மலைமோதி மேகங்கள் மழையாக பொழியும்
அவளிட்ட கோலம் மழையோடு போகும்
கோலத்தை காணாது சிற்றெறும்பு வருந்தும்
அதன் கண்ணீரும் மழைநீரில் மெதுவாக கலக்கும்
கூரையில் காகம் நனைந்தே மகிழும்
அவள் விரட்ட காகமும் பறந்தே போகும்
ஏன் விரட்டினோமென அவள் மனம் வருந்தும்
அவள் சோகம் கண்டு காகம் திரும்பும்
காற்றினில் கதவு வேகமாய் அடிக்கும்
அவள் பாடும் பாட்டுக்கு தாளங்கள் போடும்
நொடியேனும் அவள் பாடாது போனால்
டமடம என்று கோபத்தில் துடிக்கும்
மரங்கள்தான் பூரித்து காற்றலை வீசும்
அவள் சிரிப்பலையின் திசையில் கலந்திட்டு செல்லும்
அவள் முகமோ நொடியேனும் வாடி போனால்
காற்றும் கூடவே நின்றே போகும்
மின்னலொளி இவளை கண்டிட்டு போகும்
இவளொளி மின்னலொளி நேர்நேராய் பார்க்கும்
அதனாலே பூகம்பம் இடியொலியாய் வாரும்
வான் தோற்று அவமானம் தாங்காது இருளும்
அவள் இடைதொட்ட நீர்த்துளி தற்பெருமை கொள்ளும்
அவள் கண்ணிமையை தொட்ட மழைநீரோ மகிழும்
அவள் உடைதொட்ட நீர்த்துளி மறுஜென்மம் கேட்கும்
அவள் கால்பட்ட நீரோ சந்தோஷத்தில் குதிக்கும்
மலை மோதாதா மேகம் துக்கம் கொள்ளும்
திசைதிரும்பி சென்று மலைமோத எண்ணும்
அவள் மழைபோதும் என நினைக்க சோகம் கொள்ளும்
மறுபடியும் அங்குவர பிரமனை வேண்டும்
வெய்யில் வர சில நீரோ வான் நோக்கி செல்லும்
மீண்டும் வந்து அவளிடைதீண்ட ஆசை கொள்ளும்
மீண்டும் வந்து அவளிடைதீண்ட ஆசை கொள்ளும்
ஓடை சென்று கலந்திட்ட நீரோ
மீனுக்கும் பாம்பிற்கும் அவளழகை உரைக்கும்
Super thambi
ReplyDelete