.

காலை உணவை முடித்து வெங்கிடுவும் தனுமதியும் அவரவர் வண்டியில் அலுவலகம் புறப்பட்டனர். ஷங்கர் தூங்கச் சென்றான். பாக்கியம் தோசைக்கு மாவரைக்க  ஆயத்தமானாள். மாவரைத்துவிட்டு செய்தித்தாளை படிக்கத் துவங்கினாள் பாக்கியம். நாலாவது பக்கத்தில் அவள் படித்த செய்தி அவளை பதறச் செய்தது. 'டெல்லியில் ஒரு சாஃப்ட்வேர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணைக் கடத்ததிய சதிகார கும்பல், அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து அளித்து பாலியல் கொடுமை செய்து விடுவித்துள்ளனர். அதோடு விட்டு விடாத  சதிகார கும்பல், பெண்ணின்  தந்தையிடம் சி.டியைக் காண்பித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இத்தகவல் அறிந்தப் பெண் குடும்பத்தோடு தற்கொலை. போலீசார் சதிகார கும்பலைத் தேடி வருகின்றனர்.

படித்த  மாத்திரத்தில் பாக்கியம், தன் மகளை கைபேசியில் அழைத்து, "தனுமா! ஆபிஸ் போயிட்டியா?", என ஆரம்பித்தாள்.
"என்னம்மா இது? வித்தியாசமா இருக்கு? கரண்ட் இல்லையா? சீரியல் பாக்கலையா?"
"ஆபிஸ் போயிட்டேலியா?"
"ஒரு மணி நேரம் ஆறது வந்து சேர்ந்து."
"திரும்பி வரச்ச பாத்து வாம்மா.", என சொல்லிவிட்டு   ஃபோனை வைத்தார்.

ஒரு மணி அளவில் திரும்ப தன் மகளை அழைத்தார். மனதில்  ஏதோ ஒரு நெருடல் பாக்கியத்திற்கு.

மாலை நான்கு மணிக்கு தனுமதி கைபேசியிலிருந்து. தினமும் ஆறு மணிக்கெல்லாம் வீட்டினை அடையும் தனுமதி அன்று வீட்டுக்கு வர எட்டு மணி வரை ஆகும் எனக்கூறி அழைப்பினைத்  துண்டித்தாள்.

"சாயிங்காலம் ஆறு மணி வரைக்கும் வேலை செய்யாதத, இப்ப ஒக்காந்து செய்யனுமா? ஏன் தான் இப்பிடி பண்றாளோ?", என தன மகனிடம் முனங்கினாள் பாக்கியம்.
"என்ன மாதிரி நைட் டியூட்டி போட்டா இன்னும் டென்சன் ஆவ போலியே?", என்றான் ஷங்கர்.
"பொன் இல்லையா டா?"
"பாரதி கண்ட புதுமைப் பெண்கள். இந்த ஜெனரேசன் எல்லாருமே. பயப்படாதே. வந்துடுவா."
"பயம்லாம் இல்லை."
"அப்போ வேற என்னன்னு பேர் வைக்கலாம்."
"பேசாமக் குளிக்கப் போடா, ராக்கோழி. இல்லை.ஆந்தை."
"ஆந்தையெல்லம் குளிக்குமா?"
" போடா."

ஷங்கர் குளிக்க சென்ற நேரம் வெங்கிடு வீடுத் திரும்பினார்.
"என்னடி. ஆறடிச்சிருத்து. தனுமதி இன்னும் வரலையா."
"இன்னிக்கி லேட் ஆகுமாம்."
"ஃபோன் பண்ணியா? கடைசியா நாலு மணிக்கு பண்ணினா. லேட் ஆகும்னு சொன்னா. அதுக்கப்பறம் நான் ஃபோன் பண்ணலை."
 "சரி. இப்ப நான் பண்றேன்."
"ஃபோன் சுவிட்ச் ஆஃப்னு வருது. செரி வரட்டும்."

ஏழு மணிக்கு ஷங்கர் வேலைக்கு புறப்பட்டான்.

ஷங்கருக்கு டைடல் பார்க்கில் வேலை. ஷங்கர் ஒன்பதரை மணியளவில் வெளியே வந்தான். அவனது நண்பர்கள் அஷோக்கும், மார்டினும் அவரவர் விரல்களில் கோல்ட் ஃப்ளேக்கை பொருத்திக் கொண்டனர்.

ஷங்கருக்கு கைபேசியில் அழைப்பு வந்தது.
"அஷோக். ஒரு நிமிஷம்."
"ஹலோ! அம்மா"
"ஷங்கர்! இன்னும் தனு வரல டா. பயமா இருக்கு டா. அவ ஃபோன் வேற சுவிட்ச் ஆஃப் ல இருக்கு. பயமா இருக்கு டா."
"பயப்படாத மா வந்துடுவா.நான் அவ ஃபிரண்ட் கிட்ட கேக்கறேன்."
"சீக்கரம் டா. பயமா இருக்கு."

ஷங்கர் அழைப்பைத் துண்டித்து தனுமதியின் தோழி நித்யாவை அழைத்தான்,
"ஹலோ! நித்யா."
"ஹலோ! அண்ணா எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் மா. தனு இன்னும் வீட்டுக்கு வரல, எப்போ கிளம்பினா ஆஃபிஸ்ல இருந்து?"
"கிளையன்ட் காலா இருக்கும் ணா. நான் இன்னிக்கி ஆஃபிஸ் போல. இருங்க நான் இன்னொரு டீம் மேட் கிட்ட பேசறேன். ஹோல்ட் ல போடறேன்."
"ஓகே."

"அண்ணா. தனு ஏழேகாலுக்கெல்லாம் கிளம்பிட்டாளாம். ஒரு வேல டிராபிக்ல மாட்டிட்டு இருப்பாளோ? அப்படி தான் அண்ணா இருக்கும். பயப்பட வேண்டாம்."
"தேங்க்ஸ் மா."

ஷங்கரின் நண்பர்கள் ஏதோ பிரச்சனை என அறிந்து அவன் அருகில் வந்தனர்.
"ஷங்கர். எதுனா பிரச்சனையா?"
"மார்டின். தனுமதி இன்னும் வீட்டுக்கு வரல. ரெண்டு மணி நேரம் மேல ஆச்சு ஆஃபிஸ்ல இருந்து அவ கியம்பி, இன்னும் வரல."
"அஷோக். மார்டினும் நானும் அவ ஆஃபிஸ் ரூட்ல போய் பாக்கறோம். டிராபிக் ஏதாவதானு. நீ வீட்டுக்கு போ. ரெண்டு பேரும் வயசானவங்க."
"செரி."

அஷோக்கும் மார்டினும் டி.எல்.எஃப்க்கு புறப்பட்டனர். ஷங்கர் அவன் வீட்டுக்குப்  புறப்பட்டான்.



"நான் வேணும்னா அவ பங்கஜம் ஆத்துக்குப் போயிருக்காலானு பாக்கட்டா. வர வழி  அப்பிடியேப் போயிருக்கலாம்."
"பண்ணிப்பாரு.", சோகமாக சொன்னார் வெங்கிடு.
"ஹலோ! பங்கஜம்! எப்பிடி இருக்காய்?"
"நல்லா இருக்கேன் பாக்கியம்."
"ஒன்னும் இல்லை. தனுமதி இன்னிக்கி லேட்டாகும். பங்கஜம் அத்தை ஆத்துக்கு போறேன்னு சொன்னா. வந்தாளா?"
"இன்னும் வரலைடி. மணி பத்தரை ஆச்சு."
"தனுமதி! வாடி வா! அத்தையாத்துக்கு போறேன்னு சொன்னையே வந்துட்டாடி! நான் வெச்சிடுறேன்."

"அங்கையும் போல ஷங்கரப்பா. பயமா இருக்கு. பேப்பர்ல வேற கன்னாபின்னான்னு நியூஸா இருக்கு. பயமா இருக்கு அண்ணா."
"நாலாவது பக்கத்த சொல்றியா? தனுமதிக்கு அப்பிடிலாம் நடக்காது."
ஷங்கர் வீட்டினை அடைந்தான். அன்று சாதாரண நாட்களை விட டிராபிக் குறைவாகவே இருந்தது. தன தங்கையை பற்றி எண்ணியவாறே உள்ளே நுழைந்தான்.

"ஏதாவது தெரிஞ்சுதாடா?"
"பாத்துண்டு இருக்கேன் மா."
"என்னடா? எங்க இருக்கான்னு தெரியலையா?"
"அழாதே மா. அழாதே."
"அழாம எப்பிடி டா. அவளுக்கு எதுவும் ஆகாது. ஆகாது இல்லையாண்ணா?"

"மச்சான் அங்க என்னடா இவ்வளோ கூட்டம்?"
"தெரியல டா. விசாரிப்போம்."
அஷோக் வண்டியை நிறுத்திவிட்டு,
"என்னங்க கூட்டம்?"
"ஆக்சிடென்ட். இப்ப தான் ஆம்புலன்ஸ்ல கிளியர் பண்ணாங்க. ஸ்பாட் அவுட். பாவம் சின்னப் பொண்ணு."
"என்ன வண்டி?"
"ப்ளாக் ஸ்கூட்டி."
"என்னங்க சொல்றீங்க? என்ன கலர் டிரெஸ்?"
"ப்ளூ சுடிதார், வெள்ள  துப்பட்டா."
"தேங்க்சுங்க."
"மார்டின் ஆக்சிடெண்ட். பொண்ணு. கருப்பு ஸ்கூட்டி. பயமா இருக்கு டா. ஷங்கர் கிட்ட கலர் கன்பர்ம் பண்ணனும்."
"ஃபோன் பண்ணுடா."

அஷோக் அவனை கைபேசியில் அழைத்தான்.
"அசோக். பாத்துட்டியா?"
"தனு என்ன கலர் டிரஸ் போட்டுருந்தா."
"மஞ்சள் சுடிதார். பிரவுன் துப்பட்டா."
"தேங்க் காட்."
"ஏன் டா?"
"தெரிஞ்சிக்கிட்டா தேட ஈசியா இருக்கும்னு கேட்டேன். கிடச்சிடுவா"
"அந்த நம்பிக்கைல தான் நான் இருக்கேன்."
"மச்சி. போலிஸ் போவோமா?
"இன்னும் கொஞ்ச நேரம் பாப்போம் டா. அப்பா அம்மா போலிஸ்னா பயப்படுறாங்க,"
"மார்டின் பிரெண்ட் சிவா மூலியமா ட்ரை பண்ணுவோம் டா."
"செரி நீ பேசு."
"சரி டா. நாங்களும் வீட்டுக்கு வரோம்."
"ஹ்ம்ம்."

வண்டியில் வந்துக் கொண்டிருக்கும்போது
"சிவா. மார்டின் டா."
"சொல்லு மார்டின்."
"என் பிரண்டோட சிஸ்டர் மிஸ்ஸிங் டா. சாயிங்காலம் ஏழு மணிக்கெல்லாம் ஆபிஸ்ல இருந்து கிளம்பிட்டாங்க. இன்னும் வீட்டுக்கு வரல."
"போலிஸ் கம்ப்ளைன்ட் குடுத்தாச்சா."
"இல்லடா. பொண்ணு மேட்டர் பயப்படுறாங்க."
"போலிஸ்கிட்ட போறது பூச்சாண்டிக் கிட்ட போறமாதிரி ஆயிடுச்சுல. சேரி டிடைல்ஸ் சொல்லு."
தனுமதியின் விவரங்களை மார்டின் கூறினான்.
"நான் சொல்லி வைக்கறேன். பீமேல் டிராபிக்கிங்க் குரூப் ஒன்னு இப்போ ரொம்ப இம்சைய குடுத்துட்டு இருக்கு. எதுக்கும் தயாரா இருங்க."
"ப்ளீஸ் டா."

