Saturday, November 3, 2012

இறைகளின் யுத்தம்

 நிபந்தனை: இக்கதை எந்த ஒரு கடவுளையும் மதத்தையும் இழி செய்ய எழுதப்பட்டதல்ல. பஞ்ச ஈஸ்வரம் என்று அழைக்கப்படும் ஒரு காலத்தில் உலகிலேயே பெரிய இறைவழிப்பாட்டு ஸ்தலமான இலங்கையின் கோணேஸ்வரர் கோவில், இன்ன பிற நான்கு கோவில்கள் போர்த்துகீசியர்களால் தாக்கப்பட்டதை கருவாக கொண்டு கற்பனையாக எழுதப்பட்டதே இந்த கதை. சில நிஜங்கள் சொல்லும் கதை. "இந்துக்களின் ரோமாக திகழ்ந்தது கோணேஸ்வரம்." - பெர்நாவோ டி க்வெயர்ஸ். போர்ச்சுகீஸ் வசனங்கள் தமிழிலேயே இருக்கின்ற. படிப்பவர் புரிந்து கொள்வதற்கும், எனக்கு போர்ச்சுகீஸ் தெரியாது என்பதற்காகவும்.





16 ஆம் நூற்றாண்டு 
திருவனந்தபுரம், திருவிதாங்கூர் ராஜ்ஜியம் 

                          "கண்கன்!! இந்த வருஷம் சித்திர வருஷபொறப்புக்கு ஈழநாடு அழைச்சிண்டு போ டா. பஞ்ச ஈஸ்வரத்துக்கும் போலாம்டா. வருஷ பொறப்பன்னிக்கி கோணேஸ்வரத்துல இருக்கற மாறி போலாமா? அந்த பெரிய தேருல கோணேசன பாக்கணும்டா ", வீரவள்ளி தன் மகனிடம் கேட்டாள். வீரவள்ளி சோழநாட்டின் திருவையாற்றைச் சேர்ந்தவள். செல்வத்தேவை அவளை இங்கு சேர்த்தது. 
                         "சுசீந்திரத்திலேயே சிவன்கோவில் இருக்கே. அங்க போக கூடாதா? அவளோ தூரம் கடல் பயணம் போகணுமா?" கண்கன் கேட்டான்.
                        "உங்க அப்பா காசநோய் வந்து போறதுக்கு முன்ன அங்க அழைச்சிண்டு போயிருந்தார். அப்ப நீ என் வயத்துல இருந்த. எவளோ பெரிய கோவில் தெரியுமா டா? நம்ம தெருவ விட பெருசு. நம்ம முப்பாட்டனுக்கு முப்பாட்டன் காலத்துல கட்டின கோவில் டா. அந்த கோவில் கோபுரத்துல தங்க முலாம் செஞ்சது நம்ம வம்சத்து ஆளுடா. அந்த கோவில்ல மட்டும் தான் தங்க கோபுரம் இருக்கு வேற எங்கயும் கெடயாது. உன்ன அழைச்சிண்டு வரனும்னு உங்க அப்பா அப்பவே ஆசப்பட்டார். நான் இருக்கறச்சையே கூட்டிண்டு போயிடறேன்."

திருக்கேதீஸ்வரம், ஈழநாடு மேற்குபகுதி 

                           "சில வெள்ளையர்கள் நம்ம ஊருக்கு வந்துருக்காங்க. இங்க வியாபாரம் செய்யனுமாம். அவங்களோட இருந்து  ஈழநாட்ட சுத்திக்காட்டச்ச்சொல்லி கேட்டாங்க. நெறைய வெள்ளி தருவாங்களாம்." எல்லாளன் தன் நண்பர்களிடம் கூறினான். 
                          "எந்த நாடு? எங்கிருந்து வந்தாங்களாம்?", குமரன் ஆர்வத்துடன் கேட்டான்.
                          "போர்ச்சுகல். எட்டு மாசம் ஆச்சாம் அவங்க இங்க வந்து சேர. 16 கப்பல்ல வந்திருக்காங்க. பஞ்ச ஈஸ்வரம் சுத்தி காட்டணுமாம்" 
                          "இங்க யாரும் ஏசுவ வழிபடறது இல்ல. ஒரு சர்ச் கூட இங்க இல்ல. நம்ம தான் கட்டணும் போல இருக்கு." போர்ச்சுகீஸில் ப்ரெட்ரிக் கன்ச்டண்டினோவிடம் சொன்னான்.
                          "(போர்ச்சுகீஸில்) இவங்க யார வணங்குறாங்க?" கேட்டான் தாமஸ் டிசோசா. 
                          "(போர்ச்சுகீஸில்) மலபார்ல வழிபடறாங்களே சிவன் அவரத்தான் இங்கயும் வழிபடறாங்க. சிலர் புத்தர்னு யாரையோ வழிபடுறாங்க." கூறினான் பிரெட்ரிக்.
                          "(போர்ச்சுகீஸில்) இங்க இருக்கற எல்லாரையும் ஏசுவ வணங்க வெக்கறேன். ஏசுவயும் கிறிஸ்தவத்தையும் உலகம் முழுதும் பரப்புவேன்." கர்ஜித்தான் கன்ச்டண்டினோ. 
                           அப்போது எல்லாளன் அறைக்குள் நுழைந்தான்.அவர்களுக்கு உதவ சம்மதித்தான். கூறியது போல அனைத்து கோவிலுக்கும் கூட்டி சென்று தரிசனம் செய்து வைப்பதாகவும் கூறினான். அவனுக்கு போர்ச்சுகீஸ் மொழி பயிற்சி அழிக்க கன்ச்டண்டினோ உத்தரவிட்டான்.
                           இரண்டு மாதங்கள் கழித்து பஞ்ச ஈஸ்வரங்களை பற்றி கன்ச்டண்டினோவிடம் கூறினான் எல்லாளன். அவர்களின் சதியை இவன் அறிந்திருக்கவில்லை. எல்லாளனை பொருத்தமட்டில் இவர்கள் வியாபாரிகள், ஈழநாட்டை சுற்றி பார்க்க விரும்புபவர்கள் அவளோ தான். 2000 போர்ச்சுகீஸியர்களை அனைத்து கோவிலுக்கும் அழைத்து சென்றான். கன்ச்டண்டினோ கோவில்களின் ஆடம்பரத்தை பார்த்து பிரம்மித்தான். எல்லோரும் போர்ச்சுகீஸியர்களை சிறந்த முறையில் வரவேற்றனர். போர்ச்சுகீஸியன் ஒருவன் கோவில்களை அப்படியே படமாக வரைந்தான்.

திருவனந்தபுரம் 

                         "அம்மா. கோணேஸ்வரம் போக ஏற்பாடு ஆய்டுத்து. இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பவேண்டியது தான். மணிகண்டனும் சிவசிதம்பரமும் நம்மளோட வராங்க. நீ ஒத்துன்டா, மதுமதியும் வரேன்னா." கண்கன் வீரவள்ளியிடம் சொன்னான்.
                          "அவ வைணவச்சி ஆச்சே. அவ எதுக்கு டா. நா ஒத்துக்கமாட்டேன்."
                          "நீ தான் ராமர் ராமேஸ்வரத்துல சிவனுக்கு பூஜ பண்ணினார்னு எனக்கு சொல்லிக்கொடுத்த. ராமர் விஷ்ணுவோட அவதாரத்துல ஒன்னு தானே. அவர் அப்ப நாமக்காரர் தான். அவர் சிவன வணங்கலாம். மதுமதி கூடாதோ?"
                         "எனக்கு சொல்லி தரயா. எப்ப பாரு விதண்டாவாதம். வரட்டும். வரட்டும்."
                         "அப்ப  நான் அவ கிட்ட சொல்லிடறேன். சம்சயம் இல்லையே."
                         "இல்லை. இல்லை. வரட்டும்"

திருகேதீஸ்வரம் திரும்பும் வழியில் 
                         
                        "(போர்ச்சுகீஸில்) அய்யா. கோணேஸ்வரம் கோவில் தான் உலகத்துலேயே பெரிய கோவில். வருஷபொறப்பன்னிக்கு சுவாமி தேர்ல வரும் பாருங்க அப்பிடி இருக்கும். நீங்க கூடப்பாத்தீங்களே தேர் பெருசா. ஞாபகம் இருக்குல்லே. அந்த கோவிலுக்கு பயங்கரமா சொத்து இருக்கு. தங்க நகைகள மட்டும் பத்து அறைகள்ல வைக்கலாம்.", எல்லாளன் கான்ச்டண்டினோவிடம் கூறினான்.
                      "ஜனவரி 1?"
                      "இல்ல சித்திரை 1."
                      "சைத்ரா ஒன்"
                      "(போர்ச்சுகீஸில்) தமிழ் வருஷப்பொறப்பு."
                      "(போர்ச்சுகீஸில்) நான் அன்னிக்கி பாக்கணும்"

திருகேதீஸ்வரம்    
                        
                      "(போர்ச்சுகீஸில்) நேரம் வந்துருச்சு. இதான் நம்ம நேரம். முட்டாள் எல்லாளன் நம்ம நோக்கம் தெரியாம எல்லாத்தையும் காட்டி கொடுத்துட்டான்.  நாளை வரட்டும், திருகேதீஸ்வரம் கோவில நம்ம கொள்ளையடிப்போம். அதே மாதிரி வருஷபொறப்புக்கு முன்னாடி பஞ்ச ஈஸ்வரத்தையும் கொள்ளை அடிப்போம். அந்த சிவன் சிலைய என் காலால உதச்சி அதே இடத்துல ஏசுராஜா  சிலைய வெக்கறேன். உலகத்துலேயே பெரிய கோவில்ல கடவுள் நம்ம கர்த்தர். ஹா ஹா ஹா எல்லாம் அந்த கர்த்தருக்காக. அல்லேலுயா" தன் மக்களிடம் முழக்கமிட்டான் கன்ச்டண்டினோ.
                       எல்லாளனும் அங்கு இருந்தான். முதல் முறையாக அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டான். ஊருக்கு வேகமாக ஓடினான். தன நண்பர்களிடம் போர்ச்சுகீஸியர்களின் திட்டங்களை கூறினான். இருக்கும் ஆயுதங்களை எடுத்து குமரனை கோணேஸ்வரத்துக்கும், கதிர்காமனை தொண்டேஸ்வரத்துக்கும், மார்த்தாண்டனை நகுலேஸ்வரத்துக்கும், சேனாபதியை முன்னேஸ்வரத்திற்கும் அனுப்பி வைத்தான். 
                        "வருடபிறப்புக்கு மக்கள் வெள்ளமா வருவாங்க. நாம தான் உயிர் சேதம் இல்லாம பாத்துக்கணும். கோவிலையும் அந்த சதிகாரங்க நெருங்காம செய்யணும். செய்வோம். கடவுள காக்க மனுஷனுக்கு வாய்ப்பு செய்வோம்." எல்லாளன் தன நண்பர்களிடம் கூறி அனுப்பினான்.
                       அவர்கள் சென்றவுடன், போர்ச்சுகீஸியர் இருக்கும் இடத்திற்கு சென்றான். புதிதாக இன்னும் ஆயிரக்கணக்கில் இருந்தனர். புதிதாக ஆயுதங்கள் வேறு. தேர் போல் சக்கரம் கொண்ட ஆயுதமும் இருந்தது. உருண்டையாக லட்டு போல கருநிறத்தில் ஆயுதங்கள் இருந்தன. ஒரு சிலர் வட்டங்களை வரைந்து டப் டப் என்று அதில் எதை வைத்தோ சுட்டு கொண்டிருந்தனர். அந்த ஆயுதத்தில் இருந்து வில்லிலிருந்து அம்பு செல்வது போல கல் வடிவில் ஒன்று சென்றது.கன்ச்டண்டினோவிடம் இவைகளைப்பற்றி எல்லாளன் கேட்டான். "(போர்ச்சுகீஸில்)துப்பாக்கி. இத அழுத்தினா குண்டு போய் ஆள சுடும். ஆள் 5 நொடில செத்துடுவான். இது வெடிகுண்டு, இது பீரங்கி.", பட்டியலிட்டான் கன்ச்டண்டினோ. எல்லாளன் ஆபத்து மேலும் அதிகமானதாய் உணர்ந்தான். அவன் கிறிஸ்தவனாக விரும்புவதாய் கன்ச்டண்டினோவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
                        கோவில் பூசாரி வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான். பூஜாரியிடம் நிலையை விளக்கி அவரை கோவிலுக்கு அழைத்து ஓடினான். இருவரும் தங்களால் இயன்ற அனைத்து நகை மற்றும் தூக்குமளவு எடை கொண்ட சிலைகளை எடுத்தனர். சுடுகாட்டின் அருகே நிலத்தை தோண்டி அங்கு அவைகளை மறைத்து வைத்தனர். அடையாளமாக எல்லாளன் அங்கு தன் குதிரையை அருகிலிருந்த மரத்தில் கட்டினான். 

அடுத்த நாள்
முன்னேஸ்வரம்   .     
                          "என் பெயர் சேனாபதி. திருகேதீஸ்வரத்தவன். இந்த கோவிலுக்கு வந்தாங்களே போர்ச்சுகீஸ் காரங்க பஞ்ச ஈஸ்வரத்தையும் தரைமட்டமாக்க நினைக்கிறாங்க. அவங்க கோவிலாவும் மாத்த போறாங்கலாம். திருகேதீஸ்வரத்துல இருந்து இங்க படையோட வருவாங்க. நம்ம ஒண்ணா சேந்தா அவங்கள தடுக்கலாம்.", சேனாபதி கோவில் வாசலில் இருந்து ஊர் மக்கள் அனைவரிடமும் கூறினான்.
                          தங்கள் உயிரையே கொடுக்கவும் தயார் என பலர் முன்வந்தனர். போர்ச்சுகீஸியர்களின் அபாயகரமான ஆயுதங்களை பற்றி இவர்கள் அப்போது  அறிந்திருக்கவில்லை.

நகுலேஸ்வரம் செல்லும் வழியில் 
                          மார்த்தாண்டன் நகுலேஸ்வரம் செல்லும் வழியில் ஒரு கடும் விஷம் கொண்ட பாம்பு அவனைத் தீண்டியது. விஷமேரி துடிக்க ஆரம்பித்தான் மார்த்தாண்டன். மக்களை காக்க முடியாமல் போனதே அந்த கடவுளையே காக்க வாய்ப்பு வந்தும் முடியாமல் போனதே என்று வருந்தினான். துயர் மிகுந்து தானே தன தலையை அறுத்து மாண்டான் மார்த்தாண்டன். 

தொண்டேஸ்வரம் செல்லும் வழியில் 
                          கதிர்காமன் குதிரை ஓட்டத்தில் வல்லவன். அதனாலேயே திருகேதீஸ்வரத்திலிருந்து அதிக தொலைவில் இருக்கும் தொண்டேஸ்வரத்திற்கு கதிர்காமனை அனுப்பினான் எல்லாளன். அது போல் தொண்டேஸ்வரத்தையும் வந்தடைந்தான். வரும் வழியில் உள்ள சிற்றரசர்களையும் அவர்கள் பட்டாளத்தையும் ஆபத்தை விளக்கி தன்னுடன் கூட்டிச்சென்றான். அதில் பாதியினரை கோணேஸ்வரம் அனுப்பினான்.


கோணேஸ்வரம் செல்லும் வழியில் 
                         குமரன் எல்லாளனை நன்கு அறிந்தவன்; உயிர் தோழன். அவன் மனதில் கோணேஸ்வரத்தை எவ்வாறு காக்கலாம் என்பதே ஓடிக்கொண்டிருந்தது. கதிர்காமன் கண்டி ராஜாவிடம் கூறி அவர் படையை அனுப்புவதாகவும் கூறி இருந்தான். குமரன் கோவிலை அடைந்தான். கோவில் திருவிழாக்கோலமாய் இருந்தது. அவன் கோவிலுக்கு நேரவிருக்கும் ஆபத்தினை கூறியும் அதை யாரும் ஏற்க விரும்பவில்லை. விழா நடக்காமல் இருக்க கிளப்பப்பட்ட பொய் செய்தி என எண்ணினர்.





திருகேதீஸ்வரம்       

                          கான்ச்டண்டினோ அவனின் படையுடன் எல்லாளன் உதவியோடு கோவிலை அடைந்தான். கோவிலில் மீதமிருந்த நகை சிலைகளை தன் வசமாக்கினான். கிடைத்த நகை அளவினையும் இடையையும் கண்டு ஆச்சரியப்பட்டான். "(போர்ச்சுகீஸில்) இந்த சின்ன கோவில்லையே இவளோனா அப்போ கோணேஸ்வரத்த நினச்சி பாருங்க. அல்லேலூயா எல்லாம் கர்த்தருக்கே. அல்லேலூயா  அல்லேலூயா"  அனைவரும் அல்லேலூயா என உரக்க பல முறை கூறினர். எல்லாளன் முந்தைய நாள் சிவனின் சிலையை எடுக்கவில்லை. எடை அதிகம் ஆயிற்றே. அந்த சிலையினை பார்த்த கான்ச்டண்டினோவிற்கு  ஒரு திட்டம் தோன்றியது. ஊர் மக்கள் அனைவரையும் கோவிலுக்கு அழைத்தான். அனைவரும் வந்தவுடன் ஊர்மக்கள் முன்பு சிலையில் சிறுநீர் கழித்தான். சிறுநீர் கழித்தவாறே  அல்லேலூயா அல்லேலூயா என உரக்கச் சொன்னான். மக்கள் அனைவரையும் கிறித்துவ மதத்திற்கு மாறுமாறு ஆணையிட்டான். அதை உறுதி செய்ய ஒவ்வொருவராக வந்து சிலையினில் சிறுநீர் கழிக்கச்சொன்னன். அவ்வாறு செய்யாவிடில் ஆண்களின் ஆண்குறியும் பெண்களது ஒரு மார்பகமும் அறுக்கப்படும் என அச்சுறுத்தினான். முதலில் கோவில் பூஜாரியை சிலையின் மேல் சிறுநீர் கழிக்கச்சொன்னான். அவர் அதனை செய்யாததால் அவர் ஆண்குறியை அறுத்தான். அடுத்து எல்லாளனை சிறுநீர் கழிக்கச்சொன்னான். எல்லோரும் மறுத்தால் அனைவருக்கும் இதே நிலைமை தான். மற்ற கோவில்களை காக்க வேண்டுமாயின் இப்போது இதனை ஒப்புக் கொள்வதே சரியென எண்ணினான். போர்ச்சுகீஸியர்களுக்கு தமிழ் தெரியாதமையால் இவர்களின் நோக்கத்தை மக்களுக்கு  "என் மக்களே இந்த சதிகாரர்கள் இதே போல் மற்ற ஈஸ்வரங்களையும் அழிக்க நினைக்கிறார்கள். இங்கிருக்கும் உயிர்கள் இவர்களை விரட்டியடிக்க தேவை. இப்போதைக்கு ஒற்று கொள்ளுங்கள். குருக்களின் குறியினை அறுத்தவர்கள் பிணங்களை ஈச்சைகளுக்கு உணவாக்குவோம்." என எடுத்துரைத்தான். கான்ச்டண்டினோ எல்லாளனிடம் எனா கூறினான் என்று கேட்க, "(போர்ச்சுகீஸில்) மக்களை ஒப்புக்கொள்ளுமாறு சொன்னேன். உங்களின் ராஜ்ஜியத்திலும் கிறித்துவ மதத்தின் வாழ்க்கையிலும் பொற்காலம் அமையும் என கூறினேன்" என்று எல்லாளன் சொன்னான். அனைவரும் மதம் மாற ஒற்று கொண்டு அவன் கூறியவாறு செய்தனர். எல்லாளன் ஆல்பர்ட் ஆனான். போர்ச்சுகீஸியர்கள் வெற்றியில் துள்ளிக் குதித்தனர்.கோவிலை அடிமட்டமாக்கி அங்கு ஒரு கிறித்துவ தேவாலயத்தை அமைத்தனர். கான்ச்டண்டினோ ப்ரெட்ரிக் மற்றும் தாமஸை முன்னேஸ்வரம் மற்றும் தொண்டேஸ்வரத்திற்கு சென்று அங்குள்ள கோவில்களை தேவாலயம் ஆக்குமாறு கட்டளை இட்டான். எல்லாளனை நகுலேஸ்வரத்திற்கு அனுப்பினான். மேலும் தானே கோணேஸ்வரம் செல்வதாக கூறினான். அனைவரையும் 12 ஆம் தேதி கொநேச்வரம் வருமாறு ஆணையிட்டான்.

அடுத்த நாள் ஏப்ரல் 10
திருவனந்தபுரம்
                          "அம்மா நம்ம இன்னிக்கி சாயும் காலம் கிளம்பனும். பஞ்ச ஈஸ்வரம் போறவங்களுக்கு கப்பல் ஏற்பாடு செஞ்சிருக்காரு அரசர்.", கண்கன் வீரவல்லியிடம் தயாராக சொன்னான். மேலும், "நான் மணிகண்டன், சிவசிதம்பரம், மதுமிதா கிட்டயும் தயாராக சொல்ல போறேன். துணிமணிகள கட்டிவெசிக்கோ அம்மா."
"ரெண்டு வாரத்துக்கு தேவயானதுகள எடுத்து வெச்சிக்க சொல்லுடா."

முன்னேஸ்வரம் 
                       "அவர்கள் எந்நேரமும் வரலாம். உங்கள் ஆயுதங்களுடன் தயாராகுங்கள். அவர்களுக்கு நாம் யாரென்று காண்பிப்போம்.", சேனாபதி அங்கு கூடியிருந்தவர்களிடம் கூறினான்.
                        அனைவரும் போர்ச்சுகீஸியர்களை விரட்டி அடிக்கும் முனைப்புடன் தயார் ஆகினர். எதிர்பார்த்தவாறே பிரெட்ரிக் மற்றும் தாமஸ் டிசோசாவின் படை கோவிலின் வாசல் முன் சூழ்ந்தது. சேனாபதி அவர்கள் முன் சென்று, "போர்ச்சுகீஸிய அசுரர்களே!! ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச் சொல்லும்  மதத்தினவராமே நீங்கள். ஆனால் மதக்கொள்கைகளை மீறுகிறீர்கள். உங்கள் தெய்வமும் கண்டுகொள்ளவில்லை. எங்கள் தெய்வமோ அசுரர்களை அழிப்பதற்கே ஒவ்வொரு முறையும் பிறக்கிறான். இதோ அசுரர்களை நீங்கள் வந்துள்ளீர்கள். அவருக்கு வேலை வேயக்காமல் நாங்களே உங்களை அழித்திடுவோம். திரு..." என்று கூறிக் கொண்டிருக்கும்போதே ஒரு துப்பாக்கி குண்டு அவன் திருநீர் அணிந்திருந்த நெற்றியைப் பெயர்த்தது. சுட்ட போர்ச்சுகீஸிய சிப்பாய், "(போர்ச்சுகீஸில்) எதிரி அதிகமாய் பேசினால் பிடிக்காது" என கூறியவாறே சுட்டு வீழ்த்தினான். அவன் முதுகில் தட்டிக்கொடுத்த பிரெட்ரிக், "(போர்ச்சுகீஸில்) பாருங்கள். நீங்கள் தாக்கப்படும்போது உங்கள் கடவுள் காப்பாற்ற வரவில்லை. அவரை நம்பி முடமாகாதீர்கள். கிறித்துவ மதத்திற்கு மாறுங்கள். உயிருடன் கிறித்துவனாக வாழ விரும்புபவர்கள் உள்ளே செல்லுங்கள். மற்றவர்கள் இங்கே குண்டு பட்டு செத்து மடியுங்கள்." என அதட்டினான். உயிர் பயத்தில் பலர் கோவிலுக்குள் ஓடினர்.மீதமிருந்த அனைவரையும் பிணமாக்கினான் பிரெட்ரிக். கோவிலுக்குள் சென்ற சிலர் நகைகளை எடுத்துக்கொண்டு போர்ச்சுகீஸியர்கள் வருமுன் பின்வழியே தப்பித்து தொண்டேஸ்வரம் நோக்கி சென்றனர். போர்ச்சுகீஸியர்கள் கோவிலை இடித்து தேவாலயம் ஆக்கினர். லிங்கம் இருந்த இடத்தில் இப்போது சிலுவையில் ஏசு.

நகுலேஸ்வரம் செல்லும் வழியில் 
                           எல்லாளன் அவனோடு அனுப்பிவைக்கப்பட்ட படையோடு நகுலேஸ்வரம் நோக்கி புறப்பட்டான்.500 சிப்பாய்கள், 4 பெட்டிகளில் வெடிகுண்டுகள், பத்து பீரங்கிகளோடு அவனுடன் சென்றனர். ஒவ்வொரு சிப்பாயிடம் ஒரு பெரிய துப்பாக்கியும் இருந்தது. பாதை மாற்றி அழைத்து செல்லலாம் என்று நினைக்கையில் இவர்களில் பலர் இவனோடு கோவிலுக்கு வந்திருப்பதால் அது சாத்தியமாகாது என்று விளங்கியது.
வேறு எதை செய்யலாம் என்று யோசித்தவாறே இருந்தான். இவர்களோடு திருகேதீஸ்வரத்தை சேர்ந்த 5 சமையல்காரர்கள் வந்தனர்.
                          சட்டென எல்லாளனுக்கு ஏதோ தோன்றியது. சமையல்காரர்களை அழைத்தான்.
"சொக்கா இந்த மிருகங்களோட திட்டங்கள நீ நெனைச்சா தடுக்கலாம். கருவேப்பிலை பதிலா விஷ இலைகளே சேறு. சாப்டுட்டு சாகட்டும். அவங்க ஆயுதங்கள எடுத்துட்டு கோணேஸ்வரம் போவோம்."
"இது நேத்தே உங்களுக்கு புலப்பட்டுருந்தா கான்ச்டண்டினோல இருந்து எல்லாரையும் சாகடிச்சிருக்கலாமே "
"நேத்து அது தப்பா தெரிஞ்சுது. இன்னைக்கு வேற வழி இல்ல. கண்ணனே பாரதத்துல கர்ணன மாய்க்க சதி செஞ்சிருக்கானே."
"ஆகட்டும் எல்லாளா தயார் ஆகு."
                        சொக்கனும் மற்ற சமையல்காரர்களும் போர்ச்சுகீஸியர்களுக்கு உணவு பரிமாறினார். உணவு உண்டு அனைவரும் மயங்கி விழுந்தனர். எல்லாளனுக்கு விஷம் மட்டும் உயிரை மைக்குமோ என சந்தேகம். அனைவரின் தலையையும் வாளினால் வெட்டி தீர்த்தான். அனைவரிடம் இருந்த துப்பாக்கிகளி எடுத்து சாக்கினில் கட்டச்செய்தான். எல்லாளன் கோபத்தில், " முண்டங்களே! சிவன் மீதே சிறுநீர் கழிக்க வைத்துவிட்டீர்களே! உங்களது வெட்டப்பட்ட தலைகளை வனவிலங்குகள் விழுங்கி மழமாகி மண்ணோடு மண்ணாகுங்கள். 12 ஆம் தேதி கான்ச்டண்டினோவிற்கும் இதே நிலைமை தான். அவனிடம் ஆவிகளாகி போய் சொல்லுங்கள். மழமாகட்டும் அவன் தலையும்." என காடு முழுதும் கேட்கும்வண்ணம் கத்தினான்.
                       சொக்கனும் சமையல்காரர்களும் எல்லாளனுக்கு உதவியாக
ஆயுதங்களை எடுத்துக்கொண்டு நகுலேஸ்வரம் கப்பல்கரைக்குச் சென்றனர்.