ஷங்கர் வீட்டினை அடைந்தனர். சிறிது நேரம் கழித்து வெங்கிடு ஃபோனிற்கு ஒரு அழைப்பு வந்தது.

"அப்பா! நான் தனுமதி."
"சொல்லும்மா. பாக்கியம் தனு."
எல்லோர் முகத்திலும் ஒரு பூரிப்பு.
"பிரெண்ட விட பல்லாவரம் வந்தேன்பா, பாவம் ஹாண்டிகப்ட். திரும்பி வரச்ச திரிசூலம் கிட்ட ஆக்சிடன்ட் ஆயிடுத்து. சின்ன அடி. ஹாஸ்பிடல்ல இருந்து தான் பேசுறேன். ஆட்டோல வந்துடறேன் பா."
"பாத்து வாம்மா."

"நான் சொன்னேன்லியா டி. என்னமோ ஏதோன்னு பயப்படாதேன்னு. பாவம் அடிப்பட்டுருக்குப்போல."
அரைமணிநேரத்தில் தனுமதி வீட்டினை அடைந்தாள்.
அவள் அம்மாவை கட்டி அணைத்தாள்.
"என்னடி இவ்வளவு ரத்தம் சட்டை எல்லாம்?"
"இல்ல அம்மா. எனக்கு அடி சின்னதுதான். இது பக்கத்துல இன்னொரு வண்டில வந்தவாளுக்கும்."
"அம்மா! அவளுக்கு அப்பவே ஒரு கண்ணாடிய வாங்கிக் கொடுன்னேன். கேட்டியா?"
"போடா ஆந்தை.", என்றாள்  சிரித்தவாறே பாக்கியம்.
"வண்டி. ஹாஸ்பிடல் வாசல்ல வெச்சிருக்கேன். ரிப்பேர் பண்ணி எடுத்துண்டு வாடா ப்ளீஸ்."
"சரி டி. பப்ளிமாஸ்."

பத்து நிமிடங்கள் கழித்து,
"மார்டின் அந்தப் பொண்ணு எந்த கலர் துப்பட்டான்னு சொன்ன?"
"சிவா டேய். சினிமா போலிசு. பிரவுன். கெடைச்சிட்டா. திரிசூலம் பக்கத்துல சின்ன ஆக்சிடெண்ட். பெரிய அடியெல்லாம் இல்ல."
"குட். சரி மச்சான். சன்டே பாக்கலாம்."

ஒன்றரை மணிநேரங்களுக்கு முன்,

"ஏய். வசமா மாட்டினியா? செமையா இருக்காடா. உரிச்சிட வேண்டியது தான். எப்படியும் ஆறுல இருந்து எட்டு வரைக்கும் தேறும்."
"என்ன விட்டுடுங்கோ?"
"அய்யோ ஐயரு. மச்சி இது வரைக்கும் எந்தப் பாப்பாத்தியையும் செஞ்சதே இல்லடா. இன்னிக்கி சாப்பிடறேன் டா இந்தத் தயிர் சாதத்த."
"வேண்டாம். வேண்டாம்."
"மச்சி வாயக் கட்டுடா. இம்சையா இருக்குது. முத்தம் குடுக்கலாம்னு வாயக் கொண்டுப்போன வேணாம் வேணாங்குது. என்ன! முத்தம் குடுக்க முடியாது. அதுவா முக்கியம்?"
 வாயைத் துணியால் மூட வந்தவனை உடைந்த பாட்டிலால் நெஞ்சினில் குத்தினாள் தனுமதி.
"எவளோ நேரம்டா உனக்கு துணியக் கட்டின்னு இருக்கியா இல்ல பாப்பாத்தியத் தடவிட்டு இருக்கியா? அடிப்பாவிக் குத்திட்டியா?"
அங்கிருந்து ஓடத் தொடங்கினாள் தனுமதி.
"ஓத்தா! ஓடுற! சாவு தாண்டி இன்னிக்கி உனக்கு." பின்தொடர்ந்தவாறு ஓடினான்.
தண்டவாளத்தைத் தாண்டி ஓடிய தனுமதியைத் துரத்தினான். அப்போது தண்டவாளத்தில் வந்த ரயில் அவனைத் தூக்கி அடித்தது.

தனுமதி அங்கிருந்த கல்குவிப்பில் வேண்டுமென்றே விழுந்தாள். வண்டியின் கண்ணாடிப் பகுதியினை உடைத்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றாள்.

"சார். போலிஸ் ஸ்டேசனா. திரிசூலம் கிரௌண்ட் கிட்டயும் தண்டவாளத்துக்கு கிட்டையும் ரெண்டு பேரு செத்துக் கிடக்குறானுங்க.", சிவாவிற்கு அழைப்பு வந்தது. அங்கு விரைந்தான்,

"சார். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் நடந்துருக்கணும். ஒடஞ்ச பாட்டிலாலக் குத்திருக்காங்க."
"பாய். இவன் டிராபிக்கிங்க் கேசு சீனு இல்ல."
"அல்லாஹ்! ஆமான் தம்பி. சாவட்டும். அப்போ தண்டவாளத்துல இருக்கறவன் ரவியா இருக்கணும். மூஞ்சு அடையாலமேத் தெரியலே,"
"அங்க என்ன துணி?"
"துப்பட்டா மாறி தெரியுதுங்க. ஒரே ரத்த கர."
"சால்வையா இருக்கும் பசீர் பாய்."

பிரவுன் கலர் துப்பட்டாவைப் பார்த்தவுடன் அவனுக்கு மார்டின் சொன்னது மனதில் வந்தது. அந்தப் பெண்ணிற்கு என்ன ஆனது என்ற பதற்றத்தில் உடனே அழைத்தான்.
"மார்டின் அந்தப் பொண்ணு எந்த கலர் துப்பட்டான்னு சொன்ன?"
"சிவா டேய். சினிமா போலிசு. பிரவுன். கெடைச்சிட்டா. திரிசூலம் பக்கத்துல சின்ன ஆக்சிடெண்ட். பெரிய அடியெல்லாம் இல்ல."
"குட். சரி மச்சான். சன்டே பாக்கலாம்."
அங்கு எப்படி இவர்கள் இறந்திருக்கக் கூடும் என எண்ணிப் பார்த்தான். நிஜத்தில் நடந்தது கண் முன்னே ஓடியது.
"பசீர் பாய் அவன் இவன குத்திட்டு ஓடிருப்பான். ஓடும்போது ரயில் மோதிருக்கும்."
"நானும் அத தான் தம்பி நெனைச்சேன்."

இரண்டு நாட்களுக்குப பிறகு, தனுமதி அலுவலகம் செல்லத் தயாரானாள். சமையல் அறை சென்று மிளகாய் பொடியை  ஒரு காகிதத்தில் மடித்து ஹேண்ட்பேகில் போட்டுக்கொண்டாள்.  குளியலறை சென்று அவள் அண்ணனின் பிளேட் ஒன்றையும் எடுத்துக் கொண்டாள்.

கிளம்பும்போது,
"தனும்மா! செல்லுல சார்ஜ் இருக்குலடி?"
"இருக்கும்மா."
"எல்லாம் எடுத்து வெச்சிண்டு இருக்காய்லியா?"
"எடுத்துண்டேன் மா."
"பத்தரமாப் போயிட்டு வாடி."
ரிப்பேர் செய்து வீடு வந்த ஸ்கூட்டரில் புறப்பட்டாள் தனுமதி.  அதே மஞ்சள் சுடிதார். விழும்பில் உத்துப்பார்த்தால் தெரியும்படி ரத்தக் கரை.

Monday, September 8, 2014

சபரிவாசன் நோக்கி எங்கள் பயணம்


பல்லவி:

சபரிவாசன் நோக்கி பயணம் - பரந்தாமன்
அவனை நெஞ்சில் கொண்டால் துன்பம் தீரும்
மலையேறிப் புகழ்ப்பாடி திருமேனித்
தான் கண்டிட மனம் துள்ளித்துள்ளி
தினம் ஏங்கும் - அவன் முகம் கண்டு
பூரிப்போகும் (சபரிவாசன்)



சரணம் 1:

தென்னை யாவும் போட்டிப் போடும் சண்டைக் கொள்ளும்
தன் தேங்காயை சபரிக்குத் தாரும் -  சுவாமிமார் இருமுடியில்
தேங்காய் தான் ஏறிடவே காற்றாய்ப் பாடல்கள் பாடும்
மற்றத் தென்னைகள் சோகத்தில் மூழ்கும் (சபரிவாசன்.. தீரும்)

சரணம் 2:

நெய்யினைத் தேங்காய் சுமக்கும் இருமுடி ஏறும் - அந்த
ஐயனைத் தீண்டிடச் செல்லும்- நெய்யோ
நீ கற்பூர ஆழிக்குத்தான் செல்வாய் எனச் சொல்ல
தேங்காய் கள்ளமாய் சிரிக்கும்  (சபரிவாசன்.. தீரும்)

சரணம் 3:

கற்பூர ஆழி சென்றாலும் துயர் இல்லை- உனை
நான் தொட்டு அவன் குளிக்கத் தாரேன் - கற்பூர ஆழியில்
சாம்பலாய்ப் போனாலும் அவன் வாசம் செய்யும் சபரிமலை
அதில் வாசம் செய்யும் என் சாம்பல் (சபரிவாசன்.. தீரும்)

சரணம் 4:

அந்தத் தேங்காய்க்கும் உனைத் தொழவேண்டி எண்ணம்-
நாங்கள் அதையும் கூட்டி வாரோம்
உன் தரிசனம் தாராய் மணிகண்டா!!
ஸ்வாமியே சரணம் அப்பா!!
ஐயப்ப சரணம் அப்பா!

பாடலாய்

Monday, August 18, 2014

Zero, the price of love

   "Somebody said to me that love is priceless. It is infinite. I replied to them, 'Yes it is priceless. But it should imply zero. Love at no cost. Affection at no cost. What we need is readiness from within.' That is why I am planning to name the trust 'zero, the price of love'", said Ashok to his father.
  "Anbin vilai suzhiyamaa?" (Zero, the price of love in Tamil)
  "Yep. Sounds better in Tamizh.", replied Ashok.
  "I am very proud that you have these kinds of ideas and thoughts in this young age. Carry on. But be transparent with the members".

Six months ago,

   "Ashok, do you know about the Olimayamana Deepavali, we used to organize every year?", asked Ashok's cousin Rajesh in telephone.
   "Yeah, I do. Deepavali with orphans."
   "You have joined in an IT. Contribute something."
   "Ok. My contribution is thousand rupees. I will pay to you once I come over there."
   "Great. We are having it next month second Saturday. Be here."
   "I will do."

Ashok, a recent engineering passed out and have just joined an IT firm in Bengaluru. The call was from his cousin who along with badminton friends involve in social activities. Ashok knew few members over there. He donated his blood once in a blood donation drive conducted by them. He didn't find the Deepavali incident that important to attend but he decided to go since he can see relatives over there.

   "Wear this kurta, Ashok", said Rajesh.
   "Yes."
   "You have to take care of hospitality"
   "What?"
   "Can't you give chocolates to children?"
   "How many of them will be coming?"
   "One twenty children from three different homes."
   "Okay."
   "Chocolates?"
   "Buy them.", said Rajesh and started to the marriage hall where the event was planned.

Ashok had a good time over there. Couple of female singers for Super Singer Competition were there! Two chocolates went their way.  Children from two homes were already present. Finally arrived the children from third orphanage.

After giving away the chocolates, Ashok moved to the row behind the super singer candidates. Two girls whom the television shows one minute once even when they are not performing. The compere, a middle aged enthusiastic bald gentleman started to carry the mike and went to each children and started asking their names. Names started like Vikash, Antony and he reached the final home. The kids started to tell their names, " R. Adhavan, R. Akilan, R. Tamizh, R. Ilakkiya, R. Parimalam and the name list continued and ended up with R. Poongothai."