தொண்டேஸ்வரம் 

                       முன்னேஸ்வரத்திளிருந்து தப்பித்தவர்கள் நகை மற்றும் சிலைகளுடன் தொண்டேஸ்வரம் வந்து அடைந்தனர். போர்ச்சுகீஸியர்கள் பயன்படுத்திய ஆயுதங்களின் தன்மையை விளக்கினர். 12 சிற்றரசுகளின் சிப்பாய்கள் அங்கு கூடி இருந்தனர். கோணேஸ்வரத்தில் தாக்குதல் இன்னும் தீவிரமாய் இருக்கும் என எண்ணி கண்டி ராஜன் ஜெயவீரசிங்கே தலைமையில் பாதியினரை கோணேஸ்வரம் அனுப்பினான்.
                        கோணேஸ்வரம் சென்றவர்கள் போக 3000 சிப்பாய்களும் 8 சிற்றரசர்களும் அங்கு இருந்தனர். போர்ச்சுகீஸியர்கள் கோவிலை அடைய கடந்து செல்லவேண்டிய மலை உச்சியில் படையினரை திரட்டினான் கதிர்காமன். மலை உச்சியை அடைவதற்கு முன்பே அனைவரையும் மாய்க்க வேண்டுமென்பதே இவர்களின் திட்டம். கதிர்காமன், எல்லாளன் மற்றும் மார்கண்டேயன் ஈழநாட்டின் தலைசிறந்த போர்வீரர்கள். கதிர்காமன் திட்டமிடுதலில் வல்லுநன். போர்ச்சுகீஸியர்கள் மலையை நெருங்கும்போதே அனைத்து திசைகளிலிருந்தும் அவர்களின் மேல் விஷம் தேய்த்த அம்பினை செலுத்துமாறு ஆணையிட்டான். சிப்பிகள் மலையினை நெருங்கும் போர்ச்சுகீஸியர்கள் மீது அம்பினை செலுத்தினர். எல்லாத்திசைகளிலும் இருந்து அம்பு அவர்கள் மீது வந்ததால் போர்ச்சுகீஸியர்கள் திணறினர். அவர்கள் பாதுகாப்பு கவசங்களை உடுத்தி அம்புகள் வரும் திசையில்  புறப்பட்டனர். அவர்கலின் எண்ணிக்கை பாதிக்கும் மேலாக குறைந்து 500 பேர்களே இருந்தனர். கதிர்காமன் இதை கவனித்து, "நாமோ இங்கு 3000 பேர் இருக்கிறோம். அவர்களோ வெறும் 500 பேர் தான். அதிலும் பலர் இறந்து விட்டனர். இவர்களுக்கு எதற்கு இங்கு 3000 சிப்பாய்கள்? உங்களில் இந்த திசையில் இருப்பவர் தவிர 2000 பேர் இப்போதே கோணேஸ்வரம் புறப்படுங்கள். கடவுளை காக்க மனிதனுக்கு கிடைத்த வாய்ப்பு. இதுவே ஒரு வீரனுக்கு கிடைக்கும் உயர்ந்த வாய்ப்பு. கொநேஸ்வரத்தை காத்திட கிளம்புங்கள். எதிரிகளை வீழ்த்திடுங்கள்" என கூறி சிப்பாய்களை அனுப்பி வைத்தான்."
                   கூறியவாறு அனைவரும் கிளம்பினர் மீதமிருந்தவர்கள் அம்புகளை போர்ச்சுகீஸியர்கள் மீது செலுத்தினர். செலுத்தியும் யாரும் வீழ்ந்து மடியாமல் இருந்ததை கவனித்த அவர்கள் பாதுகாப்பு கவசத்தை அணிந்திருப்பதை பார்த்தான் .  இவர்களின் முயற்சி தோல்வி அடையும் என எண்ணினான்.
                  சிப்பாய்களை அழைத்து, "வீரர்களே! நாட்டை காக்கும் மாவீரர்களே!! இறையின் பாதுகாவலர்களே!! இப்பொழுது நாம் ஈஸ்வரனை பகைத்தால் என்ன ஆகும் என்று அவர்களுக்கு காட்டும் தருணம் கிட்டியுள்ளது. அவர்களே அசுரர்கள். நரகாசுரர்கள். ராவணர்கள். மாய்த்திடுங்கள் அவர்களை. அவர்கள் 500க்கும் குறைவாக உள்ளனர். நாமோ ஆயிரம் பேர். ஆயிரம் சிவன்கள் 500 அசுரர்களை மாய்த்திட மாட்டார்களா? அவர்கள் ஆயுதங்களை கண்டு அஞ்ச வேண்டாம். உள்ளே சிவனைக்கொண்டு முன்னே செல்லுங்கள். ஈட்டியையும் வாலினையும் வைத்து அவர்களை வெட்டி சாயுங்கள். அம்புகளை செலுத்துங்கள். அவர்களை வீழ்த்தி விட்டு இங்கேயே தீபாவளி கொண்டாடுவோம் அவர்கள் ஆயுதங்களை வெடித்து. ஓம் நம சிவாய தாக்குங்கள்" என ஆணையிட்டான்.
                   சிப்பாய்கள் எதிரிகளை நோக்கி சென்றனர். போர்ச்சுகீஸியர்களின் பீரங்கிகள் குண்டுகளை செலுத்த துவங்கியது. ஈழ சிப்பாய்கள் பெருமளவில் மாண்டனர். அடுத்து சிப்பிகள் பயப்படாமல் முன்னேறினாலும், அவர்களிடம்,
                  "உங்கள் அம்புகளும் ஈட்டிகளும் இங்கிருந்தே அவர்கள் கண்களை நோக்கிச் செல்லட்டும். வாளினை அவர்களை நெருங்கியதும் வெட்டிச்  சாய்க்க வைத்துக் கொள்ளுங்கள்." என ஆணையிட்டான்.
 போர்ச்சுகீஸியர்கள் தாக்குதலை தீவிரமாக்கினர். மேலும் ஈழ சிப்பிக்கள் உயிர் இழந்தனர்.
                "(போர்ச்சுகீஸில்) அவர்களின் ஆயுதங்களை பார்த்தீர்களா? கற்காலத்தவர் போல. நம்முடைய ஆயுதங்களே நமக்கு பலம். நாம் கவசம் அணிந்திருப்பதை கவனித்து கண்களை நோக்கி செறிய ஆயுதங்களை செலுத்துகிறார்கள். தலையை குனிந்தவாறு வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் நம்மை நெருங்கியவுடன் அவர்களை தாக்குவோம். குண்டுகள் வீணாகாமல் இருக்...", என்று தாமஸ் கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு ஈட்டி அவன் தலையை அறுத்து தொலை தூரத்தில் எறிந்த்தது.
                இதனால் கோபம் அடைந்த பிரெட்ரிக் அனைத்து பீரங்ககிகளிலிருந்தும் வரிசையாக குண்டுகளை செலுத்த செய்தான். 800 க்கும் மேற்பட்ட ஈழத்தினரில் 42 பேர் மட்டுமே உயிரை பிடித்து இருந்தனர். கதிர்காமன் 37 போர்ச்சுகீஸியர்களை வெட்டி சாய்த்தான். 17 துப்பாக்கி குண்டுகள் அவனை துளைத்திருந்தது. இருப்பினும் போரிட்டுக்கொண்டிருந்தான். ஒருக்கட்டதில் அவன் உடல் ரத்தம் சிந்தவில்லை. ரத்தம் சிந்த ரத்தம் வேண்டுமே!! தன கடைசொட்டுரத்தம் இருக்கும் வரை போரிட்டான். கண்களை திறந்தவாறே கீழே விழுந்தான்.
கடைசியில் உயிருடன் இருந்த 6 சிப்பாய்களும் மாண்டனர். 28 போர்ச்சுகீஸியர்கள் மட்டுமே விஞ்சி இருந்தனர். கோணேஸ்வரம் தம் வசமாவது சுலபம் இல்லை என்பதை உணர்ந்தனர். பிரெட்ரிக் கதிர்காமனின் வாளினை தன கையினில் எடுத்து, "நான் பார்த்ததிலேயே தலைசிறந்த போராளி. இவனை சகல மரியாதையுடன் இறைவினிடம் சேர்க்க வேண்டும்." என கூறினான். தொண்டேஸ்வரம் கோவிலுக்குள்ளே இவனை புதைத்து பன்னிரெண்டு குண்டுகளை செலுத்தினர். அவனுடைய வாளில், "உலகின் தலைசிறந்த போராளியின் வாள்" எனப் பொறித்து தன்னுடன் வைத்துக்கொண்டான் பிரெட்ரிக்.  கோவிலை இடித்து நகை சிலைகளுடன் கோணேஸ்வரம் புறப்பட்டனர் போர்ச்சுகீஸியர்.

கோணேஸ்வரம் 
                 வருஷப்பிறப்பிற்கு மக்கள் வரத்தொடங்கினர். குமரனின்  யாரும் இன்னும் நம்பவில்லை. அந்த நேரத்தில், ஜெயவீரசிங்கே தலைமையிலான படை கோணேஸ்வரம் அடைந்தது. ஜெயவீரசிங்கே கோவில் தலைவரிடம் விரைந்து, " நாங்கள் இப்போது தொண்டேஸ்வரத்திலிருந்து வருகிறோம். கதிர்காமன் அனுப்பி வைத்தான். இப்பொழுது கோவில் பேராபத்தில் உள்ளது. அதை காக்கவே இந்த அரசனும் இந்த வீரர்களும் உள்ளனர். கோவில் விசேஷங்கள் நடக்கட்டும். இப்பொழுது கதிர்காமனும் அந்த போர்ச்சுகீஸியர்களை வீழ்த்திவிட்டு இங்கே வந்துகொண்டிருப்பான்."
என கூறினான்.
                எங்கு காணினும் மக்கள் கூட்டமாய் இருந்தது கோணேஸ்வரம். மதுமதையையும் கோணேஸ்வரரையும் தரிசிக்க பல மக்கள் கூடி இருந்தனர். தங்க கோபுரம் மின்னி கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கில் நாதஸ்வர வித்வான்கள் பாடல் இசைத்து வழிபட்டுக்கொண்டிருன்தனர். வேத பண்டிதர்கள் வேதங்களை போட்டி போட்டு சொல்லிக்கொண்டிருந்தனர். இன்னும் உலகெங்கிலும் இருந்து மக்கள் வந்துகொண்டிருந்த வண்ணம் இருந்தனர்.

திருகேதீஸ்வரம் 
                முன்னேஸ்வரத்தில் சேனாபதியை வீழ்த்திய பிரெட்ரிக் ஏதோ சதி நடப்பதை உணர்ந்து ஒரு சிப்பாயை திருகேதீஸ்வரம் அனுப்பினான். அந்த சிப்பாய் கான்ச்டண்டினோவிடம் நடந்தவையை கூறினான். எல்லாளனும் அவன் நண்பர்களும் சேர்ந்து அவன் கோணேஸ்வரம் அடைவதை கடினமாக்கியதை உணர்ந்தான். எவ்வாறு கொநேச்வரம் கோவிலை அடையலாம் என சிந்திக்க தொடங்கினான்.
                அந்த நேரத்தில், திருகேதீஸ்வரத்தை தரிசிக்க நான்கு வேதபண்டிதர் வந்திருந்தனர். அவர்களை கான்ச்டண்டினோவிடம் அழைத்து வந்தான் காவலாளி. இவர்கள் கோணேஸ்வரம் செல்லும் பண்டிதர்கள் என்பதை அறிந்து கொண்ட கான்ச்டண்டினோ அவர்களை கொன்று, அவர்களின் உடைகளி எடுத்து கொண்டான். கார்த்யாயனி,  எல்லாளனின் மனைவியை அழைத்தான் கான்ச்டண்டினோ. கார்த்யாயனிக்கும்  எல்லாளனுக்கும் திருமணம் ஏழு மாதங்கள் தான் ஆகி இருந்தது.  அவள் கற்பம் அடைந்திருந்தாள். கான்ச்டண்டினோவின் அறையை திறந்த உடனே அவள் நெத்திப்பொட்டில் சுட்டான். சுமங்கலியை உயிர் மாய்ந்ததை காட்டும் வகையில் அவளின் நெற்றியில் ரத்தம் ஊற்றென சிந்தியது.
               திருகேதீஸ்வரத்தில் இருக்கும் பண்டிதர்களின் உடைகளை வாங்கினான் கான்ச்டண்டினோ. அவனுடன் சேர்த்து 100 போர்ச்சுகீஸியர்கள் பண்டிதர் உடையினை அணிந்துக்கொண்டனர். 11 ஆம் தேதியே கோணேஸ்வரத்தினை தாகிட வேண்டும் என திட்டமிட்டு தன படைகளை புரப்ப செய்து தானும் கிளம்பினான்.

ஏப்ரல் 11
கோணேஸ்வரம் செல்லும் வழியில் 
நகுலேஸ்வரம்- நள்ளிரவு 
               எல்லாளன் தரைவழியில் செல்வதை விட கடல் வழியே செல்வதே பாதுகாப்பாக எண்ணினான். ஒரு கப்பல் கரையை நெருங்குவதை கவனித்தான். அந்த காபளிலேயே சென்றிலாம் என முடிவு செய்து அந்த கப்பலை அடைந்தான். அந்த கப்பலில் மக்கள் பலர் இருப்பதை கண்டு, "அவசரம் அபாயம். நாம் விரைவாக கோணேஸ்வரம் அடைய வேண்டும். சில நாசக்கரர்களின் விபரீத ஆசைகளால், பஞ்ச ஈஸ்வரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நாளை மறுநாள் அவர்கள் கோணேஸ்வரத்தை கையகப்படுத்த உள்ளனர். அதற்கு முன்பு நாங்கள் அங்கே செல்ல வேண்டும். தயை செய்து எங்களை அங்கு செல்ல உதவிடுங்கள்." என கூறினான்.
            கப்பலிலிருந்த பயணி ஒருவன், "நாங்களும் கொநேச்வரம் தான் போறோம். மாலுமி அலுப்பாயிடாம இருக்கட்டுமேனு தான், கரை ஒதுங்க சொன்னோம். அதிர்ஷ்ட்டவசமா அது உங்களுக்கு உதவிருக்கு. இப்பவே கிளம்புவோம். வயசானவங்க, பெண்கள், குழந்தைகள இங்க எறக்கிட்டு கிளம்புவோம்." என கூறினான்.
            அங்கிருந்து ஒரு மூதாட்டி வேகமாக வந்து, "டேய் கண்கா!! நான் இங்க எறங்க மாட்டேன். என் சாமி அங்க ஆபத்துல இருக்கு. நீ எறங்கி போணு என்ன சொல்ற. நான் வீரவள்ளி. வீரம்னா என்னன்னு தெரயும்ல உனக்கு? எல்லாரும் போவோம். பொம்மனாட்டிகளும் என்ன வேணும்னாலும் செய்வா. என்னடி சொல்ற மதுமதி?" என தங்களையும் கூடி செல்ல கூறினாள்.
             கப்பல் கொநேச்வரம் நோக்கி கிளம்பியது. கண்கன், "நீங்க யாரு? எங்க இருந்து வறீங்க? என்ன பிரச்சனை?" என்று கேட்டான்.
            எல்லாளன் தன பெயரைகூறி நடந்ததை எல்லாம் கூறினான்.
"எல்லா கோவிலுக்கும் என்ட நண்பர்களை அனுப்பியிருக்கேன். அவர்களுக்கும் கோவில்களுக்கும் என்ன ஆயிருக்கென்டு தெரியல. மார்த்தாண்டனை இஞ்ச காணல. கான்ச்டண்டினோவ கொன்னுட்டு நான் உயிரோட இருந்தா அவனுக்கு என்ன ஆச்சுனு தேடனும். உங்க பெயர் கண்கனோ?"
"ஆமாம்."
"கண்கன் கோணேஸ்வரம் கோவில் கட்டின மகாராசா பெயர். அவரே காக்க வந்துருக்காரோ உங்க ரூபத்துல?"
கண்கன் மதுமதியை எல்லாளனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
"மதுமதி. கோணேஸ்வரம் அம்மனின் பெயர். உங்க பெயர் கேட்ட விடனே, உங்களால ஏதோ எனக்கு நன்மை கிடைக்கும்னு தோணுது."
              எல்லாளன் துப்பாக்கிகளை எடுத்து கப்பலில் இருந்த அனைவருக்கும் அதனை பயன்படுத்த சொல்லிக்கொடுத்தான்.

பிரெட்ரிக் மற்றும் அவனின் படையினர் 
               பிரெட்ரிக் தொண்டேஸ்வரத்திலிருந்து கொநேச்வரம் புறப்பட்டான். தனது வாளினை தூக்கி வீசிவிட்டு கதிர்காமனின் வாளினை தன உரையில் வைத்துக்கொண்டான். செல்லும் வழியில், 200 கூடாரங்களில், பலர் ஓய்வெடுப்பதை கண்டான். தனது சிப்பாய் ஒருவனை அங்கு அனுப்பி பார்க்க சொன்னான்.
              பார்த்துவிட்டு திரும்பி வந்த சிப்பாய், "(போர்ச்சுகீஸில்) ஈழ சிப்பாய்கள் போல இருக்கிறார்கள். அவர்களை உயிருடன் விடுவது நமக்கு ஆபத்து. அவர்கள் நீர் அருந்த இருக்கும் தொட்டியில் விஷம் கலந்துவிட்டேன். குடித்து இரண்டு மணி நேரத்தில் இறந்து விடுவார்கள்."
             "(போர்ச்சுகீஸில்) சபாஷ். விசத்தை நம்ப வேண்டாம். கதிர்காமன் போல் இன்னொருவன் வந்தால் சமாளிப்பது கடினம். பீரங்கிகளால் சுட்டுத் தள்ளுங்கள். அப்படியே நிரந்தரமாக தூங்கி விடட்டும்."
             பீரங்கிகளால் சுடப்பட்டு அனைவரும் பொசிங்கினர். கட்டியிருந்த குதிரைகள் யானைகள் என எல்லா மிருகங்களும் மடிந்தன.

கான்ச்டண்டினோ மற்றும் அவன் படையினர் 
               கான்ச்டண்டினோ 1000 சிப்பாய்களுடன் கோணேஸ்வரம் புறப்பட்டான். அதில் 100 பேர் பண்டிதர் போல உடை அணிந்திருந்தனர். எல்லோரையும் இழைப்பார ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு,
               "(போர்ச்சுகீஸில்) என் கிறித்துவ சகோதரர்களே! இறைவனின் குழந்தைகளே!! நாம் இறைதூதர்கள். உலகமே கிறித்துவத்தை பின்பற்ற வைக்க வேண்டும். நாளை நமது நாள். உலகின் மிக பெரிய இறைவழிபாட்டு தளம் கோணேஸ்வரம். அனால் அங்கு கடவுளோ ஏசு இல்லை. நாம் தான் அதை ஏசுவின் தேவாலயம் ஆக்க வேண்டும். அடிமட்டமாக்கவேண்டும் அந்த கோவிலை. சிவன் இருந்த அதே இடத்தில ஏசு ராஜா இருக்க வேண்டும். அதுவே நம் பிறப்பின் நோக்கம். அங்கு என்ன செய்ய வேண்டும் என நான் இப்போது கூறுகிறேன். பண்டிதர் போல் உடை அணிந்த நம்மை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள். நாம் கோவிலுக்குள் சென்று அங்குள்ளவர்களை சுட்டுத்தள்ள வேண்டும். அதே நேரத்தில் மற்றவர்கள் போரிட ஆரம்பியுங்கள். அங்கே உள்ள அனைத்து வீரர்களும் உங்களிடம் சண்டை இட ஆரம்பிப்பர். அந்த நேரத்தில் கோவில் நகைகளையும் சிலைகளையும் நாம் கையக படுத்தி கடல் வழியே திருகேதீஸ்வரம் புறப்படுவோம். நீங்கள் அனைவரையும் கொன்று ஊர் திரும்புங்கள். அல்லேலூயா!! அல்லேலூயா!!"
              அனைவரும் அல்லேலூயா அல்லேலூயா என கோஷமிட்டனர்.

மதிய நேரம் 
கோணேஸ்வரம்
                 குமரன் கோணேஸ்வரம் அடைந்த படையினரிடம், "வீரர்களே!! போர்ச்சுகீஸியர்களின் திட்டம் வருடப்பிறப்பின் முன் கோவிலை கையகப்படுத்துவது. இன்னும் மூன்று நாட்கள் தான் வருடப்பிறப்புக்கு உள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். என்னுடைய மற்ற நண்பர்கள் இன்னும் வரவில்லை. கதிர்காமனும் இன்னும் வரவில்லை. அவன் போரில் இறந்திருக்க கூடும். அப்படியானால் நம்மை விட போர்ச்சுகீஸியர்கள் படை பலம் வாய்ந்தவர்கள். இந்த கோவிலை உயிரை கொடுத்தாவது காத்திடுவோம். போருக்கு தயாரகிடுவோம்." என தயார் படுத்தினான்.
                  பண்டிதர்கள் போல் உடை அணிந்த போர்ச்சுகீஸியர்கள் கோவிலை அடைந்தனர். அவர்களை மரியாதையுடன் கோவில் தலைவர் வரவேற்றார். தொலை தூரத்திலிருந்து வரும் பண்டிதர்கள் என அவர் நினைத்தார். அதே நேரம் பக்கத்தில் இருந்த திடலில் ஒரு பீரங்கி சுடும் சத்தம் கேட்டது. கோவில் முன் ஜெயவீரசிங்கே மற்றும் 200 சிப்பாய்களை விட்டுவிட்டு மற்ற சிப்பாய்களுடன் திடலுக்கு புறப்பட்டான். அவர்களின் படை பலம் மற்றும் ஆயுதங்களை பற்றி   அவர்கள் அறிந்திருக்கவில்லை. அனைவரும் குண்டுகளால் தாக்கப்பட்டு நொடிகளில் மடியத்தொடங்கினர். 70 பீரங்கிகளிலிருந்து குண்டுகள் வெளியேறிக்கொண்டிருந்தன.
                 கோவிலுக்குள் நுழைந்த கான்ச்டண்டினோ மற்றும் அவன் படையினர்  மற்ற பண்டிதர்களை சுட்டுத்தள்ளினர். அந்நேரத்தில் பண்டிதர்கள் மட்டுமே கோவிலுக்குள் இருந்தனர். சத்தம் கேட்டு ஜெயவீரசிங்கே சிப்பாய்கலுடன் உள்ளே நுழைந்தான். காற்றைப்போல் வளைவதில் ஜெயவீரசிங்கே வல்லவன் எனவே குண்டுகள் பாயாதவாறு வளைந்து வளைந்து தப்பித்துக் கொண்டிருந்தான். தன்னால் முடிந்த அளவுக்கு போர்ச்சுகீஸியர்களை வெட்டி சாய்த்தான்.
                 துறைமுகம் கோவிலுக்கு அருகாமையிலேயே இருந்தது. எல்லாளன் வந்த கப்பல் துறைமுகத்தை அடைந்தது. வெடிகுண்டுகளின் சத்தம் கேட்டு கோவிலை நோக்கி ஓடினான்.  கப்பலில் வந்தவர்களும் துப்பாக்கியை எடுத்து அவனை தொடர்ந்தனர்.
                 ஜெயவீரசிங்கே ஒரு பண்டிதரை கொல்வதை கண்டு, "நாங்கள் எங்கள் கடவுளை காக்க உயிர்கொடுத்து போராடுகிறோம். பௌத்த நாயே நீ இந்த பன்றிகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறாய?" என்று கூறியவாறே அவன் முதுகில் துப்பாக்கியால் சுட்டான். அவன் கீழே விழும்போது கான்ச்டண்டின்மோ பண்டிதர் வேடம் அணிந்திருப்பதை உணர்ந்தான். "(போர்ச்சுகீஸில்) ஒரு நல்லவனை கொன்றுவிட்டேன். அதற்க்கும் நீயே காரணம் ஆகி விட்டாய் . உங்களில் ஒருவனையும் உயிரோடு விடப்போவது இல்லை." என அவனிடம் கூறினான். அவன் ஒவ்வொருவராக சுட ஆரம்பித்தான். கான்ச்டண்டினோ அமைதியாக வெளியேறி மேலும் பல சிப்பிகளை கூட்டிவர திடலுக்கு புறப்பட்டான்.
                 வீரவல்லி சிவன் சிலையை இரண்டு போர்ச்சுகீஸியர்கள் உடைப்பதை கண்டாள். வேகமாக சன்னதிக்கு சென்று ஒருவனை சுட்டாள். இன்னொருவன் வீரவள்ளியை சுட்டுத்தள்ளினான். இதனை பார்த்த கண்கன், தன தாயை சுட்ட போர்ச்சுகீஸியனை சுட்டுத் தள்ளினான். சன்னதியில் நகைகளும், கோபுரத்துக்கு இட்டிருந்த தங்க முலாம், சிலைகள் இருப்பதை கண்டு எல்லாளனையும் மதுமதியையும் அழைத்தான். இவர்கள் மூவர் மட்டும் தான் கோவிலுக்குள் உயிரோடு இருக்கும் மனிதர்கள்
                 போர்க்களத்தில் போர்ச்சுகீஸியர்கள் எல்லா ஈழத்தவரையும் சுட்டு மாய்த்தனர். ப்றேட்ரிக்க்கும் அங்கு வந்து சேர்ந்தான். அனைவறுகும் கதிர்காமன் பற்றி கூறினான். கான்ச்டண்டினோ அங்கு விரைந்து வருவதை கண்டான்.
                 எல்லாளன் கோவில் நகைகளையாவது பாதுகாக்க நினைத்தான். பெட்டிகளில் நகைகளையும் சிலைகளையும் வைத்து  கண்கன் மதுமிதாவுடன்  அனுப்ப நினைத்தான். "போர்க்களத்தில் பீரங்கி துப்பாக்கிகளின் சத்தம் கேட்கவில்லை. அவர்கள் கோவிலுக்கு வந்துக்கொண்டிருப்பார்கள். இதோ இந்த சுரங்க பாதை துறைமுகத்திற்கு செல்கிறது. இதிலே செல்லுங்கள். திருகேதீஸ்வரத்தில் இடுகாட்டிர்க்கருகே கோவில் நகைகளை புதைத்து வைத்திருக்கிறேன். அடையாளத்திற்கு அருகே ஒரு மரத்தில் என் குதிரையை கட்டி வைத்திருக்கிறேன். அவையையும் எடுத்து செல்லுங்கள். உங்கள் அரசரிடம்  கொடுத்து கோவிலை புதுப்பிக்கும் போது எடுத்து வாருங்கள். ஈஸ்வரர் இதை பார்த்து அமைதி காக்க மாட்டார். உண்மை வெல்லும். இந்தாருங்கள் என் வாள். திருகேதீஸ்வரம் சென்று என் மனைவி கார்த்யாயனியிடம் கொடுங்கள். பிறக்க போகும் என் மகனுக்கு கொடுக்க சொல்லுங்கள். அவர்கள் வரும் முன் கிளம்புங்கள்." என கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.
                 எல்லாளன் கோவிலின் வெளியே சென்றான். ஆயிரக்கணக்கில் போர்ச்சுகீஸியர்கள் கோவிலின் வெளியே இருந்தனர். தானே தன்னை சுட்டுக்கொல்ல துப்பாக்கியை எடுத்தான். குண்டுகள் இல்லாததால் முயற்சி பலிக்கவில்லை. பிரெட்ரிக் கதிர்காமனின் வாளினைக் கொண்டு எள்ளலானின் இடுப்பை வெட்டினான். உடல் பாதியாக பிரிந்து ரத்தம் பீறிட்டது.