A child from the third home came to the stage. The compere asked her name, she replied R. Inbaselvi.
"Everybody from your home has same initials. What is that R?"
"Raghunathan, my dad's name."
"Good. What are you going to do?"
"I can say capital of any country. I can identify the country from its flag."
"How old are you?"
"Six" she replied.
"Give a big round of applause to this little girl.", said the bald head compere.
The compere started to ask her the capitals.
He started with Kuwait.
"Kuwait city."
"Nepal"
"Khatmandu."
He continued to ask for twenty to twenty five countries. The child replied the answers in fraction of seconds.

After that, the compere said, "What a girl! She said her father's name is Raghunathan. He is father of all people sitting over there(pointing the third home). He is here sitting there. Sir, could you please?"
When the compere pointed at Raghunathan, Ashok felt that he is pointing to him. Raghunathan stood and everybody clapped for him,. He was seated very next to Ashok.

Next came the super singer candidates to the stage. Ashok shook hands with Raghunathan and thought to speak a lot with him. He became silent and his thoughts went towards Raghunathan and friends group like his cousins. Children from each home performed. Ashok has not spoken a single word with Raghunathan. Function got over. Children moved to have lunch. Youngsters over there took snaps with the super singers. Ashok searched for Raghunathan at every corner of the hall and found him in wash basin.
"Sir. You are great.I want to hug you. Shall I?", asked Ashok.
"Yes, please.", replied Raghunanthan.
The hug was very tight. The hug itself said many things, "When people asked what is the purpose of life? I had no answers. You showed me today. Thank you! Boss."
"Shall I take a snap with you?"
"Yes, sure. How about with boys as well?"
"Definitely and you have done something to me.", said Ashok.

Ashok returned to his cousin's home.
"Rajesh! Rajesh!!"
"Yeah."
"Chhhp. You guys are great. Appreciate. Give your hands."
Ashok shook Rajesh's hand.
"Why? All of a sudden."
"Appreciation can be given free of cost. Zero"
"Hmm. Hmm."
"Great!!"

Ashok had lot of questions in his mind. What if he does similar activity with his school or college friends? It seemed the idea did not come from within. It is just coming out since he saw these kinds of people. If he saw, group of friends chilling out in Goa, the idea might not have come. He was not able to figure out if the idea was from his heart. It should not start like his mridangam class which he joined just because his friend joined and discontinued in couple of minutes. He kept his thoughts aside and proceeded his routine.

Six months then,

Ashok went for a relative's wedding at a small town called Arcot in Tamilnadu. His father had a friend. He ran a school for mentally challenged. From his father's compulsion, he went over to the school and met his father's friend Srinivasan. He worked as an officer in one of the companies over there and also ran the school.

Ashok wanted to speak something and wanted to show off that he is a responsible person. He asked Srinivasan, " Uncle, I want to see the students and classes over here."
 "Definitely. I would love to show you our children. Come!"
Srinivasan started towards the first class. Children stood up and wished.
 "These are the children who can understand things.But needs to be taught very slowly. They can be said as  slow learners, rather. But still not normal. If a normal child can learn a stuff in 5 minutes, these kids may  need 25 minutes." He introduced everyone in the class.
Then he moved to the next room,"The second level.", said Srinivasan while entering the room. The room is full of handicrafts. Kids were making designs in soap and few were making agarbathis.
 "For these people, the power of understanding is lesser than what we saw in the first class. These kids are  taught with making agarbathis and forming designs in soap. It will help for atleast moving their life in future." A girl came and gave Ashok a designed soap. Ashok started to have the same feeling that he had in Olimayamana Deepavali. 
"You saw a care taker outside my room. She used to be in this class. Their parent didn't take care of her well. See the god's play. You can witness. Most of the kids over here are poor. Adding fuel to the fire. They didn't want her to be with them. She used to roam here and there. Bad society. They just need a lady. Leave it. Then I appointed here as a caretaker."

They went into third class. There were about ten kids and about four teachers inside.
"These kids are even special."
Ashok nodded his head.
"Do you read books?", asked Srinivasan.
"No."
"There is a book called, 'Tuesdays with Morrie' Good one. Read it."
"Definitely."
"The writer wrote in that book, 'the life literally ends once when a person is not able to wipe his/ her own ass.' "
"Sir."
"Yes, that is true! The writer has been realistic there. These kids most of them are ten. Pity,they don't clean theirs after toileting. Some don't even know that they have to go to toilet for urgency. We teach these kids to say if they have the feel of going to toilet. Atleast they can do their basic needs and do not want to depend on others. You see, there are couple of kids who were promoted from this class to handicraft class in the past three years. That is my victory.
"Great sir.", said Ashok in the lighter voice.
"There used to be teachers before who came for these class. But they are not nurse to wipe the ass of ten and thirteen years old when needed. Now, I have volunteers. Mothers of few kids over here. They know the pain involved. They are trained and appointed as teachers for this particular class."
Ashok had no words. He nodded his head.
Pic Courtesy: nesam.org

Srinivasan took him to the last class.
"The last one. Very special kids. They need attention all time."
Ashok saw the kids and went speechless. He controlled himself from crying. Kids were sitting in wheel chair like seat and were tied with belt in legs and hip area.
"We cannot say these people are mentally challenged. But someway. Yes, they are. They can eat if we give if we feed them. We cannot find if they are thirsty. We have to give them water in regular intervals. They are tied for safety purpose. They will try to walk but it will be difficult for them. They get fits regularly.We are trying our level best and would love to see atleast one person to improve.".
He said names of the kids one by one. He went to the last kid, "His name is Srikanth. His father KV Srinivasan - myself.". He went closer to the kid and had a close loving look  "Fourteen years old."
Before Srinivasan turned at  him, Ashok wiped his tears.

They came back to reception and Ashok asked,"I know you work here in Ranipet. But with that salary, how you are running a school."
"People. They help me. My staff give me Rs. 1000. I even get it from them during their birthdays and anniversaries. We run a trust from which funds come in. You see the board there. These people paid for today's lunch. This is how it runs. I pay two rupees a month as rent for this school. The owner took one rupee before. I said to him the land rates were increasing and he should get more rent. He replied as you were compelling, he was increasing the rent and asked to pay two rupees. Such a nice person and there are very nice people in this globe to make it balanced."
Ashok replied, " I like to contribute every month. I will pay 5% of my income every month for this children."
"Thanks a lot, Ashok.", replied Srinivasan and their conversation continued.

On the way back to Bengaluru,

"Dad! I had an idea today after meeting Srini uncle."
"What is that idea?"
"I am going to start a trust with my willing friends. We are going to give five percent of our income to needy. Fifty percent beneficiary is Nesam of Srinivas uncle and 50% others."
"You have just started to earn. Why now itself? Why suddenly?"
"Just like Rajesh . How he does good things with his badminton friends?"
"You are taking decisions in haste. You are just doing things because someone is doing it. I don't think. It comes from your heart."
"It is not like that. See, Srinivas uncle has started Nesam  because his son Srikanth had that problem. But it is benefiting many people over there. Put the same logic here. Also, I had the same question inside. But I am very clear now. We will be rolemodels for many group of friends to stand in the society than just group of friends."
"Hmm. Hmm. It is upto you then. What will be the trust's name?"
"Somebody said to me that love is priceless. It is infinite. I replied to them, 'Yes it is priceless. But it should imply zero. Love at no cost. Affection at no cost. What we need is readiness from within.' That is why I am planning to name the trust 'zero, the price of love'", said Ashok to his father.
  "Anbin vilai suzhiyamaa?" (Zero, the price of love in Tamil)
  "Yep. Sounds better in Tamizh.", replied Ashok.
  "But you are paying five percent."
  "Wrong inference. A person who gives his heart is more powerful than than one who gives his money. For example, a reader for a blind, a person who gives his water bottle seeing a person breathing hard after trying to catch a bus,
Caring smile
Pleasing speech at the right time
Good heart
Soothing talk
Helping hand
Showing affection to remove ones distress. It can all come free of cost. What we need is readiness from within."

  "I am very proud that you have these kinds of ideas and thoughts in this young age. Carry on. But be transparent with the members", said Ashok's father.

Three months later

Ashok and his father were travelling in a town bus in Chennai. Both were seated and the bus was free. In the next stop, crowd got into the bus.
Suddenly, Ashok's father stood up.
"We are still six to seven stops away. Why are you getting up?", asked Ashok.
"There is a old pair standing next to you and they are elder than me. My son runs a trust called 'Zero, the price of love'. I am going by its way. I am giving my seat for one of them."
"That is like a slap on my face, daddy", said Ashok and stoop up to give the seat for the old pair.
"Thanks.", replied the pair.
"Now I got a practical example of 'zero, the price of love' and got the greatest reward ,'the thanks' form those elders."
"Exactly, dad.", replied Ashok.


The story is over with this. I want to give you further information on Olimayamana Deepavali and Nesam. They both are the true ones.

There is a badminton club based on T Nagar, 'Mahalakshmi Badminton club' which is formed by group of friends comprising business persons and important officials. They do many social activities like Blood donation, eye donation and this Olimayamana Deepavali. You can get to know about this event from Chennai Plus. It happens usually in second or fourth Sunday of a month before Deepavali. People interested to be there, can ping me. I will arrange for you to be present over there during the event either as volunteer or spectator.

Then, Nesam. Me and my friends visited there during our final year project in Ranipet. The personnel department HOD of the industry where we did our project is Mr. Srinivasan of Nesam. Ashok is exactly we who went there. The same experience is replicated. Nesam can be reached at http://nesam.org/. Mr. Srinivasan's contact is available in contact us. You  can contribute to them in various ways as in help us page. The photo above is of students over there.  You can see about the profile of each student at http://nesam.org/articles.htm You can visit Nesam any time after speaking with Mr. KV Srinivasan.

Zero, the price of love is still a dream to me, a one man group now, I can say :) . If a group of friends or like minded people start trusts like in the story, slowly there will be a societal and economic balance. Thank you.

Sunday, August 3, 2014

குணசேகரனின் தந்தை கந்தசாமி

"என்னத் தம்பி? சொகமா?", தன் வேலையை முடித்து வீடுத் திரும்பிய கந்தசாமி ஊரிலிருந்து வந்திருந்த மகனிடம் கேட்டார்.
"இருக்கேன்.", வேண்டா வெறுப்பாய் பதிலளித்தான் குணசேகரன்.
"என்னடாத் தம்பி? பிரயாணக் களைப்பா?"
"ஒன்னும் இல்ல."
"என்னடி லட்சுமி? புள்ள ஒரு மாறி பேசுது? சோறுப் போட்டியா?", தன் மனைவியிடம் பேச்சைத் திருப்பினார் கந்தசாமி.
"சாப்டுட்டான்."
"அம்மிணி தட்ட எடுத்து வை. இதோ வரேன்." என்று கூறிவிட்டு குளிக்கச் சென்றான் கந்தசாமி.

லட்சுமி கந்தசாமிக்கு உணவு பரிமாறினாள்.
"லட்சுமி. லூசு! புள்ளைக்கு ரேஷன் அரிசிச் சோத்தையாப் போட்ட?"
"இல்ல. அவன் இட்டுலிக் கேட்டான். நமக்குத்தான் ரேஷன் சோறு."
"பதறிட்டேன். புள்ள நாலு மாசத்துக்கு அப்புறம் வந்துருக்கு. நல்லா நாளைக்கு நண்டு வறுவல் செய்யனும். லாலி ரோட்டுப் பக்கம் சின்ன வயசுல அப்படித் திம்பான்."
"செஞ்சிடறேன்."

மறுநாள் காலை
"மணி அஞ்சரைக்கெல்லாம் புள்ளைய எழுப்பாதே அம்மிணி. எனக்கு வேல நான் கிளம்பனும். பையன் ஊர்ல தூங்குறானோ இல்லையோ எழுப்பாத. எட்டு வாக்குல எழுப்பி தோசையக் குடு. நான் நாளுக்கெல்லாம் வந்துடறேன்."
கந்தசாமி காக்கி சட்டையும் காக்கி டிரௌசரையும் அணிந்துக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டான்.