தமிழ் வருட பிறப்பு 
திருவனந்தபுரம் 
                 "நான் அரசரை சந்தித்து சில விஷயங்களை கொடுக்க வேண்டும்.", கண்கன் காவலரிடம் கூறினான். அரசிர்டம் கேட்டு வருவதாக கூறி  காவலர் உள்ளே சென்றார். சட்ட்று நேரம் கழித்து வந்த அவர் கண்கனையும் மதுமதியையும் அரண்மனைக்குள் அனுப்பினார்.
                   அவர்களை பார்த்து அரசர், "என்னை பார்க்க வேண்டும் என கூறினீர்களாமே? என்ன செய்தி?"
                    "அரசே பஞ்ச ஈஸ்வரங்களை தரிசிக்க ஈழம் சென்றிருந்தோம். போர்ச்சுகீஸியர்களை  தரைமட்டமாக்கி கிறித்துவ தேவாலயமாக்கினர்.  ஒருவன் கொநேச்வரம் மற்றும் திருகேதீஸ்வரம் கோவில்களின் நகைகளையும்  சிலைகளையும் மீட்டு எங்களிடம் உங்களிடம் தருமாறு அனுப்பி வைத்தான். கோவிலை புதுப்பிக்கும்போது கொடுக்குமாறு கூறினான். அவைகளை வந்த கப்பலில் வைத்துள்ளேன். கப்பல் முழுதும் விலைமதிப்பில்லாத நகைகள் உள்ளன. நீங்கள் மற்ற அரசர்களுடன் சென்று அவர்களை வீழ்த்தி மீண்டும் கோவில்  கட்ட வேண்டும். மீண்டும் நகைகளையும் சிலைகளையும் அங்கு சேர்க்க வேண்டும்."
                   "என்னிடம் சொல்லிவிட்டீர்கள். நானவ்வாறே செய்து விடுகிறேன். வேறு யாருக்காவது இதைப்பற்றி தெரியுமா?"
                  "தெரியாது."
                  "இதோ வருகிறேன்."
                  உள்ளே சென்ற அரசர் தன வாளினைக் கொண்டுவந்து இருவரையும் வெட்டிசாய்த்தார்.
                   ஒரு காவலாளியை அழைத்து, "துறைமுகத்தில் கோணேஸ்வரத்திலிருந்து வந்த கப்பல் இருக்கும். நகைகளும் சிலைகளும் நிறைந்து. அவைகளை அடைத்து நம் கோவில் ரகசிய அறைகளில் வை. அது நம் அரசுக்கும் பத்மநாபசுவாமிக்கும் சொந்தமானது." என கூறினார்.
                   அவ்வாறு செய்த காவலாளி தனக்கு உதவிய காவலர்களுடன் அரண்மனைக்கு வந்து அரசரிடம் சாவியை கொடுத்தான்.அரசர் மற்றுமொரு காவலரை அழைத்து, "இவர்களை கொல். இவர்கள் கோவிலின் ரகசிய அறை சாவியை எடுத்து செல்ல முயன்றனர். இவர்களை நான் பிடித்து விட்டேன். இதோ பார் சாவி. கொல் இவர்களை." என ஆணையிட்டான்.
                    உடனே அவர்களை கொன்றான் காவலாளி.

சில உண்மைகள் 
                   கான்ச்டண்டினோ சில போர்ச்சுகீஸியார்களுடன் பண்டிதர் போலே வேடமணிந்து கோணேஸ்வரம் கோவிலுள் புகுந்து கோவிலை கையகப் படுத்தினான். 
                   திருகேதீஸ்வரம்,முன்னேஸ்வரம் மற்றும் கோணேஸ்வரம்  கோவில்கள் மீண்டும் ஈழத்தில் வாழும் தமிழர்களால் புதுப்பிக்கப்பட்டது. 
                   தொண்டேஸ்வரம் இப்போது புத்தர் கோவிலை கொண்டுள்ளது.
                    நகுலேஸ்வரம்  போர்ச்சுகீஸியர்களால் அழிக்கப்படவில்லை. இப்போது இலங்கை ராணுவத்தினர் கீழ் உள்ளது.
                    மேலும் அறிந்துகொள்ள ஊர்களின் மேல் சொடுக்கவும்  கோணேஸ்வரம்,  முன்னேஸ்வரம்திருகேதீஸ்வரம்தொண்டேஸ்வரம் மற்றும் நகுலேஸ்வரம்
                 
          

Tuesday, October 30, 2012

நீரின்றி அமைந்த உலகில் இல்லாது இருக்கட்டும்

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு போய்
மணல் பெருக்காய் லாரிகளில் செல்லக் கண்டேன்
சாலை அகலம் கூடி
சாலையோர மரங்கள் காணாமல் போனதைக் கண்டேன்
உணவு தந்த விளைநிலங்கள்
வீட்டுமனைகளாகக்  கண்டேன்
இயற்கையன்னையின் பிள்ளையாம் தண்ணீரை
லிட்டருக்கு பதினைந்தாகக் கண்டேன்
தண்ணீரை தன் நீரென தர மறுக்கும்
அண்டையனைக் கண்டேன்
பயிர் வாடி தானும் வாடிய
விவசாயியைக் கண்டேன்


என்னை இடுமிடத்தில்
மரம் நட்டு வையுங்கள்
என் சந்ததியினர்
நீரின்றி அமைந்த உலகில்
இல்லாது இருக்கட்டும்
கண்ணீரே குடிநீராய்
ஆகாது இருக்கட்டும் 

Friday, October 19, 2012

என் காதல் நித்யா

சென்னை நாள் 23 டிசம்பர் 2011
                 காலை எட்டிலிருந்து ஒன்பதரை வரை மேற்கு மாம்பலத்திலிருந்து அம்பத்தூர் வரை சாலையின் டிராபிக் மெட்ரோ ரயிலுக்காக நீளம் குறைக்கப்பட்டு  மேலும் மோசமாக இருக்கிறது. வண்டியில் செல்வது கிட்ட தட்ட ராட்டிணத்தில் செல்வது போலத்தான். கீறல் இல்லாத காரும் கிடையாது. 50 cm இடைவெளி போதும் ஒரு இருசக்கரவாகனம் புகுந்து சென்று விடும். மோசமான நிலை நடைபாதையில் நடந்து செல்வோருக்கு தான். 50 cm நடைபாதையில் தென்பட்டால் அங்கும் வண்டி புகுந்திடும். ஆட்டோ ஓட்டுனர்கள் மைகேல் ஷூமேக்கரின் சொந்தக்காரர் என்ற நினைப்பில் ஓட்டுவார்கள். நடைபாதையில் நடப்போரிலிருந்து காரில் செல்பவர் வரை எல்லோருக்கும் விபத்துக்கு வாய்ப்பு குறைந்தபட்ச அளவிற்காவது உண்டு. அரையாண்டுத் தேர்வு விடுமுறையாலும் குடித்து ஓட்டுபவர்கள் எண்ணிக்கை இந்த நேரத்தில் குறைவு என்பதாலும்   சற்று டிராபிக் குறைவாக இருந்தது.
               
               காலை 8:42 வடபழனி சிக்னல், அண்ணாநகரை நோக்கி செல்லும் திசையில் இருந்த சிக்னல் சிவப்பை வெளிபடுத்தியது.75 நொடிகளில் 300 க்கும் மேற்பட்ட வண்டிகள் சூழ்ந்தன. முதல் வரிசையில் இருசக்கர வாகனங்கள், பின்னால் ஆட்டோ, கார், இவை இருண்டக்கும் ஹைப்ரிட் செய்தது போல ஷேர் ஆடோக்கள, பேருந்துகள் தொங்கி கொண்டிருக்கும் மக்களால் அகலம் கூடி இருந்தது. பச்சைக்கு மாற சிக்னல் காத்திருந்தது. 5 4 3 என நொடிகள் குறையும் போதே சில இருசக்கரவாகனங்கள் சாலையை கடந்தன. பச்சையாக மாறியவுடன் மற்ற வண்டிகளும் முண்டி அடித்து முன்னேறின.
                             
               8:43:27 சிக்னலில் இருந்து சுமார் 632 மீட்டர், ஒரு ஆட்டோ ஷேர் ஆட்டோவை முந்த நினைத்தது. வலது புறத்தில் இடம் இல்லாதலால், இடது புறமாக முந்த நினைத்தது. ஷேர் ஆட்டோ வின் முன்னர் சாலை குருகலானதால், அதுவும் இடது புறமாக திரும்ப  நினைத்தது. அப்போது ஆட்டோவும் நுழைந்ததால் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் பிரேக் அழுத்த முற்பட்டார். மாறி அக்செலேரட்டரை அழுத்த ஷேர் ஆட்டோ முன்னே சென்றுகொண்டிறந்த  பைக்கை வேகமாக இடித்தது. பைக்கில் இருந்தவர் அடித்த வேகத்தில் பறந்து மெட்ரோ ரயில் வேலைக்காக செங்குத்தாக இருந்த இரும்பு கம்பிகளின் மீது விழுந்தார். கம்பியின் ஒரு முனை வழியாக அவர் கழுத்து நுழைந்து அந்த முனை வெளியில் தெரிந்தது. அவர் இறந்தும் விட்டார். மக்கள் நொடி பொழுதில் அப்பகுதியில் சூழ்ந்தனர். ஒரு காரில் இருந்து வெளியில் வந்த டாக்டர் அந்த இளைஞன் இறந்ததை உறுதி செய்தார்.
       
              8:47:28 கூட்டத்திலிருந்து முன்வந்து ஒருவர் இறந்தவர் பற்றி அறிய முற்பட்டார். கழுத்தில் ஒரு ID இருந்தது. அதில் இவர் பெயர் சந்தோஷ் எனவும் HCL இல் பணி புரிந்ததும் தெரிந்தது. A+ve ஆம் இவர் ரத்தம். இறந்தவர் இனி எதற்கு ரத்த வகை. இவருக்கு ஒரு மொபைல் போன் இருக்க வேண்டும். ஆனால் இப்போது இல்லை. இவர் தூக்கி அடித்து வீசப்பட்ட போது கீழே விழுந்திருக்கும். விற்றால் சாராயத்துக்கு தேருமென எவராவது எடுத்து சென்றிருப்பார்கள். பர்ஸை பார்த்தால் ஒரு பெண், இளையராஜா, சச்சின் டெண்டுல்கர் என மூன்று போட்டோக்கள், 260 ருபாய், சில டெபிட் கார்டுகள் இருந்தன. வண்டியில் புடவை கவர் ஒன்று இருந்தது.
         
             சந்தோஷிற்கு அவன் எங்கு இருக்கிறான் என்பது புரியவில்லை. ஏதோ ஒரு விசை தூக்கி அடித்தது அதன் பிறகு ஒரு மயக்க நிலை கருப்படித்து போல் ஒரு உணர்வு. கருப்பு விலகி ஒரு தெளிநிலை வந்தது. பார்த்தால் வித்தியாசமான உடை அணிந்து சில பேர் இருந்தனர். நெருங்கி சென்றவுடன்  இவர்கள்  எமலோகத்தினர் எனத் தெரிந்தது.  இறந்தவர்களின் நிரைவேறாத 3  ஆசைகளை கேட்டறிவது விசித்திரகுப்தனின் வேலை. ஒவ்வொருவராக சொல்ல, சந்தோஷிற்கு வாய்ப்பு வந்தது.
       
              சந்தோஷ் சொல்ல ஆரம்பிக்கையில், எமதர்மராஜா,"ஏதோ கவுன்டவுன் ஆமே தலைகீழா ஒன்னு ரெண்டு மூணு சொல்வாங்களே. அத மாறி சொல் பாப்போம." என கூறினார்.
              "சார் ரியாலிட்டி ஷோவா நடத்துறீங்க. ஏன் சார்."
              "எதிர்த்து பேசுற. மரியாதையா சொல்லு"
             "3.சரி மாண்புமிகு எமலோக தலைவரே. உங்களுக்கு இளையராஜா தெரியுமா? கண்ணே கலைமானே கேட்டுருக்கேங்களா? ஜனனி ஜனனி? ஒரு இண்டர்லுட் ஆவது அவர் மியூசிக் ல? அவர் பாட்டு கேக்கும்போதெல்லாம், அந்த சந்தோசத்துல அழுகையே வரும். அப்ப தான் பாரதியார் சொன்ன தீக்குள்ள விரல வெச்சா இன்பம்னா என்னனு புரிஞ்சது. அவரோட அடுத்த கச்சேரிக்கு டிக்கெட் கெடச்சிருந்தது. படத்துல வர மாறி ஆவியாவும் போக முடியாது போல. என்னோட இசைகடவுள முதல் தடவ பாக்குற வாய்ப்பு. மிஸ்டர் யமா நீங்க முதல் பாட்டு முடியற வரைக்குமாவது வெயிட் பண்ணி இருக்கலாம்.
              2.கிரிக்கெட் பத்தி தெரியுமா உங்களுக்கு? சச்சின் டெண்டுல்கர்? இங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெரியுமா? ஷார்ஜா மேட்ச் டெசர்ட் ஸ்டார்ம்னு  சொல்லுவாங்களே  தெரியுமா? 100 அடிச்சு பைனல்ஸ் போவோம் பாருங்க ஐயோ. ஒரு 100 அடிக்கறதே கஷ்டம் இவர் நூறாவது நூறு அடிக்க போறார். அடுத்த மூணு மாசத்துல பதினஞ்சு மேட்ச் வருது பங்களாதேஷ் கூடயாவது நூறாவது நூறு அடிசிருப்பாரு. அவர புகழ்ந்து facebookல போட ஒரு ஸ்டேட்டஸ் ரெடி பண்ணி இருந்தேன் போடுற வரைக்கும் வெயிட் பண்ணி இருக்கலாம்."
            ஒன்று என சொல்ல வரும் பொழுதே ஒரு தடுமாற்றம் சந்தோஷிற்கு.
தொடர்ந்தான். இறந்தவர்க்கும் அழுகை வருமோ? அழுதே பேசினான்.

           "1.நித்யா. தேவத. என் மனைவி. ச்ப். நாலு மாசம் தான் ஆச்சு கல்யாணம் ஆகி.   ஏழு வருஷமா தெரியும் ஆனா. என்ன ஆள் ஆக்கினவ. ஒரு பொண்ணு அதுவும் இஷ்டமானவ என்ன பக்கத்துல இருந்தே பாக்கும்போது தான் பல விஷயங்கள என்ன நானே மாத்திக்கிட்டேன். அவ வரதுக்கு முன்னாடி நான் ஒண்ணுமே இல்ல. ஒண்ணுமே ப்ச் இல்ல. அவள எப்பவும் சிரிக்க வெக்கணும்னு நெனச்சேன். இப்ப என்ன பாத்து அவ அழுவா. என் பொனத்த பாத்து அவ அழுவா. இப்ப நீங்க என்னையே அவ அழுதருக்கு காரணம் ஆக்கிட்டேன்க. இத்தனைக்கும் நான் ஹெல்மெட் போட்டுட்டு போனேன். அவ சிரிக்கும்போது தெரியுமே அதான் சொர்க்கம். இது இல்ல சொர்க்கம். இது சொர்கமே இல்ல. மயிருக்கு சமானம் இந்த சொர்க்கம். நித்யாவ என்னால அழ வெச்சிட்டேன்களே. சாரி நீங்க ரொம்ப பெரியவர் மயிர்னு லாம் சொல்லிருக்க கூடாது.

அவ புருவத்த நாள் பூரா பாத்துட்டே இருக்கலாம். உங்களுக்கு தெரியுமா? அவ புருவமே அவ என்ன நினைக்குறானு சொல்லும். அவ புருவம் என்ன அவளோட தாசன் ஆக்கிச்சு. ரெண்டு நாள் முன்னாடி அவள திட்டிட்டேன். எல்லாரும் டி ஷர்ட் ல போற எடத்துக்கு சாரில வந்தா. இப்பயும் புடவை தானானு கேட்டேன். கொஞ்சம் சத்தமா. திட்டுன்னு சொல்ல முடியாது. திட்டினேன்னும் சொல்லலாம். அவ புருவத்துல அவ சோகம் வருத்தம் தெரிஞ்சுது. அவ அமைதியா அத விட்டுட்டா. அவளுக்கு புடவ பிடிச்சது போட்டுக்கறா.  அன்னிக்கி ராத்திரி மதுரைக்கு போனா. இன்னிக்கி காலேல திரும்பி வரா. அவள கூப்ட தான் பஸ் ஸ்டேண்ட் போனேன்.  ஒரு புடவ வாங்கிட்டு போனேன். இன்னும் ஒரு 20 நிமிஷம் வெயிட் பண்ணி இருந்தா புடவைய  குடுத்து மன்னிப்பு கேட்டுருப்பேன். மனசுக்குள்ள சிரிச்சிருப்பா. அது வரைக்கும் வெயிட் பண்ணி இருக்கலாம் நீங்க. நான் சாரி ஆவது கேட்டுருப்பேன் ச்சே."
         
                 சொர்க்கமே ஒரு அமைதியில் இருந்தது. எமன் வேகமாக சந்தோஷ் கையை பிடித்து சந்தோஷ் வா போகலா...........

இன்று 14.10.2007 காலை 8:30 மணி
                     "டேய் எந்திரி டா. 8:30 க்கு என்ன தூக்கம். தூங்கும் போது இளிப்ப பாரு. ஒரு நிமிஷம் லேட்டா போனாலும் அந்த தியரி ஆப் ஸ்ட்ரக்ச்சர் உள்ள சேக்க மாட்டான். எந்திரி." சந்தோஷை எழுப்ப முற்பட்டான் ஈஸ்வரன்.
                     "மச்சி. செம கனவு டா.செத்துட்டு வந்துருக்கேன் இப்போ"
                     "என்னடா சொல்ற?"
                     "அதான் சொன்னேனே செத்து போய்டேன் டா."
                     "ஏன்டா லூசு. செத்து போயட்டேன்கிற அப்பறம் எப்டி அது செம கனவு?"
                     "முழுசா கேழு. நித்யா. நம்ம கிளாஸ்மெட் இருக்கால."
                     "ஆமாம்."
                     "அவ தான்டா என் பொண்டாட்டி."
                     "என்னடா சொல்ற?"
                     "கனவுல கனவுல."
                     "ஓ  ஓ. அதானே பாத்தேன்."
                     "ஆனா அவதான்டா என் பொண்டாட்டி. எமனே வந்து காட்டிட்டாரு."
                     "நேத்து மனோஜ் ஷ்யாமளன் படம் பாத்தியா?"
                     "லவ் மாமா லவ். உனக்கெங்க புரியும். ச்சே அவ புருவத்த பாத்துருக்க?"
                    "ஏன்?"
                    "அவளோ அழகு அவ புருவம்!"
                    "இது லவ் தான் டா?"
                    "எப்புடி சொல்ற?"
                    "ரசிக்கவேண்டியத ரசிக்காம இப்படி புருவம், கண், மூக்குனு ரசிச்சா அது லவ் தான்."
                   "இனிக்கே சொல்லிடறேன் அவ கிட்ட."
                   "நீ நடத்து. அங்க ஏற்கனவே ஆறு பேரு பாத்ரூம் வாசல்ல இருக்காங்க. சீக்கரம் குளிச்சிட்டு வா."
                 
கிளாஸ்ரூம்

                    சந்தோஷ் இதுவரை வகுப்பின் ஒரு பெண்ணிடமும் பேசியது கிடையாது. நித்யா அவன் மனதில் இதுவரை வந்ததே இல்லை. நித்யா முகத்தையும் முழுவதாக குழுபுகைபடத்தில் தான் பார்த்திருப்பான். இருந்தும் ஏன் நித்யா மீது கனவில் அப்படியொரு காதல். பெண்கள் பக்கமே திரும்பாத அவன் கண்கள், நித்யாவையே பார்த்துக்கொண்டிருந்தது. குறிப்பாக அவள் புருவத்தை. எமனிடம் இவன் கூறியது உண்மை தான். பார்த்தவுடன் காதல் கீதங்கள் ஒலிக்க ஆரம்பித்தன. அவள் சிரிப்பதை ரசித்தான். தும்பியபோது பதறினான்.
                 
11:15 இடைவேளை
                   
                    சந்தோஷ் எதற்கும் தயங்காமல் தனியாக நின்று கொண்டிருந்த நித்யாவிடம் சென்றான். ஏதோ சொல்ல முயன்றான். வார்த்தை தான் வரவில்லை, அனால் இப்போதே சொல்ல வேண்டும் என்ற வேகம் அவனுக்கு. எமன் அவன் பின் தலையில் அடித்து சொல் என்பது போல் இருந்தது அவனுக்கு.
                 
                     "நித்யா!!"
                     "ஹே சந்தோஷ் நீயா பேசுற ஆச்சர்யம் தான்."
                     "நித்யா உனக்கு ஒன்னு தெரியுமா?"
                     "என்ன"
                     "ஐயோ அது கேள்வி இல்ல. இங்கிலிஷ்ல சொல்லுவாங்களே பில்லர் அது மாதிரி. ஒன்கிட்ட சொல்ல சில விஷயம் இருக்கு. சொல்லிடறேன். நடுவுல இன்டர்பியர் பண்ணாத. மனசுல இருக்கறத சொல்ல மறந்துடுவேன்."
                    "(சிரித்துகொண்டே) சொல்லு."
                    "இன்னிக்கி ஒரு கனவு. அதுல நீ என் பொண்டாட்டி. உனக்கு ஒன்னு தெரியுமா? நீயும் நானும் ஒருத்தர ஒருத்தர் எப்டி தாங்கினோம் தெரியுமா? எல்லாரும் நம்மல மாதிரி இருக்க ஆச பட்டாங்க. எமதர்மராஜா கூட. உன் புருவம் எவளோ அழகு. அதப்பாத்தவுடனே நீ தான்னு சொல்லுது உள்மனசு. நீ தான் எனக்கு எல்லாமே"
                    சொல்லும்போதே அவள் புருவம் சட்டென உயர்ந்தது.
                    "உன்னோட மனச அப்டியே சொல்லுது. இப்ப நீ என்ன இவன் திடீர்னு வரான் பொண்டாட்டினு சொல்றான்னு நினைக்கிற. உன் புருவம் லேசா தூக்கி இருக்கு அது சொல்லுது. உன் புருவத்த பாத்துகிட்டே இருந்தடலாம். சான்சே இல்ல."
                    அவள் லேசாய் சிரித்தாள்.
                   "இப்டி நீ சிரிசிட்டே இருக்கணும்னு ஆச படறேன்.இப்ப நீ சிரிச்சே நரம்புலாம் ஏதோ ஆகுது. உன்ன கவலையே பட விடமாட்டேன். உன் புருவத்த  பாக்க சான்ஸ் குடேன். ப்ளீஸ் சான்ஸ் கொடேன்"
                   "எந்த சினிமால வருது இப்ப நீ சொன்னது எல்லாம்?"
                   "கூகுள்  பண்ணி பாரு நான் வேணா எழுதி தரேன். சந்தோஷின் என் காதல் நித்யானு வரும்."
                   சிரித்துகொண்டே வகுப்புக்கு சென்றால் நித்யா. போகும்போது கண்ணாடியில் அவள் புருவத்தை பார்த்தாள் நித்யா. சம்மதம் என்று புருவம் சொன்னது போல் இருந்தது.
                 
                 ஈஸ்வர் இந்த படலத்தை எல்லாம் ஓரமாய் நின்று கவனித்தான்.  அவள் முகத்தில் சம்மதம் தெரிந்தது ஈஸ்வரனுக்கு. சந்தொஷிடம் வந்து, "எல்லாம் சரி கனவுல நீ செத்து போனையே அத சொல்ல வேண்டியது தானே?" என கேட்டான். சந்தோஷ், "அதான் எமதர்மராஜாவுக்கே எங்க ஜோடி பிடிச்சதுன்னு சொன்னேனே." என்று சமாளித்தான். "என் காதல் நித்யா!! எங்கயோ போய்ட டா." 

Thursday, October 18, 2012

கிருஷ்ணா நீ பேகனே - அவளைத் தேடி

                     "ரமேஷ் ராதா கல்யாணம் இன்விடேசன் வந்துருக்கு டா. சனிக்கிழம.  லஞ்சும் உண்டாம். பாயாசத்தோட இருக்கும். பாயாசம் சாப்டு ரொம்ப நாள் ஆச்சு. போவோமா? இந்த பீட்சா பர்கர்க்குலாம் ஒரு வேள லீவ் விடுவோமே.", ரவி கேட்டான்.
                     "புது ப்ராடக்ட பத்தி சில பேர் கிட்ட அபிப்ராயம் கேட்டு ரிசல்ட் ரெடி பண்ணனும் டா ரவி. எத்தன தடவ தான் ராதாவுக்கும் கிருஷ்ணருக்கும் கல்யாணம் பண்ணுவாங்க? ஒருத்தர் ஒருத்தர கல்யாணம் பண்ணலாம். ஒருத்தர் நெறைய பொண்ணுங்கள கல்யாணம் பண்ணினதையும் கேள்வி பட்டுருக்கேன். இது என்ன ஒருத்தர் ஒருத்தரயே பலதடவ கல்யாணம் பண்றது. இது என்ன பாலிமோநோகமியா? பாயாசம் தான் மிஸ் பண்ணுவோமேனு இருக்கு. பரவாலே சாப்பாடு பார்சல் கட்டிக்கோ "
                    "யார் கிட்ட அபிப்ராயம் கேக்கணும்?"
                    "கார்போரேட்ஸ்ல ஹையர் அபிசியல்ஸ் டா. போன் பண்ணி அப்பாயிண்ட்மென்ட் வாங்கனும்."
                     "நீ சொன்னவங்களாம் ஒரு எடத்துல கூடி அவங்க கிட்ட நீ உன் சோ கால்ட் அபிப்ராயத்த கேட்டா?"
                    "வெல் அண்ட் குட்"
                    "அப்ப நீ ராதா கல்யாணத்துக்கு வர."
                    "எப்பிடி?"
                    "ரோலால இருக்க எல்லா ஹிந்து பேமிலியும் வரும். அதுல நெறைய பேர் CEO, MD இப்பிடிலாம் இருக்கா. நீ பஜனைல எல்லார் கண் படரமாரி நல்லா எந்துவா பாடு. உன் பேர் என்ன, ஊர் என்ன அப்படின்னு கேப்பா. நீ அப்டியே உன் மேட்டர கறந்துடு."
                  "ஐடியா நல்லா தான் இருக்கு. பாயாசமும் ஆச்சு, வேலையும் ஆச்சு. போலாம். டன். எங்க நடக்குது. "
                 "ஸ்ரீனிவாசன் சார் வீட்ல."
                  "ஓ ஜப்பான் போய்ட்டு ஒரு சப்பமூக்கு காரிய கல்யாணம் பண்ணிட்டு வந்தாரே அவரா? ஞாபகம் இருக்கு. தீபாவளி பங்க்ஷன்ல நல்லா பேசினாரு."
               
                   ரோலா, அமெரிக்காவில் மிசோரி மகாணத்தின் நகரம். மற்ற நகரங்களை போல நூற்றுக்கணக்கில் இந்தியர்களை கொண்ட நகரம். தமிழர்கள் எண்ணிக்கை இந்தியர்களில் பெரும் பங்கை கொண்டது. பண்டிகை காலங்களில் ஒன்று கூடி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இவர்கள். அப்போது என்ன செய்வீர்கள் என கேட்டோமானால்.
பெண்கள்,"நகையபத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்" என்றும்
"எங்க சொந்தக்காராலாம் இந்தியால இருக்கா. இந்த மாறி இவா எல்லாரையும் பாக்கரச்சே அவாள பாத்த மாறி சந்தோசமா இருக்கு.", என்று சில பெருசுகளும்
"டேட் அண்ட் மாம் டுக் அஸ் ஹியர்.", என்று குட்டீஸ்களும்
"இன்டர்நெட்ல சங்கீதம் கேட்டு போர் அடிச்சிருத்து அதான் இங்க வந்தேன்" என்று மாமாக்களும்
"பியூட்டிபுல் லேடீஸ் இன் சாரீஸ்", என இளசுகளும்
கூறினாலும் எல்லோரும் சொன்ன ஒரு பொதுவான ரீசன்
"அம்புஜம் மாமி பாயாசம்."
               