"கணேஷா! பையன் மெட்ராசுல இருந்து வந்துருக்கான். என்னம்மா சோக்காயிட்டான் தெரியுமா? கையில செல் போனு. பட்டனெல்லாம் இல்ல. விரல்ல தடவினாலே போதும். டச்சு. இந்த ப்ரூக்பீல்ட்ஸ், ஆர். எஸ். புறத்துக்கு வரவங்கல்லாம் வெச்சிருப்பாங்கல்ல, அது மாதிரி. ஆளும் கலர் ஆயிட்டான்."
"பின்ன என்ன? மெட்ராசுல இருக்கான். எப்படியும் பத்தாயிரம் கிட்ட வாங்குவானல்ல?"
"ஜாஸ்தி!! பதினாறு வாங்குறானாம். லட்சுமி சொல்லிச்சு."
"மகன் என்ன வாங்கிட்டு வந்தான்?"
என்ன  சொல்வதென்று சிறிது யோசித்து, " நல்ல வெளுப்பா சட்டையும், வேட்டியும்.  எதுக்கு குணானுக் கேட்டேன். மூஞ்சத் தூக்கிவெச்சிக்கிட்டான். போட்டு காமிச்சிட்டு வந்தேன் காலையில. ஜோடி ஆயிட்டான்.  போட்டோலாம் புடிச்சான் செல்போனுல."
"உனக்கென்ன சாமி. பையன் சிங்கக்குட்டி."
சிரித்தவாறேத் தலையசைத்தார் கந்தசாமி.

வேலை முடிந்து விடு திரும்பி குளித்துவிட்டு வந்தான் கந்தசாமி.
"அம்மிணி. குணசேகரன காணும்?"
"பிரிண்ட்ஸுகளோட படத்துக்கு போயிருக்கான். அப்படியே நைட்டு வெளில போய் சாப்டுட்டு வருவானாம். நம்மளத் தூங்கச் சொல்லிட்டான்."
"அது செரி. படத்துக்குப் போகட்டும். இளந்தாரிப் பையன் நம்மக்கூடயே உக்காந்து, நீங்கப் பாக்குற சீரியல்லாமாப் பாப்பான். போயிட்டு வரட்டும். சாப்பாட்டுக்கு வரச் சொல்லியிருக்குலாம்ல. தேவி ஸ்கூலுல இருந்து வந்துட்டாளா?"
"வந்துட்டேன் பா."
"வா வா. என்னச் சட்டப் புதுசா இருக்கு?"
"அண்ணன் வாங்கிக்குடுத்துச்சுப் பா."
"நல்லா இருக்கு அம்மிணி. லட்சுமி! லட்சுமி! நம்ம பிள்ளையப் பாத்தியா எவ்வளவுப் பாசமா தங்கச்சிக்கு புதுச் சட்ட வாங்கிக் குடுத்துருக்கு.", எனப் பெருமிதமாகக் கூறினார்.
"அம்மாவுக்கும் புடவை வாங்கியிருக்கு அப்பா."
"அப்படியா? அம்மிணி என் கிட்டச் சொல்லலையே! மறந்துருப்பாங்க."
 "ஆமாங்க. சொல்ல மறந்துட்டேன். சிவப்புக் கலர்."
"ம்ம்ம்..."

மணி பத்து அடித்தவுடன் தூங்கச் சென்றார் கந்தசாமி. தன் மகன் ஏன் தன்னிடம் பேசவே இல்லை என்றச்  சிந்தனை. அம்மாவுக்கும் தங்கைக்கும் புத்தாடை. தன்னை மறந்துவிட்டனோ என்ற சலனம். சின்ன வயதிலிருந்து அதட்டியதுக்  கூட இல்லை.ஏன் இந்த வெறுப்பு. நேரடியாய் கேட்கலாம். ஏதாவது காரணம் சொல்லி, இருந்தே இறக்கும் நிலை வேண்டாம் என்ற நிந்தனை. தூக்கம் சரி வர இல்லை. மண் ஒரு மணியளவில் வந்துத் தூங்கச்  சென்றதும் தெரியும்.  அப்படியே தூங்கலானார். மறுநாள் மதிய ரயிலில் மகன் கிளம்பிவிடுவான். நலம் விசாரித்ததோடு சரி. மகனின் மெட்ராஸ் வாழ்க்கையைப் பற்றிக் கேட்க வேண்டும். குடும்பத்துடன் பேரூர் கோவில் செல்ல வேண்டும் என்று ஆசைகள் ஆசைகளாகவேத் தொடரும் நிலை.

மறுநாள் காலை வேலைக்குப் புறப்பட்டார் கந்தசாமி. குணசேகரன் தூங்கிக் கொண்டிருந்தான்.
"எழுப்ப வேண்டாம். பத்தரமாப் போயிட்டு வரச் சொல்லு. நான் வரேன்.", என்று சொல்லிவிட்டு, தூங்கிக் கொண்டிருக்கும் மகனைப் பார்த்து ஒரு புன்னகைத்து வேலைக்குச் சென்றான்."

"கணேஷா! என்ன இன்னிக்கி லேட்டு."
"நேத்து நைட்டு செரியாத் தூங்கல."
"சரக்கு அடிச்சியா?"
"ஆமாங்க."
"எதுக்கு கணேஷா போதையெல்லாம், நாளைக்கு உன்னப்பாத்தே உன் பிள்ளக் கெட்டுப்போகக் கூடாதல்ல?"
"சரிதானுங்க."(சொல்லும் போதே லேசாய் கணேசன் கண்களில் கண்ணீர்)
"சரின்னு சொன்னா மட்டும் பத்தாது. விட்டுறணும். செரி அத  விடு, நேத்து நான், லட்சுமி, மவன், மவ எல்லாரும் பேரூர் கோவில் போனோம். புள்ளக்  கூட்டிட்டுப்போனான்."
"அப்டியா அண்ணேன்?"
"ஆமாம். பஸ்சுல போயிட்டு பஸ்லயே வந்துட்டோம். இன்னிக்கிக்  கிளம்பறான்."

வேலை நடுவே, "இப்போதைக்கு  ரோட்டுல செய்வோம். ஒரு மணிக்கு ஒரு வேல இருக்கு, அத முடிச்சிட்டு இறங்கலாம்.", என கந்தசாமிக் கூறினார்.
"சரி அண்ணேன்", என ஆமோதித்தார் கணேசன்.

ஒரு மணி அளவில் ரயில் நிலையம் அருகில் வந்து சேர்ந்தார் கந்தசாமி. சுமார் இருபது நிமிடங்கள் கழித்து குணசேகரன் ரயில் நிலையம் அடைந்தான். அவனை வழியனுப்ப லட்சுமியும் தேவியும் வந்திருந்தனர். ரயில் கிளம்பிச் செல்லும் வரை ஓரமாய் இருந்து பார்த்துவிட்டு வேலைக்குத் திரும்பினார்.

தேவி வீடுத் திரும்பியவுடன், "அம்மா! ஸ்டேசன்ல கீழக்கெடந்துச்சு."
"கீழக்கெடந்துத எல்லாம் ஏன் எடுக்கறத் தப்பு. புதுசா இருக்கேக் கொடு.", என்றுக் கூறி வாங்கிக்கொண்டாள்."

(சொல்லும் போதே லேசாய் கணேசன் கண்களில் கண்ணீர்)
முந்தைய இரவு - அரசு மதுபானக் கடை.
தட்டுத்தடுமாறிக் கொண்டே கணேசன் வீடுத்திரும்பத் தயாரானார். குணசேகரன் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தான். பார்த்துவிட்டுத் தள்ளாடிக் கொண்டே அவனிடம் சென்றார்.
"குணசேகரா! கந்தசாமி அண்ணேன் மகன் நீ! நீ குடிக்கலாமா?" என்று கூறி அவன் கைகளைப் பிடித்தார்.
"கை எடு டா?"
"தம்பி. என்ன டான்னுலாம் சொல்லுற?"
"பீ அள்ளுற நாய். இஷ்டத்துக்கு கை வெப்பியா?"
"தம்பி. பாத்துப் பேசணும்."
"கிட்ட வராத ஒரேச் சாக்கட நாத்தம், அப்பன மாதிரியே."
"தம்பி (அழுதவாறே). அப்பா!..", என்று ஏதோ சொல்ல வர.
"டேய்! உன் அப்பா சாக்கட கிளீன் பண்றவரா?", எனக் கூடி இருந்த நண்பன் ஒருவன் கேட்க
"பைத்தியக்காரன் உளருறான் டா. எங்கப்பா லக்ஷ்மி மில்ஸ்ல சூப்ரவைசர். பீ அள்ளுற நாய் போதைல என்னமோ உளறுது.",என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கணேசன் அழுதவாறே புறப்பட்டான்.

வேலை முடிந்து கந்தசாமி வீடுத்திரும்பினான். குளித்துவிட்டு டீ.வீ  முன் அமர்ந்தான்.
"அம்மிணி. புள்ள பத்தரமாக் கிளம்பிட்டானா?"
"ஆங். கிளம்பிட்டான். என்ன நல்லாத் திட்டினாங்க?"
"ஏன்?"
"நேத்து நைட்டு வாட்சு வாங்கிருக்கான். உங்களுக்கு.குடுக்கணும் காலைல எழுப்புன்னு சொன்னான்.நீங்க எழுப்பவேனாமுன்னு சொன்னீங்களா, ஏன் சொல்லலேன்னுத் திட்டினான்?"
"அப்டியா?"
"ஆமாங்க. இந்தாப் போட்டுக்குங்க." என்று எடுத்துக் கொடுத்தாள்.
"எனக்கெதுக்கு வாட்ச் எல்லாம்? வெச்சி வை. அப்பறமாப் போட்டுக்கறேன்.", என்றுக் கூறிவிட்டு கடிகாரத்தை ஒரு முறைப் பார்த்துவிட்டு நாதஸ்வரம் பார்க்கத் தொடங்கினார்.

லட்சுமி தண்ணீர்ப்  பிடிக்க வெளியே சென்றபோது, "தேவி."
"என்னப்பா?"
"அப்பா! உங்க அண்ணன் வயசு இருக்கும் போது தங்க மோதரம் வேல செய்யும்போது கெடச்சது. வீட்டுக்காரர் கிட்டக் கூப்பிட்டுக் கொடுத்தேன். என் மக நீ! கீழ இருந்து எடுத்து வீட்டுக்கெல்லாம் கொண்டு வரகூடாது. "
"அப்பா!"
"நானும் ஸ்டேஷன் வந்துருந்தேன் நீ கீழ இருந்து எடுத்ததையும் பாத்தேன்."
"அப்பா.", அழுகுரலில்.
"அம்மிணி அழக் கூடாது. இனிமேல் செய்யாத. அம்மாக் கிட்ட நான் பாத்தத சொல்லாத. வருத்தப் படுவாங்க."
"செரிப்பா."
"என்ன! குணாவுக்குத் தான் அவங்க அப்பா சாக்கட அள்ளுறது பிடிக்கிலயாட்டு இருக்கு.", என்று கூறி தேவியின் கண்ணீரைத் துடைத்தார்.


'பீ மணம்' என்கிற துப்பரவுத் தொழிலாளர்களைப் பற்றிய  யூடியூப் காணொளியைப் பார்த்து மனதில் தோன்றிய கதை.

Friday, July 25, 2014

He lives in Internet

The weekends call for going out. When there is a car and two friends who like to drive long distance, the weekends will be booked for travelling. These friends - Ananth, Mithun, Sanjay and Gaurav, engineers and roomies from Bengaluru. Saturday morning 7 AM, when most of the engineers were sleeping due to the hangover from work or hangover from pubs of the Friday night, these friends started towards Hoggenakkal.

The gang used to travel to Coorg, Chikmagaur or atleast to Sivasamudram every weekend. They read about the beauty of the falls in rainy season and decided to visit there.

'Get Set Go. On the way to Hoggenakkal with Ananth Shriram, Mithun Muthusamy and Gaurav Kumar', read Sanjay Subramaniam's facebook status once they boarded into car. Mithun has an SLR with him and he has a facebook photography page. Gaurav and Ananth are the two who drives in shifts to their weekend destination.

'Dosa Single Vada at Sukh Sagar. Unless for Sambar which resembles the payasam my cousin makes, the bestest.', Sanjay Subramaniam's updated his next status.
Gaurav saw his status in his iphone and asked him, "Sanjay! You went to piss after your breakfast. You forgot to update this in facebook. Why are you doing like this? Why should you update all this?"
" Gaurav. This is a popularity check. See this.(He opened his wall and showed the people who have liked the status.) Kamala Raju, Priya Baskaran and Lalitha Vasudev -  three girls. These three girls used to like whatever crap I update on facebook. These three are not closest to me as well. They are indirectly saying to me something. I will wait for hundred statuses, if they like all of them, then I will start chatting with them. This is called as Sanjay's theory of acquaintance to chat friend. How is it? If one put status on importance of education and importance of gender equality, they will keep him in good books but they will still remain 'know him but not friend/ boyfriend' kind. If someone continuously likes these kind of status, then chances of couplehood are there."
"Crap."
"Just kidding. It has become an addiction."

The car went past Hosur. Tamil film songs of 1980s were played on the audio system.
"Hoggenakkal is such a scenic beauty. I visited three to four years back. But there is no such crowd over there. People are very minimal. I don't know why people are not coming out there in numbers.", said Ananth
"How many people in the state knows that there is a place called Hoggenakkal? It is good that the crowd is less. Let it be less polluted.", said Sanjay.

'Reached Hoggenakkal. This place is awesome. Next - Coracle ride and some photos for dp in facebook. Feeling excited.' updated Sanjay's facebook status.

The gang went on coracle ride. Mithun clicked the scenic beauty though his SLR.
'This is too good. Wow! Will you take us to that place where water falls ' asked Ananth. Water started to sprinkle on them when they went closer. The coracle paddler made the coracle to rotate exactly where the water fell. This rotational movement added fun.
Thanks Arjun Samy Photography (facebook page)

Then the coracle reached a small island where people took bath.
The friends spent nearly thirty minutes in the river and started to head back to starting point by coracle.
'Saw group of youngsters pouring beer at the river in Hoggenakal. When I asked them why, they replied that they are making everyone drunken by adding it to water so that many people will drink beer. Where is our youngsters heading to? Our nation wants to know', updated Sanjay's fourth status of the day.

"Ananth, what about a profile picture sitting on that cliff?", asked Sanjay.
"Sure. That will be great."
They reached the starting point and started to walk to bathing area in the falls. They saw people taking photographs near the cliff .
Thanks- Sankara Subramanian

Sanjay and Mithun decided to go there. Sanjay started to go near the cliff.
The lady who sells Guava and cut mangoes over there stopped him and cautioned, "Son. Don't go too close to the cliff. Couple of weeks back, a boy of your age came with camera. To take photograph, he went closer to the cliff. Seeing the place through lens, he did not see the tip and fell into the water. Still now, their family have not got his body."
"Granny. I know swimming.", said Sanjay and went to the cliff. He felt something flying in head as he went near the cliff. He sat there and asked Mithun to take the photograph.
Thanks-Arjun Samy Photography (Facebook page)

Mithun took a snap of him and asked Sanjay to get back. When Sanjay stood up, a small piece of stone near his leg fell down to the river. Seeing that somehow, he lost the balance and fell into the river.
"I warned him twice. I warned him twice. Go and meet the rescue people immediately atleast to get his body.", yelled the Granny.
"Don't say that old lady. He knows swimming."
"Did you see the force of water? It is also full of rocks over there? Don't mistake me. Go to the rescue team. Let his parents see atleast his body for one last time."

Mithun ran to the rescue team and informed the incident. Knowing the incident, Ananth and Gaurav came to the spot. The search went on for two hours.

After two months, Mithun opened his facebook wall.
It said Sanjay Subramaniam updated his profile picture four minutes ago. The photo that he took in Hoggenakkal. When he was seeing this, he received a message in chat from Sanjay Subramaniam, "Hi. How are you? Two days since it has been. Long gap. Isn't it? Sorry for that."

In his room's wall, there was a photo of Sanjay Subramaniam hanging (taken in Hoggenakkal) and it is printed like, "You might have gone to grave. But you live with me forever."

Wednesday, July 9, 2014

கேள்வியும் பதிலும்

கேள்வி:

கண்ணிருந்தும் குருடன்
காதிருந்தும்  செவிடு
வாயிருந்தும் ஊமை
இது மூச்சுவிடும் பிணங்களின் பூமி

காவலாளி திருடன்
அரசியல் வியாதி
சாக்கடைலாம் நல்லவன்
காசிருந்தா நீ சாமி
நல்ல மனசெதுக்கு ஆசாமி

சட்டையெல்லாம் கிழிஞ்சி நாயோட சேந்துச்
சோறுத்திம்பான் பிச்சைக்காரன்
ஏசி ரூமில் இருந்து நாலு ஃபுல்லப் போட்டு
ஃபிக்சிங் பண்ணாப் பணக்காரன்

நல்லவழிப்போயிக் கியூவுலத்தான் நின்னு
வேல செஞ்சா அவன் - பொழைக்கத்தெரியாதவன்
அடியில துட்டு கைமேல துட்டு
அப்டி இப்டின்னு செஞ்சா- கெட்டிக்காரன்

நீ வாயத்திறந்து தட்டிக் கேட்டா
நாலு நாளு நியூசு
அஞ்சா நாளு வேற நியூசு
உன் நியூசு ஃபியூசு

எங்கடாப் போகுது உலகம்
எங்கடாப் போகுது உலகம்
எங்கடாப் போகுது உலகம்
எங்கடாப் போகுது உலகம்?

பதில்:

தப்புன்னு நினைச்சாச்
சட்டுன்னுக் கேளு
சரியின்னுப் படும் வர
வாயத்திறந்து கேளு
நியூசு ஃபியூசாப் போனாத்
திருப்பித் திருப்பிக் கேளு



நல்லதப் பாத்தா
வாயத்திறந்துப் புகழு 
நல்லவைகள் எழுது
நல்லவைகள் பேசு
நல்லவைகள் பாடு
நல்லவைகள் எண்ணு
நல்லவனா வாழு

நல்லவர் நிறைய
நல்ல ரத்தம் பாயும்
கெட்ட சுவாசம் போகும்
உலகமே மகிழும்

இங்க நானும் நல்லவன்
அங்க நீயும் நல்லவன்
அவன் நல்லவன் இவன் நல்லவன்
என நல்லவர் உலகம் ஆகும்
மனம் தான் முதலென ஆகும்
பணம் தான் தூசியாப் போகும்
அதனாலத் தப்பே இல்லாமப்  போகும்

வாய்த்திற மனிதா வாய்த்திற மனிதா
வாய்த்திற மனிதா
பூமி ஆகும் சுத்தம் பூமி ஆகும் சுத்தம்
பூமி ஆகும் சுத்தம்

Tuesday, June 10, 2014

கல்யாண க்ளைமாக்ஸ் – இருகுறுங்கதைகள்

 

கதை எண் - 1
 
நன்றி: க்ரியேடிவ் சிசெல்ஸ்
"ஒரே அழுகாட்சியா இருந்ததுஅழுகப் போட்டினே சொல்லலாம். என்னோட அப்பா, அம்மா, பாட்டி, அக்கா எல்லாருமே அழுதுட்டே இருந்தாங்க. நான் உன் அப்பாவோட தானே  கல்யாணம் முடிஞ்சு கிளம்பினேன்! எல்லாரும் சந்தோசமால்ல இருக்கணும். ஆனா எல்லாரும் ஒரே அழுக. நான் கார்ல ஏறிட்டேன். எல்லாரும் அழறதப் பாத்துட்டு எனக்கும் அழுக வந்துடுச்சு. கார் கிளம்பும் போது, என் கைல லேசா தண்ணி பட்டது. திரும்பிப் பாத்தா, நான் அழறதப் பாத்து உங்கப்பா அழுதுட்டு இருக்காரு!", தன் குழந்தையைத் தூங்க வைக்க இவ்வாறு கதையினைச் சொல்லிக் கொண்டிருந்தாள் லக்ஷ்மி.
___________________________________________________________________
கதை எண் - 2
 
நன்றி: க்ரியேடிவ் சிசெல்ஸ்
"நானும் எவ்வளவோ கல்யாணத்துக்குப் போயிருக்கேன். இந்தப் பொண்ணுங்க கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளை வீட்டுக்குப் போற நேரம், கையமுயாக் கையமுயான்னு எல்லாரும் அழுதுட்டு இருப்பாங்க. அப்பாவுக்கு அதப் பாக்கும்போதெல்லாம் சிரிப்பா வரும். உங்க அம்மாவும் அழுதுருவாங்கலோன்னு நெனச்சேன். நல்ல சிரிச்ச முகமா அப்பிடியே வந்தாங்க. நீ தான் ஆட் மேன் அவுட் மாதிரி அழாம வந்துருக்கே, அழுகையே வரலயான்னு கேட்டேன். உங்கம்மா க்ஷ்மி- 'அஸ்வின், உன் கூட வரதுக்கு நான் ஏன் அழனும்? அழத் தான் விட்டுருவியா நீ' ன்னு கேட்டாங்க. எப்படி இருந்தது தெரியுமா?", அன்று பெட்டைம் கதை சொல்ல அஸ்வின் டர்ன்.

Friday, May 30, 2014

மல்லாரி

1972, திருச்செந்தூர் முருகன் கோவில் வாயில்

                 "சுவாமி புறப்பாடு டேய்! நாதஸ்வரகாரா மல்லாரி வாசிப்பா. அப்..ப்பிடி இருக்கும் பாத்துக்கோ!", சிவஞானம் தன் ஐந்து வயது மகன் சிவராமனிடம் கூறினான்.
                 ஆனால் சிவராமனின் கண்களோ பலூன் காரனையே பார்த்துகொண்டிருந்தன. "அப்பா! எனக்கு ரெட் கலர் பலூன் வாங்கித்தா. அப்பறமா ஒரு க்ரீன். அப்பறமா ஒரு ப்ளூ. வாங்கித்தரியா?", என்று கேட்டான்.
                 "நாளைக்கு வாங்கித்தரேன் டேய். அங்க சாமி வரப்போறது. மல்லாரி கேளு. டான் டட்ட டான். டான் ட டட்ட டான். அருமையா இருக்கும். கவனமா கேட்டேனா, அப்பா எல்லா கலர்லயும் ஒரு ஒரு பலூன் வாங்கி தரேன்.", என்று சிவராமனிடம் கூறினான்.
                 சிவஞானம், சிவராமன் தன் பின்கழுத்தில் இருக்கை போல் அமரும் வகையில் தலை மேல் தூக்கி கொண்டான். சண்முகர் பக்தர் படை சூழ வெளியில் வந்தார். தலைசிறந்த நாதஸ்வர கலைஞர்கள் மல்லாரி வாசிக்க துவங்கினர். மல்லாரி, நாதஸ்வரத்திற்கென்றே இருக்கும் சிறப்பான இசை. மேளத்தட்டும் நாதஸ்வர இசையும் கேட்போரை ஒரு தியான நிலையை அடைய செய்யும். சிவராமனின் இரு கைகளையும் பிடித்து கொண்டு மேளதாளத்திற்கும் நாதஸ்வர இசைக்கும் ஏற்றவாறு அசைத்தான்.
நாதஸ்வரகாரர்களை சூழ்ந்திருந்தவர்கள் கைகளில் தாளம் போட்டு ரசித்து வந்தனர். பக்தர்களின் பரவசத்தை மேலும் கூட்டியது இந்த இசை. நாதஸ்வரகாரர்களுடனே முன்னே சென்றனர் சிவஞானமும் சிவராமனும்.
                வீதி உலா முடித்து உறவினர் வீடு திரும்பினர். சிவஞானம் தன மகனிடம்,
"எப்படிடா இருந்தது சிவராமா?"
                "நல்லா இருந்தது பா." "டான் ட டட்ட டான்", என பாடியவாறே ஆடினான்.
                "அப்படித்தான்.", ஏதோ ஒரு பெருமிதத்தில் சிரித்தான் சிவஞானம்.
             