                    சனிக்கிழமை வந்தது. மொத்தம் 300 பேர் கூடியிருந்தனர் ராதா கல்யாணத்துக்கு. ஸ்ரீனிவாசனின் வீடு அரண்மனை போல இருந்தது. இந்த 300 பேர் தவிர இன்னும் 200 பேர் அமரலாம். பஜனை செய்ய ஒரு சிறப்பு குழு இருக்கிறது. அவர்கள் பிறரை கண்டு வணக்கம், நல்லா இருக்கீங்களா இது போன்று எல்லாம் சொல்ல மாட்டார்கள். வணக்கத்துக்கும் ராதேக்ரிஷ்ணா நல்லா இருக்கேங்களாக்கும் ராதேக்ரிஷ்ணா, போயிட்டு வரேனுக்கும் ராதேக்ரிஷ்ணா. பஜனை பாடுவதில் கெட்டிக்காரர்கள். இவர்களை மிஞ்ச வேண்டும் ரமேஷ்.

                   வீடே விழாகோலம் கொண்டது. சிறுவர்களுக்கு ராதா மற்றும் கிருஷ்ணர் போல வேடமிட்டு இருந்தனர்.ரமேஷ் அவர்களை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தான். ராதேக்ரிஷ்ணா குழு வந்து ராதேக்ரிஷ்ணாக்களை பரிமாறிகொண்டனர். ரவியும் ரமேஷும் சாப்பட்டை ஒரு பிடி பிடிக்க காலையிலிருந்து தேநீர் கூட அருந்தவில்லை. அறையின் நடுவில் ஒரு ராதேக்ரிஷ்ணா சிலை. அதன் இரு புறங்களிலும் மக்கள் அமர்ந்துகொண்டனர்.
தோடயமங்கலம் பாடி பஜனையை துவக்கினார் ராதேக்ரிஷ்ணா குழுத்தலைவர். ரகுவின் வார்த்தைகளே ரமேஷ் மனதில் இருந்தது. பாகவதர் போல பாடல்களை பாடினான். அரங்கில் இவன் குரல் தனியாக கேட்க தொடங்கியது அந்த அளவு ஈடுபாடு. சிலர் பக்திமிகுதியில் ஆடவும் ஆரம்பத்தினர். எங்கே தன்னை மிஞ்சிடுவார்களோ என அஞ்சி தானும் ஆடலானான். எல்லோரின் பார்வையும் ரமேஷ் மேலேயே இருந்தது. ரமேஷுக்கு அவ்வளோ சந்தோஷம் பாயசத்தோடு வேலையும் ஆகபோகிறதே. ஒரு மூதாட்டி ரமேஷுடன் கைகோர்த்து ஆட ஆரம்பித்தார். மூதாட்டிக்கு இவனே கிருஷ்ணன் என்ற எண்ணம். எல்லார் எண்ணமும் பஜனை  மேல் இருக்க ரகுவுக்கோ கவனம் பாயசம் மேல். அம்புஜம் மாமிக்கு பாயசம் கின்றேன் பேர்வழி என்று இரண்டு மூன்று டம்ளர் பாயாசம் உள்ளே தள்ளினான்.
                   பஜனை முடிந்து உணவு விருந்து ஆரம்பமானது.ராதேக்ருஷ்ணா குழுத்தலைவர் அடுத்த பந்திக்கு காத்துண்டு இருக்கறவா பாட்டு பாடுங்களேன் என்றார். ஒரு சிறுமி பள்ளிகூடத்து ரைம்ஸ் போல ஏதோ பாடினாள். ச ரீ க என ஸ்வரம் போட்டு ஒரு பெண்மணி பாடினார். பாடல் வரிகளை விட ச ரீ தான் அதிகம். பின்னர் ஓர் இனிய குரலில் ஒரு பாடல் ஒலித்தது கிருஷ்ணா நீ பேகனே பாரோ. பாடல் முடியும் வரை அப்படியொரு அமைதி.பாடியவர் 20 22 வயது பெண். வெள்ளையும் இல்லை கருப்பும் இல்லை மா நிறமும் இல்லை, வெண்கலம் போல் ஒரு நிறம். MS மாதிரி பாடுற சுருதி சுத்தமா பாடுற என்று பாராட்டுக்கள் வேறு. ரமேஷ் பாதி பாடலிலேயே கனவுலகத்திற்கு சென்று விட்டான். கிருஷ்ணா நீ பேகனே காதல் டூயட் ஆனது.பஜனையின் போது ரமேஷ் இவளை பார்க்கவில்லை. இவனுக்கு பின்னால் இரண்டு மூன்று வரிசை தள்ளி அமர்ந்து இருந்தாள். அவளை நூற்றுகணக்கில் புகைப்படம் எடுத்தான்.
                 எல்லோரும் அவளை சூழ்ந்து பாராட்ட தொடங்கினர். ரமேஷ் அவளிடம் பேச அவளிடம் நெருங்கையில் மொபைலில் அழைப்பு வர அவள் கிளம்பிவிட்டாள். அவசரம் போலும். ரமேஷும் அங்கே அவன் வேலைகளை முடித்து கொண்டான்.

                   பஜனை முடிந்து காரில் செல்கையில் ரகு கூறினான், "எல்லாரும் அவ வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு ஸ்வீட்டா இருக்கு சோ ச்ச்வீட் இப்டி சொல்றாங்களே. அவ குரல் என்ன பாயசமா இனிப்பா இருக்க, மக்குமந்தைங்க. எப்படி குரல் ஸ்வீட்டா இருக்கும். நீயே சொல்லு டா."
                "அத விடு லவ் மூட்ல இருக்கறச்ச மக்களுக்கு எந்த பாட்டு தோணும்."
                "அது லவ் பண்ற பொண்ண பொருத்தது. பொண்ணு நல்லா ஓபன் டைப்னா முக்காலா முக்காபுலா மாதிரி வரும். கில்பான்சிகோவா இருந்தா கட்டிபுடி கட்டிபுடி டா மாறி வரும். நல்ல டீப் லவ்னா இளையராஜா, ரகுமான் பாட்டு வரும். எனக்கு கல்பனாவ காலேஜ்ல பாக்கும் போது பச்சை நிறமே தோனிச்சு. அவளுக்கும் அதே பாட்டு தான் ஆனா அவமனசுல இருந்தது தடியா இருப்பானே அர்ஜுன்னு பேர் வெச்சிட்டு பீமன் மாதிரி அவன்."
               "கரெக்ட் டா. ஆனா எனக்கு கிருஷ்ணா நீ பேகனே வருதே. என்ன பொண்ணு டா அது. என்ன வாய்ஸ். பாயசமே தோத்துடுச்சு டா."
              "அந்த பாட்டி ஓட ஆடினே பரவ இல்லே.அதுக்காக லவ்வா? என்ன இது பாலசந்தர் படம் மாதிரி"
              "முட்டாள் கிண்டலா. கடைசியா பாடினாலே அவ டா. பாட்ட கூட கேக்காத பாயசத்துலையே இரு. என்ன பாட்டு கிருஷ்ணா நீ பேகனே(பாடுகிறான்)."
             "நிப்பாட்டு டா MP3 பிளேயர."
             "தப்பு பண்ணிட்டேன் டா பாட்டு பாடரப்ப போட்டோ எடுத்தேன் வீடியோ எடுத்துருக்கணும்."
             "அத பண்ணிருக்கலாம். நீ பாடி நான் கேக்கற அவஸ்த இருக்காது."
           

                          இரண்டு நாட்கள் கடந்தது. ரகு ஸ்ரீனிவாசனிடம் இருந்து வீடியோ சீடி பெற்று வந்தான். ரமேஷிடம் கொடுத்தான்.பாட்டு வந்தது ஆனால் ஒலி மற்றுமே ஒளி சாப்பாடடு பந்தியை கொண்டு இருந்தது. பாட்டை மட்டும் பதிவு செய்து ஐபோனில் நாள் முழுதும் கேட்டான். அவளை பார்க்க வேண்டும் என துடித்தான். ரகுவிடம் இதை சொல்ல ரகு " என்ன மிஸ்டர் கிருஷ்ணன் ராதாவ பாக்கணுமோ? இண்டிபெண்டென்ஸ் டே மேஜர் சார் ஆபீஸ்ல. கண்டிப்பா எல்லாரும் வருவாங்க. அவள நேஷனல் அந்தெம் பாட சொல்ல போறாங்க. நீ ஜன கன மன பாடிட்டு திரிய போற. அப்படியாவது பாட்டு மாறட்டும். எவ்ளோ நாள் தான் பெக்குனே மக்குனேனு பாட்ட கேக்கறது." என கிண்டல் செய்தான்.
                         
                         ஐநூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொடி ஏற்றத்துக்கு கூடி இருந்தனர். அம்புஜம் மாமி, ராஜாஜி வீட்டு சமையல்காரரின் மகள். அவரையே கோடி ஏற்ற வைத்தார் மேஜர். கூட்டத்தில் இன்னொருவன் நூடுல்ஸ் போல முடியுடன் கல்லூரி மாணவன் போல இருந்தான். அவனும் எதையோ தேடி கொண்டிருந்தான். ரமேஷுக்கு போட்டியாளரோ என்று பயம்.  ரமேஷ் சென்று அவனிடம் கேட்டான், "என்ன தேடுறேங்க பாஸ்?"
"அண்ணா அன்னிக்கி பஜனைக்கு வந்தேங்க இல்ல. கிருஷ்ணா நீ பேகனேனு ஒரு அக்கா பாடினாங்களே.அவங்களத்தான் தேடுறேன்."
"அக்காவா அப்பாடா"
"என்ன ணா"
"இல்லப்பா நானும் அவளத்தான் தேடுறேன்.எதுக்கு தேடுற?"
"நல்லா பாடுனீங்கனு சொல்லணும். நீங்க எதுக்கு?" 
"நானும் அதுக்கு தான். அப்பிடியே கல்யாணம் பண்ணிக்கிரியானு கேக்கணும் அதான். கொஞ்சம் பாத்தா சொல்லேன்."
"சரி ணா"
"அவ பெயர் தெரியுமா?"
"நோ."
"சரி பாத்தா சொல்லு"
ரகு ஓடி வந்து சொன்னான்," மச்சான் மிசோரி யூனிவர்சிட்டில ஒரு சிலருக்கு எக்ஸாம். அவ இங்க இல்ல. சோ கண்டிப்பா அவ அங்க தான் எக்ஸாம் எழுதிட்டு இருப்பா."
"எதுக்கு சண்டே அதுவுமா எக்ஸாம் வெக்கரானுங்க அவசரம் புரியாதவனுங்க."
"அண்ணா நானும் அதே யுனிவர்சிட்டி தான். அங்க படிக்கல அவங்க. அவங்கள தினமும் சிவன் கோவில்ல பாத்ததா என் கேர்ள் பிரெண்ட் சொன்னா. நானும் பாக்கறேன் அவங்க அந்த பஜனைக்கு அப்பறம் அங்க வரல ணா. நீங்க வேணும்னா அங்க ட்ரை பண்ணுங்களேன்" நூடுல்ஸ் தலையன்  ரமேஷிடம் சொன்னான்.

                          சிவன் கோவிலுக்கு பிரசாதம் தரும் நாட்களுக்கு மட்டுமே சென்ற ரமேஷ் அவளுக்காக தினமும் சென்றான். இரு வாரங்கள் கடந்தும் அவள் அங்கு வரவில்லை. கோவில் பூசாரியிடம் கேட்டுவிடலாம் என போட்டோவை காட்டி கேட்டான் ரமேஷ். பாத்துருக்கேனே என்றார் பூசாரி. தன் மொபைல் நம்பரை கொடுத்து அவள் வந்தா போன் செய்ய சொன்னான். அடுத்தகட்டமாக ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு சென்று ஸ்ரீனிவாசன்க்கு அவளை தெரியுமா என்று கேட்டான். "சிவன் கோவில் பூஜாரி தான் கூட்டிண்டு வந்தார். என்ன பேஷா பாடித்து. நவராத்திரிக்கு நம்ப ஆத்துல வெச்சி கச்சேரி பண்ண சான்ஸ் குடுக்கலாம்நனு இருக்கேன். வாட் டூ யூ சே?" என்றார் ஸ்ரீனிவாசன்.
"வெச்சிக்கலாம் சார்.", என்றான் ரமேஷ்.
                         
                           உடனே கோவிலுக்கு கிளம்பினான் ரமேஷ். பூசாரியிடம் கேட்டான், " நீங்க தான் பஜனைக்கே கூட்டிண்டு வந்தேங்களாமே அந்த பொண்ண". "அத சொல்லலாம்னு வரதுக்குள்ள அன்னிக்கி கிளம்பிட்ட. அன்னிக்கி வந்து பாடிண்டு இருந்தா. நல்லகுரல் நல்லா MS மாதிரி பாடினா சரி வரட்டுமேனு நான்தான் அழைச்சிண்டு வந்தேன்."
                   
                            வாரங்கள் மாதம் ஆயியின. இரண்டு மாதங்கள் சென்றது. அன்று ஞாயிற்றுகிழமை. ஏழு மணிக்கெல்லாம் கோவிலுக்கு சென்று விட்டான் ரமேஷ். கர்னாடக சங்கீதம் கேட்டது. அவளாக இருப்பாளோ என்று ஒரு ஏக்கம்? குரல் அவள் குரலை ஒற்று இருந்தது. வேகமாக சன்னதியை அடைந்தான். அதே பெண்.அதே சேலை. உடனே கோவிலுக்கு வெளியில் வந்தான், வெளியில் அவள் போது அவளிடம் சொல்லிடவேண்டும் என்று முடிவு எடுத்தான். அவளும் வந்தாள்.
                         