                 திருவிழா முடிந்து மெட்ராஸ் புறப்பட தயாராயினர். சிவஞானம், கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டியை சேர்ந்தவன். தனது பள்ளி காலங்களில் ஏழாந்திருநாளுக்கு காலை ஐந்து மணிக்கெல்லாம் கோவிலுக்கு சென்று விடுவான். இரவு நாதஸ்வர இசை கேட்க காலையிலேயே ஒரு வேகத்துடன் கிளம்பிய காலம். தன் மகனுக்கும் நாதஸ்வரம் ரசிக்க தெரிய வேண்டும் என்ற விருப்பம்.
             
                சிவஞானத்திற்கு மெட்ராஸில் அரசுப்பணி. தன் மகனின் ஐந்து வயதிலிருந்து திருச்செந்தூருக்கும் பூதபாண்டிக்கும் நாதஸ்வரம் கேட்க அழைத்து செல்ல வேண்டும் என நினைத்திருந்தான். முதல் திருவிழா முடிந்தாயிற்று. இவ்வாறே வருடங்கள் தொடர்ந்தன.

1974, மெட்ராஸ்

               சிவராமன், மாம்பலம் ராமகிருஷ்ணா பள்ளியில் இரண்டாம் வகுப்பு, அப்போது. மார்கழி மாதம் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரிக்கு டிக்கட் கிடைத்திருந்தது. தன் மகனையும் அழைத்து சென்றிருந்தான்.

கச்சேரியின் போது,
               "அப்பா! இவா மட்டும் உக்காந்துண்டு பாடறா, திருச்செந்தூர், பூதபாண்டில எல்லாம் நாதஸ்வர காரா நடந்துண்டு வாசிக்கறா. ஏன்?"
              "சிவராமா! கச்சேரிய கேளு! எம்.எஸ் அடானா ராகம் என்னமா பாடறா பாரு. அப்பா, திரும்பி போறச்ச உனக்கு பதில் சொல்றேன்."
              சிவராமனின் சிந்தனை எல்லாம் இந்த பாடல் காரைகுறிச்சி வாசித்திருந்தால் எவ்வாறு இருக்கும் என்றவாறே ஓடிக்கொண்டிருந்தது.
              கச்சேரி முடிந்து வீடு திரும்புகையில்,
              " அப்பா. அப்பறமா சொல்றேன்னு சொன்னேளே?"
              "நாதஸ்வரகாரா எல்லாம் சுவாமி மாதிரி. அவா, சுவாமி தெருவுல வீதி வரமாதிரியே, வீதிலே ஜோரா வந்து வாசிக்கிறா பாத்தியா. அவா வந்தப்பறம் தான் சுவாமியே வரும்."
              "அவா ஏன் நம்மள மாதிரி பூனல் போட்டுக்கல?"
              சற்றே யோசித்த சிவஞானம் ஜாதியை காரணமாய் கூற வேண்டாம் என நினைத்தான். ஆனால் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே!
              "டேய். பூனல் போட்டுண்டு நாதஸ்வரம் வாசிக்கறது கஷ்டம். அதான்.", என பதில் கூறினான்.
              "அப்போ பூனல் போட்டுண்டு வாசிக்க முடியாதா?"
              "நா வேணும்னா கத்துண்டு வாசிக்கறேன்.", சிரித்தவாறே கூறினான் சிவஞானம்.

1974,
              பூதபாண்டி திருவிழாவிற்கு குடும்பத்தோடு வந்திருந்தான் சிவஞானம்.
நாதஸ்வர கலைஞர்கள் சிவஞானம் வீட்டில் தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.
               சுவாமி வீதி உலா முடிந்து வீட்டில் அமர்ந்திருந்த நாதஸ்வர கலைஞரிடம் சிவராமன், "மாமா சூப்பரா வாசிச்சேள்."
               "சின்னபயலா இருக்க. உனக்கு என்ன மக்கா பிடிச்சது?"
               "மல்லாரி புடிச்சது. தவில் மாமாவும் அருமையா வாசிச்சாரு." தவில் காரரின் முகத்தில் புன்னகை. "அப்பறமா சரசிருகா வாசிச்சேளே அதுவும் பிடிச்சது."
               "மக்கா உன் வயசுக்கு பாட்டு பேரெல்லாம் சொல்லுத. பிராமணா வீட்டு பிள்ள பிராமணா வீட்டு பிள்ள தான். என்ன சொல்லுத தவிலு?" சரி தான் என்பது போல் தலை அசைத்தார் தவில்.
               "எனக்கு வாசிக்க சொல்லி தரேளா?", பாவமாய் கேட்டான் சிவராமன்.
               "மக்கா. இது நீங்க வாசிக்கற வாத்தியம் இல்ல. என்ன இனிமயா இருக்கு உன்னோட குரல்! பாட்டி அம்மைக்கிட்டலாம் பாட்டு கத்துக்கிடு. எதுக்கு மக்கா இந்த ஜோலி?"
               ஒன்றும் புரியாதவாறு இருந்த சிவராமன், "நாதஸ்வர காரா சுவாமி மாதிரி. சுவாமி கூடயே வீதில வந்து வாசிப்பா. அவாளுக்கு அப்பறம் தான் சுவாமியே வரும்னு அப்பா சொல்லிருக்கார்."
                பதிலில் திகைத்த நாதஸ்வர வித்வான், "நீ பெரிய ஆள்  ஆகிட்டு வா, நான் சொல்லி தரேன்." என்று சிவராமனிடம் கூறினார். வாதியகாரருக்கு முப்பத்தைந்து வயது இருக்கும்.

                 வருடங்கள் செல்ல, சிவராமனுக்கு நாதஸ்வரத்தில் ஈடுபாடு மேலும் கூடியது. நாதஸ்வரம் சுற்றியுள்ளோரிடம் மதிக்கத்தக்க வாத்தியங்களில் ஒன்றாய் இல்லை என்பதையும் அறிந்து கொண்டான்.

1981,

                 சிவஞானத்திற்கு லண்டனில் உத்தியோகம் கிடைத்தது. குடும்பத்துடன் செல்லும் அளவிற்கு சம்பளம். திருச்செந்தூர் திருவிழா முடிந்து கிளம்ப திட்டமிட்டான்.
                 கோவில் வாயிலில் சிவஞானம், "முருகா! ரொம்ப அவசியம்னா தான் இந்தியா வரணும். அப்போ திருவிழா இருக்குமோ என்னவோ? கோச்சிக்காத." என கூறினான். இதை கேட்ட சிவராமனுக்கு கண்களில் நீர் கட்ட தொடங்கியது. பூதபாண்டிக்கு வந்திருந்த நாதஸ்வர வித்வான் வந்திருப்பதை பார்த்தான் . திருவிழா முடிந்ததும் அவரிடம் சென்று,
                  "மாமா, என்ன அடையாளம் தெரியறதா?"
                  "யாரு மக்கா? புரியலையே!"
                  "பூதபாண்டி"
                  "ஓ. சிவராமனா! நல்லா வளந்துட்ட மக்கா! நல்லா இருக்கியா? நான் வாசிச்சத கேட்டியா? நல்லா இருந்துச்சா மக்கா?"
                  "மாமா. நல்லா இருந்தது. நாங்க லண்டன் போக போறோம். திரும்ப எப்ப வருவோம்னு தெரில. வருஷங்க கூட ஆகலாம்னு அப்பா சொன்னாரு. ரொம்ப அவசியம்னா தான் வரணுமாம். நாதஸ்வரம் கத்துக்க முடியுமான்னு தெரியல."
                 "ஏன் மக்கா! அதுனால என்ன? நல்ல படி. பெரிய ஆளா வா. நாதஸ்வரம்லாம் உனக்கு வேண்டாம் சிவராமா. பாரு! கஷ்டம். கல்யாண வீட்டுல, கோவில்ல நின்னுக்குட்டு. எதுக்கு மக்கா?", கலையை மறந்து அதிலிருக்கும் வாழ்வியல் சிரமங்களை பதினைந்து வயது சிறுவனுக்கு புரியும்படி கூறினார்.
                 "மாமா! நீங்க கத்துதறேன்னு சொன்னேளே. எனக்கு கத்துக்கணும் மாமா."
                 "என்ன மக்கா?"
                 "உங்க நாதஸ்வரத்த எனக்கு தரேளா?" என்று கேட்டான் சிவராமன்.
                 தனது சிரமங்களை கூறியும் அவன் நாதஸ்வரம் கேட்டது, அவனை கண் கலங்க வைத்தது. தன உதவியாளரை பார்த்து, "லேய் முருகா! அந்த நாதஸ்வரத்த எடுத்து வா லே.", என கூறினார்.
                  நாதஸ்வரத்தை கொடுத்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டவாறு, "அழிஞ்சு போயிட்டிருக்கு மக்கா நாதஸ்வரம். இப்ப எனக்கு பயம் இல்ல. இத்தன நாள் வாசிச்சிருக்கேன் மக்களே. எனக்கு இது தான் பெரும. இத வெச்சிக்கோ. எப்போ திரும்ப வரியோ என் கிட்ட வா நான் உனக்கு சொல்லி தரேன்." என கொடுத்தார்.
                   வாங்கிக்கொண்டு தங்கி இருந்த உறவினர் வீட்டிற்கு ஓடினான் சிவராமன்.

2007, 26 வருடங்கள் கழித்து
                 
                 சிவராமன், லண்டனில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை. இந்தியாவில் தங்கள் நிறுவனத்தை துவங்க நினைத்து அதுவும் சென்னையில் அலுவலகம் அமைக்க முடிவெடுத்தனர். சென்னையை சேர்ந்தவன் என்பதால் சிவராமனுக்கு பொறுப்பாளர் வேலை கொடுத்து மாற்றம் செய்தனர். இதுவரை இந்தியாவிற்கு பத்து முறை வந்திருப்பினும் திருவிழாவின் போது வர வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது சென்னைக்கே மாற்றம். அதுவும் திருவிழாவிற்கு இரண்டு வாரங்கள் முன்பு.
                  இரண்டு வாரங்கள் கழித்து சிவராமன் பூதபாண்டி அடைந்தான், சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்து நின்றான். சிவஞானமும் இருந்தார். வீதி உலா செல்ல சுவாமியும் அதற்கு முன்னர் நாதஸ்வர வித்வான்களும் புறப்பட்டனர். சிவராமனுக்கு நாதஸ்வரம் கொடுத்த பூதலிங்கம்பிள்ளை முன்வரிசையில் நின்று வாசிப்பதை கண்டான். அவனை நினைவலைகள் எங்கோ கொண்டு சென்றன. அவன் தந்தை, பின்கழுத்தில் அமர வைத்து, பலூனுக்கு கூலியாக நாதஸ்வரம் கேட்க வைத்தது அவன் நினைவில் வந்தது. அவனருகில் இருந்த தந்தையின் பின்கழுத்தை தடவி கொடுத்தான். மேளக்கட்டு கூடியபோது கண்ணீர் கொட்ட தொடங்கியது. கோவிலிலிருந்து பூதலிங்கம்பிள்ளை வெளியில் வரும் போது சிவராமன்,
                 "நல்லா வாசிச்சேள். ரொம்ப பிரமாதம்."
                 "அப்படியா சார். ரொம்ப சந்தோஷம்." சிவராமன் பிரெஞ்சு தாடி, வழுக்கை, சற்றே தொப்பை என இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை பெரியவருக்கு.

                 "நடந்துண்டே வாசிக்கறேளே கஷ்டமா இல்லையா?"
                 "அந்த சாமி மாதிரி நாங்க ஊர்வலம் வரோம். நாங்க வாசிச்சு முன்னாடி போனா தான் சாமியே வரும். இங்கயே உக்காந்துட்டா, பின்ன சாமி எப்படி வெளில வரது?"
                 "நல்லா சொன்னேள். அப்பறம் மாமா. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நீங்க கொடுத்த நாதஸ்வரம் ஆத்துல இருக்கு. எடுத்துண்டு வந்தா வாசிக்க சொல்லி தரேளா?"
                    கையில் இருந்த நாதஸ்வரத்தை கீழே வைத்துவிட்டு, "மக்கா! நீயா?", என அணைத்து கொண்டார். சிவராமன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டார்.
                   "இங்கயே வந்துட்டேன். கத்துண்டுட்டு உங்களோட சேந்து திருவிழாவுல மல்லாரி வாசிக்கறேன்."
                   "வாப்போ! வாப்போ! சொல்லும்போதே அவ்வளவு ஆனந்தம் பூதலிங்கத்திற்கு.

                   ஆறு வருடங்கள் விடுமுறைகளில் நாதஸ்வரம் கற்று கொண்டான் சிவராமன். சிறந்த வாசிப்பு. சங்கிதத்தில் ஏற்கனவே தேர்ந்தவனாய் இருந்ததாலும் வாத்தியத்தின் மீது இருந்த பிரியத்தினாலும் சிறப்பாக வாசிக்க கற்றுகொண்டான். அலுவல் காரணத்தினால் பூதபாண்டி திருச்செந்தூர் திருவிழாக்களுக்கு மட்டும் வாசிக்க முடிவு செய்தான்.

2014, திருச்செந்தூர்

                  திருவிழாவிற்கு பக்தர்கள் கூட்டம் கூடி இருந்தது. சுவாமியும் சுவாமிக்கு முன்பு நாதஸ்வர கலைஞர்களும் வந்தனர். பூதலிங்கம்பிள்ளை அருகில் அவர் கொடுத்த நாதஸ்வரத்தோடு மல்லாரி வாசிக்க தொடங்கினார் பூனூல் அணிந்த சிவராமன்.

மல்லாரி இசையை கேட்க விரும்புவோருக்கு ஒரு நிமிடம் பத்தொன்பது நொடிகளிலிருந்து,

   

Saturday, April 12, 2014

அம்மாவாசை நிலா

             "என் மகன் கோபாலகிருஷ்ணனுக்கு முப்பத்திரெண்டு வயசாகுது. இன்னும் கல்யாணம் முடிக்கல. எப்பப்பாரும் கம்ப்யூட்டரும் கையுமா இருக்கான். அப்பிடி வேல எதுவும் இல்லனா அந்த மொபைல்ல விளையாட ஆரம்பிச்சிடிறான். அப்பிடி என்னத்தான் விளையாட்டோ ரயில் ரயிலா குதிச்சிக்கிட்டு.", கோயிலில் நெடுநாள் பிறகு பார்த்த  தோழியிடம் தன் மனவருத்தத்தை கூறினாள் பகவதி.
             "பகவதி! இங்கப்பாரு. அவன் அவனக்கு யாருன்னு உள்ள இருக்கறவன் எப்பவோ எழுதிட்டான். கோபாலகிருஷ்ணன் நல்லா சம்பாதிக்கறான். அப்பப்ப அமெரிக்கா வேற போயிட்டு வரான். அப்பறம் என்ன? சம்பாத்தியமும் சும்மாவா. ரெண்டு காரு.காரைக்குடில ஒரு வீடு.போதாதுக்கு ஊட்டி ல கெஸ்ட் ஹவுஸ் வேற. அடப்போம்மா.", என பகவதிக்கு ஆறுதல் வார்த்தை கூறினாள்
            "வீட்ட கட்டிட்டே போறான். மண்டைல சொட்ட விழ ஆரம்பிச்சிடுச்சு."
            "சும்மா இரு பகவதி. மகனப்பத்தி நீயே இப்படி சொல்லலாமா? லேஸ் சொட்டைங்களுக்கு தான் கல்யாண மார்க்கெட்ல மவுசு ஜாஸ்தி. இளஞ்சொட்ட தானே அமெரிக்கா. அந்த கண்ணாடிய போட்டுக்கிட்டு லைட்டா இங்கிலீஷ் பேசினாலே போதும் உனக்கு ஈஸியா சம்மந்தி அமைஞ்சிடுவாங்க.", என மேலும் ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.
           "என்னவோ? கிருஷ்ணன்னு பேர் வெச்சிக்கிட்டு இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கான்.", என புலம்பிவிட்டு தாயார் சன்னதிக்குள் நுழைந்தார்.
         
           கோபாலகிருஷ்ணன் ஐடி கம்பெனியில் டெக்னாலஜி அனலிஸ்ட். அமெரிக்க கம்பெனி என்பதால் மாதத்தில் பாதி நாட்கள் சென்னையிலும் மீதி நாட்கள் சிலிக்கன் வேலியிலுமாய் வேலை. லேஸ் சொட்டை, பிரெஞ்ச் தாடி என முப்பது வயது மதிக்கத்தக்க ஐடி வாசியின் சகலாம்சங்களும் கோபாலகிருஷ்ணனுக்கு. மாப்பிள்ளை கேட்டு இன்னும் ஒரு வரனும் வந்ததில்லை.  பெண்கேட்டு சென்றதில்லை. எழுத்து இவனின் இன்னொரு வேலை. ஊதியமின்றி சுயதிருப்திக்காக. நண்பர்கள் வட்டாரமும் அப்படியே. அதுவும் தமிழெழுத பிடிக்கும். ஔவை தெரிந்த கம்ப்யூட்டர் காரன். எளிமையும் பிடிக்கும். ஆடம்பரமும் பிடிக்கும்.  இவனுக்கு இன்னும் திருமண எண்ணம் வந்ததில்லை. கல்லூரியில் இறுதி ஆண்டில் வந்த காதல் விண்ணப்பத்திற்கு,
          "நண்பன், காதலியிடம் காதல்கொடு
            என மன்மதனை வேண்டுகிறான்.
            இன்னொருவன், காதலிக்க காதலியாய்
            நீயே பெண்ணுருவம் எடுத்து வா
            என ரதியை வேண்டுகிறான்.
            காதல் செய்ய என்னிடம் காதலில்லை,
            நீயும் மன்மதனிடம் அழ வேண்டாம்
            காதல்தேடும் மன்மதனுக்கு காதலை தந்திடு ரதியே", என கவிலெட்டர் கொடுத்தான்.
             முதலில் கிழித்தெறியப்பட்ட கவிதை. அன்றிலிருந்து இன்றுவரை காதலிக்க காதலில்லை என்று திருமணமறுப்பு சொல்வான்.
             "டேய்! எப்பப்பாரு இதையே சொல்லாதே டா. உங்கப்பாவ கல்யாணம் பண்ணும்போது, அதுக்கு முன்னாடி 'மானே! தேனே! டியர்!' னுலாம் சொல்லியா கல்யாணம் பண்ணேன்? நிச்சயத்துல பாத்தேன். மூஞ்சு மனசுல ஏறுறதுக்குள்ள கல்யாணமே ஆயிடுச்சு. ஆனா நீயே கவித எழுதினல,
             'அம்மா அப்பா போட்டோவுக்கு மாலையிடுகையில்
               போட்டோவிலும் ஒரு காதல் சிரிப்பு
               இவ்வுலகிலன் சிறந்த காதல்'னு. கல்யாணம் பண்ணிக்கோடா.", என தன் மகனிடம் கூறினாள்.
             "என் தந்தை பிம்பத்தில் இருந்த அந்த காதல் சிரிப்பு
               எனக்கு இன்னும் எட்டாதூரத்தில். "
              "டேய். ஏன்டா? உனக்கெதாவது கோளாறா? இருந்தா வெட்கப்படாம சொல்லுடா. சரி பண்ணிடலாம்."
           
               "அம்மாவாசையில் இருள்!
                நிலா எங்கும் போய்விடவில்லை.
                பார்ப்பவர் பார்வைக்கு
                தெரியாமல் போய்விடுகிறது."
               
               "பதினஞ்சே நாள்ல பௌர்ணமி வந்துடுமே டா. "
             
                 "சாதுர்யம். என் தாயின் அழகு.
                 உன் போல் சாதுர்யம் என் கண்பட்டால்
                 பௌர்ணமி என்ன
                 அம்மாவாசையிலும் நிலவு மின்னும்."

               "இன்னிக்கென்ன ப்ராஜெக்ட் எதுவும் இல்லையா? இல்ல செல்போன் பேட்டரி தான் முடிஞ்சி போச்சா? ஒரே கவிதையா வருது?"
             
                 "ஏனோ என்னாவிற்கு கவிதை பசி
                 அல்சர் வராமல் பார்த்து கொளிகிறேன்"
           
                 "உன் கண்கள் அழகு, உன் புருவம் அழகு, உன் பற்கள் அழகுன்னு எழுதி இருந்த, இன்னிக்கு பேரன் எல்.கே.ஜி போயிருப்பான். போடா டேய். தோச ஊத்தறேன் சாப்புடு."
                "கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லல. இப்ப எனக்கு தோனல. அவளோ தான்."
               "அம்மாவாசை நிலா. கேக்க நல்லா தான் இருக்கு. சீக்கரம் நிலவ கொண்டு வர பாரு.", என சமையலறைக்குள் நுழைந்தாள் பகவதி.
                   
                எப்படியேனும் கோடியைத்தொடவேண்டும் என்ற உத்வேகத்துடன் சப்வே சர்பில் மூழ்கியிருந்தான் கோபாலகிருஷ்ணன். சப்வே சர்பில் ஒரு வேகம் வந்துவிட்டால் அலுவலாவது டெக்னாலஜி அனலிஸ்ட் ஆவது. அப்பொழுது தமிழ் வட்டத்திலிருந்து ஒருவர் செல்லில் அழைத்து மாலை அவர் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். வேலை முடிந்து நேராக நண்பர் கிஷோர் வீட்டிற்கு கிளம்பினான் கோபாலகிருஷ்ணன்.
               கிஷோர், நர்மதா, திவாகர், சந்துரு, கிரிதர், சுமதி- இவர்கள் கோபாலகிருஷ்ணனின் தமிழ் நண்பர்கள். இதில் கிரிதரும் சுமதியும் தம்பதியினர். தமிழ்பற்றினால் புரிதல் ஏற்பட்டு  திருமணம் செய்தவர்கள்.
               "என்ன? இன்னிக்கி பேச தலைப்பு கெடைச்சிருச்சா?", என எல்லோரையும் பார்த்து கேட்டான் கோபாலகிருஷ்ணன்.
              "சும்மா தான். எல்லாரும் சேர்ந்து ரெண்டு வாரம் ஆகுதே", என பதிலளித்தான் சந்துரு.
கோபாலகிருஷ்ணன்: "நல்ல விஷயம் தான்."
சுமதி                            : "அப்பறம் கிருஷ்ணன். இந்த வருஷம் கல்யாணம் பண்ணிடுவீங்க போல இருக்கே."
கோபாலகிருஷ்ணன்: "போங்க சுமதி. காதல் இல்ல."
கிஷோர்                       : "ஐயோ சீனியர்! போதும். அறமும் பொருளுமா இருந்தா எப்படி? இன்பம் எப்போ?"
கோபாலகிருஷ்ணன்: "இன்ப தேவதை வருவா. அப்போ சொல்றேன்.
நர்மதா                         : "இருங்கய்யா. எப்ப பாத்தாலும் கோபால் கல்யாணத்த பத்தியே பேசிக்கிட்டு. தோற்பன தொடரேல்."
கோபாலகிருஷ்ணன்: "நடக்காதுன்னே முடிவு பண்ணிட்டேங்களா?  ஏங்க இப்படி? அந்தம்மா தானே சொல்லிவெச்சிருக்கு மெல்லிநல்லாள் தோள் சேருன்னு. இன்னும் மெல்லிநல்லாள் கிடைக்கலைங்க."
நர்மதா                         : "அதுக்கு வீட்டுல பொண்ணு பாக்க சொல்லு. இல்ல நீ போ. இப்படியே இருந்தா?"
கோபாலகிருஷ்ணன்: "நடக்குங்க." "அப்பறம் கிஷோர். கல்கில உன் கதை படிச்சேன். காதல விட்டா உனக்கு வேற தெரியாதா?"
கிஷோர்                       : "படிச்சியா?"
கோபாலகிருஷ்ணன்: "ம். ஏன்டா இப்படி?"
கிஷோர்                       : "ஒவ்வொரு கதையிலயும் காதல் இப்படில்லாம் வரும்னு உனக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன். நீ கல்யாணம் பண்றேன்னு தெரியட்டும், உன் நிச்சையத்தன்னிக்கே நல்லா சோழனுக்கும் சேரனுக்கும் நடக்குற மாதிரி ஒரு யுத்த சரிதரமே எழுதறேன்.
                  இவ்வாறே சென்ற இவர்கள் உரையாடல்கள் இலக்கியங்களை படித்த புத்தகங்களை எல்லாம் தொட்டு முடிவுக்கு வந்தது.
                   அப்பொழுது கிரிதர், "நம்ம ஃபிரண்ட் ரமேஷ் இருக்காருல்ல. அவங்க நண்பர்கள் ஒன்னு சேந்து ரெண்டுமூணு குழந்தைகள் இல்லத்துலேர்ந்து இருந்து பசங்கள் வரவழைச்சு தீபாவளிக்கு முன்னாடி டிரஸ் சாப்பாடு எல்லாம் குடுப்பாங்க. இந்த தடவ கூப்புடுவாங்க. எல்லாரும் போலாம்." என முன்வைத்தான். எல்லோரும் வருவதாக கூறி கலைந்தனர்.
                 
                   மறுநாள் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு சென்றான் கோபாலகிருஷ்ணன். அவன் உள்ளே நுழையும்போதே, "கோபாலகிருஷ்ணா! கோபாலகிருஷ்ணா! உன்ன வரன் கேட்டு ஜாதகம் வந்துருக்கு. முதல் ஜாதகம். பொண்ணுக்கும் முப்பத்திரெண்டு வயசு. உன்னோட ரெண்டு மாசம் கம்மி. வயசு கம்மியா இருந்தா போதுமே, வருஷம் என்ன? மாசம் என்ன? பண்ணிக்கோடா." என கூறினார்.
                   "சொன்ன பாயின்ட் எல்லாம் ஞாபகம் இருக்குல்ல. அப்படி இருந்தா கண்டிப்பா பண்ணிப்பேன்."
                   "அதுவே போதும். அதுவே போதும். எங்க வேண்டாம்னு சொல்லிடிவியோன்னு பயந்துட்டேன்."
                  "என்ன தொந்தரவு பண்ணாதீங்க. வேண்டாம்னே இருந்தேன். எல்லாரும் முப்பத்தி ரெண்டு முப்பத்தி ரெண்டுன்னே பிரஷர் ஏத்தாதீங்க. இது என்ன காலை கடனா? நேரத்துல முடிக்கறதுக்கு. டோன்ட் பிரஷரைஸ் மீ வித் திஸ் மேரேஜ் திங். அங்க கிஷோர், கிரிதரும் கூட கல்யாணம் கல்யாணம்னு ஒரே புடுங்கல். திருப்பி சொல்றேன். டோன்ட் பிரஷரைஸ் மீ,"
                  "நீ இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்குவடா. எட்டே நாள்ல அம்மாவாசை பௌர்ணமி ஆகும் பாரு."
                 "அம்மா, நீங்க இப்படி எல்லாம் நினைக்காதீங்க. அப்பறம் நடக்கலைனா கஷ்டமாயிடும்."
                "உனக்கு இந்த முற தோனும். நீ வேணும்னா பாரேன்.", என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
               
                 ஞாயிற்று கிழமை தீபாவளி விழாவிற்கு வருவதாக கூறியிருந்ததால் புறப்பட்டான் கோபாலகிருஷ்ணன். ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அனைவருக்கும் இனிசியல் ஆர். அனைவரும் தங்கள் தந்தையின் பெயர் ராஜேஷ் என்று கூறியே ஆரம்பித்தனர். ராஜேஷ் அந்த குழந்தைகள் இல்லத்தை நடத்துபவர். இவ்வளவு நாட்கள் ஏன் இது போல் ஒரு எண்ணம் வரவில்லை என எண்ணினான். இனி நாமும் ஏதோ செய்ய வேண்டும் என்ற  எண்ணம் உள் எழுந்தது. அந்த இல்லத்தின் ஒரு ஆசிரியையை பார்த்து அம்மாவாசை சஷ்டி வரை சென்றது. முதல் காதல் என்றே சொல்லலாம். இறக்கத்தினால் வந்த ஒரு அதீத பிரியம். நற்குணம் பார்த்து காதல் வரலாம் என உள்ளிருந்துவ் ஒரு மாய குரல். கல்யாண பிரஷர் வேறு சேர்து அந்த ஆசிரியையை நோக்கி கோபாலகிருஷ்ணனை செலுத்தியது. மிக அருகில் சென்று, அப்பெண்ணின் கால்மேட்டியை பார்த்து சற்றே தோற்று திரும்பினான் கோபாலகிருஷ்ணன்.
               "எங்க காதலில்லாம கதை எழுத வேசிடுவியோனு ஒரு செகண்ட் பயந்துட்டேன். கோபாலகிருஷ்ணனை நம்பினோர் கைவிடப்படார். காதல சொல்லி ஒரு புரட்சி செய்ய வேண்டியது தானே!"
              "நீ வேற. உங்ககிட்ட தமாசுக்கு சொன்னேன். அவங்கள பாராட்டணும்னு தோனிச்சு. சேவைக்கு நன்றின்னு சொல்லிட்டு வந்துட்டேன். கருணை பார்த்து காதல் செய்ய கூடாது."
             "ஆமாம். கால் மெட்டி,கழுத்து தாலி இது போன்றவைகளையும் முதலில் பார்க்க வேண்டும்.", என கிஷோர் கூறினான்.

            "டேய். அவங்க வீட்டுக்கு போகணும். இன்னுமா கிளம்பல?", பெண் பார்க்க செல்ல தயாரான பகவதி கோபாலகிருஷ்ணனிடம் கூறினாள்.
            "போயிட்டு. பாவம் அந்த பொண்ண பாட்டு பாட சொல்லி, எதுக்கு மா?"
            "கச்சேரி பண்ண சொல்ல தான். நீ சினிமா நெறைய பாத்து கெட்டு போயிருக்க. நேரா போவோம். நாங்க பெரியவங்கல்லாம் பேசுறோம். நீங்க ரெண்டு பெரும் தனியா பேசுங்க. இப்படி அப்படின்னு ஒரு ஒருமணிநேரம் ஆக்கிடறேன். ஒரு செகன்டாவது தோணும்டா. எதாவது பொண்ணு கிட்ட ஒன் அவர் கண்டினுயஸா பேசிரிக்கியா?"
           "வை மாம்?"
           "ஸ்டார்ட் கிருஷ்."

            பெண் வீட்டினை அடைந்தனர். முதல் கவிதை கிழித்த பெண்ணே அங்கு வரனாய். கூட படித்தவள் என்று கோபாலகிருஷ்ணன் சொல்லிகொள்ளவில்லை. இருவரும் பேச சென்றனர்.
               
           "என்ன கிருஷ்ணன்? முடியெல்லாம் போய் சொட்டை?"
           "கிண்டலா? எப்படி இருக்க?"
           "நல்லா இருக்கேன்."
           "இன்னுமா கல்யாணம் ஆகல?" என்று கேட்கும் போதே நம்மாலே வேண்டாம்னோம் இவளுக்கு ஆவது கல்யாணம் ஆவது என்ற உள்ளோட்டம்.
          "காதல் தோன்றவில்லை." எத்தன தடவ இத சொல்லி டார்ச்சர் பண்ணியிருப்பே என்று இவளுக்குள் ஒரு உள்ளோட்டம்.
           "அய்யோ வேண்டாம்."
           "மன்மதன் கிடைக்கவில்லை."
           "பரவா இல்ல. பொண்ணு பாக்கற பேர் வழின்னு நமக்கு மீட் பண்ண ஒரு சான்ஸ்."
            இப்படியே பேசிக்கொண்டிருந்தால் ஒரு வேலை சரி என்று சொல்லிவிடுவோமோ என்று எண்ணி அந்த பெண், "ஆமாம். உன்ன எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது பா. மீட்டிங்னு சொன்னியே அதோட போதும்.", என்று கூறும் போதே பண்ணேன் ப்ளீஸ் என மனதின் குரல்.
             "ஆமாம். எஸ்கேப் ஆயிடு. பொண்ணுக்கு கொஞ்சம் ஹிப் சைஸ் ஜாஸ்தி, பிடிக்கலன்னு சொல்லிடறேன்."
             "ஏய்!"
             "இல்ல இல்ல. திருக்குறள்ல நாபத்திமூனாவது அதிகாரத்துக்கு பெயர் தெரியலன்னு சொல்லிடறேன். ஓகேவா?" என சொல்லும்போதே இவனுக்குள்ளும் ஒரு உள்ளோடல் அழகா இருக்கா பண்ணிக்கலாம்னு சொல்லிடலாம். ஆனா காலேஜ்ல ஓவரா கவிதைலாம்  சொல்லிட்டு வேறவழியில்லாம சொல்றான்னு பின்னாடி நினைக்ககூடாது என்ற பயம் கலந்த உள்ளோடல்.
            "சரி. நான் இப்போ அதே லெட்டர் தரேன். நீ ஒரு கவிதை எழுதி தரனும். உன் பதிலையே எழுதி தாயேன்." சரி என்று சொல்லிவிடுவான் என்ற நம்பிக்கை.
             "பதினோரு வருடங்கள்
               ரதி இன்னும் தன மன்மதனை தேடி
               மன்மதன் வருவான் என்ற ஒரு நம்பிக்கை
                இந்த ரதி அவ்வளவு நல்லவள்
                காதினில் இது கேட்டு கொண்டிருக்கிறது
                இந்த ரதிக்கில்லாத மன்மதனுக்கு."
               "தேங்க்ஸ். செரி போலாம் வா.", என கிளம்பினர். கோபாலகிருஷ்ணன் சென்றவுடன் அந்த கவிதையும் கிழிக்கப்பட்டது.

              "காதல் தோன்றிய பெண்ணுக்கோ காலில் மெட்டி
                இன்று காதல் சொல்ல வாய்ப்பு
                நிலா தெரியும் தருவாயில்
                ஈகோ சூரியன் மறைத்திற்று
                என்று சூரியன் விலகும்?
                என்று நிலா கண்ணில் படும்?
                என் தாய் நண்பர்களிடம் இருந்து தப்பிக்க
                கல்யாண பைத்தியம் இன்று நான் இந்த சூழலால்" என தனக்கு தானே கவியரங்கம் நடத்தி காரில் வீடு செல்கையில்  ஒரு இருபத்தியாறு வயது மதிக்கத்தக்க சேலை கட்டிய பெண் தெருவோரம் இருக்கும் பள்ளியிலிருந்து வெளியே வந்தால். கல்யாண பிரஷர்  குக்கர் வெடித்து அந்த பெண்ணை நோக்கி சென்றது. ஆறே மாதத்தில் நடந்தேறியது ராதாகல்யாணம் - கோபாலகிருஷ்ணன் கல்யாணம்.