                           ரமேஷை கடந்து சென்றாள் அவள். "அய்யய்யோ போய்ட்டாளே."                  
"ஏங்க. ஏங்க. ஒரு நிமிஷம்."
"வாட்?"
"ஹாய். என் பேரு ரமேஷ். அன்னிக்கி சூப்பரா பாடினேங்க. செம MS மாதிரி பாடுனீங்கனு வேற பேசிகிட்டாங்க."
"போதும் நிறுத்துங்கோ. மிக்க நன்றி. நிஞ்ச ஞாபகம் இருக்குது. அந்த கிழவியோட என்ன ஆட்டம். பிரபு தேவா தோப்பார் உங்க கிட்ட."
"அது சும்மா வேற நோக்கத்துக்கு. அப்போ இருந்து இங்க உங்கள தேடிட்டு இருக்கேன். நீங்க இங்க வருவேங்கனு சொன்னாங்க. என்ன ஆளையே காணும்."
"அப்படியா?"
"இண்டிபெண்டென்ஸ் டேல வேற தேடினேன். அங்கயும் நீங்க வரல."
"ஓ. நான் ஸ்ரீலங்கன். நான் என்ட ஊருக்கு போயிருந்தன்."
"வெகேஷனா?"
"இல்ல. அங்க பட்டாளத்துல என்ட அப்பாவ LTTEனு தப்பா நெனச்சி கைது பண்ணிட்டாங்க. அதான் போயிருந்தன்"
"இப்ப ரிலீஸ் பண்ணிட்டாங்களா நல்லா இருக்காரா?"
"சுகமாய இருக்கார். என்ன சொந்த ஊர விட்டு வந்த துக்கம். அங்க இருந்தா நிம்மதியா இருக்க இயலாது. ஆனா என்ட அப்பா அதான் நிம்மதின்னு சொல்றார்."
"சரி. நான் வந்த விஷயத்த சொல்றேன். இந்த 2 மாசத்துலே உங்க பாட்டே 2000 தடவயது கேட்டுருப்பேன். அந்த பாட்ட நீங்க தினமும் நேரடியா பாடி கேக்கனும்னு ஆச"
"ரசிகரோ? கிருஷ்ணா நீ(பாடுகிறாள்)"
"இல்ல அதுக்கும் மேல இருக்கணும்னு ஆச படறேன். சினிமால வரமாதிரி உங்களோட டூயட் பாடற மாதிரி கனவு வருது. அதுவும் நீங்க பாடினேங்களே அந்த பாட்டு தான்."
"புரியலையே"
"இந்தியாவையும் ஸ்ரீலங்காவையும் ஒன்னு செக்கலாமானு?"
"ராமர் பாலம் கட்டுரீன்களோ?"
"இல்ல உன்ன பிடிச்சிருக்கு. உன் மேல அப்படி ஒரு ஆச. நீ என்ன கல்யாணம்  பண்ணிப்பியா? உடனே முடிவ சொல்லிடேன். ப்ளீஸ்."
அவள் சட்டென அவள் காரை நோக்கி  கதவை அடைத்தால். கொஞ்ச நேரம் கழித்து. ஜன்னலை திறந்து, "ரமேஷ். இஞ்ச வாருங்க. என்ட தெரியுமா? பெயர் தெரியாம எப்படி பாலம் கட்டுவீங்க.  koneswaran.yazhpaanam@gmail.com இது என்ட அப்பா ஈமெயில் id. அவர் கிட்டயே உங்க வீட்டுலே இருந்து பெண் கேட்டு மெயில் அனுப்ப சொல்லுங்கோ." ரமேஷ் மகிழ்ச்சியில் துள்ளினான். அவள் வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.
"ஹே பேர் சொல்லலையே?"
"பிரபா. பிரபா கோணேஸ்வரன்" அவள் கார் கிளம்பியது.
பெயர் சொன்னவுடன் அவன் காதில் ஒலித்தது, "கிருஷ்ணா நீ பேகனே பாரோ."
              

                   

ஒன்றரை மணிநேரம் (பத்து கண்களில்)

முதல் இரண்டு கண்கள் - சுபா ஹரிஹரன் - வயது 29
                                           
                                                "ஆதித்யா மணிய பாரு. சின்ன முள் 9 லயும் பெரிய முள் 12 லயும் இருக்கு. நாளைக்கு தேவயான புக்ஸ்லாம எடுத்து வை. அனிருத்துக்கும் ஹெல்ப் பண்ணு. அனிருத் அண்ணா கிட்ட டைம்டேபிள் காட்டு டா." சுபா தன் குழந்தைகளிடம் கூறினாள். இந்த புது வீட்டுக்கு மாறி ஒரு வாரம்  தான் ஆகுது. சொந்த வீடு. டிவில சூப்பர் சிங்கர் வேற. எல்லாரோட கவனமும் அதுல தான் இருந்தது. கிட்சென்ல பாத்திரம் தேச்சிக்கிட்டுருந்தா சுபா. பசங்க வேலைய முடிசிடாங்களானு கிட்சென்ல இருந்தே குரல் கொடுத்தா. பசங்க கிட்ட இருந்து எந்த பதிலும் வரல. திருப்பி பல தடவ கூப்பிட்டும் எந்த பதிலும் வரல.பசங்கள திட்டிகிட்டே பேட்ரூம்கு வந்தா சுபா. கதவு சாத்தி இருந்தது. உள் பக்கமா பூட்டி இருந்தது. அழுத்தினாலே பூட்டிக்கரமாரி இருக்கற பூட்டு அது. வெளில இருந்து தொறக்கனும் நா சாவி வேணும். கைய்யால தெறந்து பாத்தா முடியல அப்ப தான் புரிஞ்சது உள்ள லாக் ஆயிருக்குன்னு. வெளில இருந்து கதவ தொறனு கத்தினா யூசே இல்ல. என்னா அந்த ரூம் சவுண்ட் ப்ரூப் வேற. சுபா சொல்றது பசங்களுக்கு கேக்காது. பசங்க பேசறதும் இவளுக்கு கேக்காது. கதவ தட்டினா பசங்க கதவு கிட்ட இருந்தா கேக்கலாம். ஆதித்யா அனிருத் கதவ தொறங்க டா கத்தி அழ ஆரம்பிச்சா சுபா. இத கேட்டு, டிவி பாத்துட்டு இருந்த ஹரி வேகமா வந்தாரு. "அழாத சாவி இருக்குல அப்பறம் என்ன. இப்ப தொறந்துட போறேன். மொதல்ல நீ அழுகைய நிப்பாட்டு."  "சாவி போட்டும் கதவ தொறக்க முடியல. என்ன ஆச்சுனு தெரியலையே. வெளிலே ஜன்னலும் லாக் ஆயிருக்கு. ஐயோ" திரும்ப அழ ஆரம்பிச்சா சுபா.
                                                  இது மாறி ரெண்டாவது தடவ நடக்குது. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி புவனா கல்யாணத்துல ஆதித்யா காணாம போயிட்டான். அனிருத் அப்ப பிறக்கல.  மண்டபம் புல்லா தேடியும் கெடைக்கல. அரமணிநேரம் கழிச்சு ஒருத்தர் தண்ணி தொட்டில இருக்கறத சொன்னாரு. கழுத்து வரைக்கும் தண்ணி இருந்தது.
                                                   "நான் கவனமா இருந்தருக்கனும். புவனா கல்யாணத்துலயே தண்ணில மூழ்கிட்டு இருப்பான்.வீசிங் வேற அவனுக்கு. இந்த அனிருத்துக்கு பசிச்சா கூட சொல்ல தெரியாது. சின்ன கொழந்த அவன். ஐயோ முருகா."  செவுருல மாட்டியிருந்த பசங்களோட போட்டோவ எடுத்து அழ ஆரம்பிச்சா. அனிருத் பர்ஸ்ட் பர்த்டேக்கு எடுத்த போட்டோ அது. அவ பேய் பிடிச்ச மாதிரி ஆயிட்டா. அவ கண் ஒரு தடவ கூட இமைக்கல.


                                                 "9:30 ஆயிடுச்சு. யூசுவலா இப்ப தூங்கிடுவாங்க. இப்ப என்ன பண்றாங்கனே தெரியலயே. அனிருத் நான் இல்லாம தூங்கக்கூட மாட்டான். பத்து மணியானா அரமணிநேரம் கரண்ட் கட் ஆய்டும். அவங்களுக்கு எதாவது ஆச்சுனா நான் செத்தே போய்டுவேன். காக்க காக்க கனகவேல் காக்க..." சுபா கூச்சலிட்டு கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தாள். கார்பென்டர் வந்தார். பூட்டை உடைக்க டிரில்லிங் மசின் வேற. சுவிட்ச் போட்ட விடனே கரண்ட் கட். சுபா திருப்பி அழ ஆரம்பிச்சா. அழுது அழுது கண்ணீரே நின்துடுச்சு வீசிங் வேற. பில்டிங் இன்ஜினியர்  வந்து என்ன ப்ராப்ளம்னு பாத்துட்டு ட்ரில்லே பண்ணிடலாம்னு முடிவுக்கு வந்தாங்க. கரண்ட் வந்துச்சு. கதவ தொறந்து பாத்தா ஆதித்யாவும் அனிருத்தும்.......

மூன்றாவது மட்டும் நான்காவது கண்கள் - ஹரிஹரன் வயது 34
ஐந்தாவது மற்றும் ஆறாவது கண்கள் - விஸ்வநாதன் வயது 48  

                                                 ராத்திரி 9 இருக்கும். ஹரி சூப்பர் சிங்கர் பாத்துட்டு இருந்தாரு. கோயம்புத்தூர்ல இருந்து சென்னை வந்து ஒரு வாரம் தான் ஆகுது. சொந்த வீடு வேற. டிவி பாத்துட்டு இருக்கறச்ச சுபா கதவ தட்டிகிட்டே அழற சத்தம் கேட்டுச்சு. வேகமா ஓடி போய் பாத்தா பசங்க உள்ள மாடிகிட்டங்கனு தெரிஞ்சுது. சாவி போட்டும் தொறக்க முடியல. உடனே விஸ்வநாதனுக்கு போன் போட்டாரு. விஸ்வநாதன் குடும்பத்துல இல்ல யாருனாலும் உதவினு கேட்டா  செய்யரவரு. பக்கத்து தெரு தான்.  விஸ்வநாதன் உடனே இந்த பில்டிங் கட்டின இன்ஜினியருக்கு போன் பண்ணி கதவ தொறக்க முடியலன்னு சொன்னாரு. இன்ஜினியர், "சார் நான் இப்போ இங்க சேப்பாக்கத்துல மேட்ச் பாத்துட்டு இருக்கேன். அவசரமா?" னு கேட்டாரு
"சார் ரெண்டு கொழந்தைங்க உள்ள மாட்டிருகாங்க "
"அப்படியா சார். உடனே கெளம்பி வரேன். லோக்கல் கார்பென்டர் யாரவது இருந்தா  ட்ரை பண்ணுங்களேன். நான் வரதுக்குள்ளே. "
"பண்றேன் சார்"
                                              விஸ்வநாதன் கார்பெண்டர வீட்டுக்கே போய் கூட்டிட்டு வந்துடறேன்னு பைக் ஸ்டார்ட் பண்ணாரு. அவருக்கு அனிருத் முகம் கண் முன்னாடியே இருந்தது.  லீவ் அப்ப சென்னை வந்தா விஸ்வநாதன் வீட்ல தான் இருப்பாங்க. அனிருத் முகத்த பாக்கும் போதுலாம் ஏதோ சந்தோசமா இருக்கும். அதுனால இவரும் மாசம் ஒருதடவ கோயம்புத்தூர் போய்டுவாரு.
                                               வீட்ல சுபா பிரம்ம புடிச்ச மாறி இருந்தா. ஒரு மூலைல ஒக்காந்துட்டு கண் சிமிட்டாம பசங்க போட்டோவ பாத்துட்டு இருந்தா. ஹரி அப்பப்ப கதவ தட்டிட்டே இருந்தான். எப்பயாச்சு பசங்க திருப்பி தட்டாமையா போய்டுவாங்கனு ஒரு நம்பிக்க. ஹரிக்கும் பயமா தான் இருந்தது, ஆனா பயத்த காமிச்சா இன்னும் சுபா டென்ஷன் ஆய்டுவாளே. அவளுக்கும் வீசிங் இருக்கு. அதுனாலே டென்ஷன் இல்லாதவன் மாதிரி சுபா கிட்ட வந்து சொன்னான், "சுபா இங்க பாரு இது ஒன்னோட தப்பும் இல்ல பசங்க தப்பும் இல்ல. இங்க பாரு அழாதே. அவங்களுக்கு எதுவும் ஆகாது. மிஞ்சி மிஞ்சி போனா அழுவாங்க இப்ப நீ அழற மாதிரி. விச்சண்ணா  கார்பெண்டர கூப்ட போயிருக்காரு. தொறந்துரலாம். அழாதே. நான் தானே சவுண்ட் ப்ரூப் இந்த மாதிரி பூட்டுலாம் இன்ஜினியர் கிட்ட போட சொன்னேன். நான் தான் அழனும் நியாயமா.. அழாதே. வீசிங் வேற ஆரம்பிக்குது."  சுபா கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பிச்சா ஹரி மடில படுத்துகிட்டு.


                                              விஸ்வநாதன் கார்பெண்டர கூட்டிட்டு வந்தாரு. பூட்ட பாத்துட்டு  "என்னங்க இந்த மாறி பூட்ட ஒடச்சதே இல்லையே. டிரில் பண்ணிடலாம். ட்ரில்லிங் மெசின் வீட்ல இருக்கு போய் எடுத்துட்டு வந்துடலாம். வண்டிய எடுங்க." விஸ்வநாதன் வண்டிய எடுத்தாரு. சுபா பூஜ ரூமுக்கு போய்ட்டா. ஹரி பால்கனிக்கு போய் இவளோ நேரம் அடக்கி வெச்சிருந்த பயத்தையும் சோகத்தையும் அழுகையா வெளிபடுத்தினான்.
                                             கார்பெண்டர் பிளக்க மாட்டினவுடனே கரென்ட் வேற போய்டுச்சு. இன்ஜினியர் 10:20 க்கு வந்தாரு. கதவ பாத்துட்டு  "மேல் பகுதில அலைன்மன்ட் செரி இல்ல. அதனாலத்தான் திறக்க முடியல." னு சொன்னாரு.
"ஏன் சார். உள்ள ரெண்டு சின்ன கொழந்தைங்க மாட்டிட்டு இருக்காங்க. நீங்க கன்ஸ்ட்ரக்ஷன் பால்ட் பத்தி பேசிட்டு இருக்கீங்க. பொம்பள இருக்காளேனு  பாக்கறேன் இல்லாட்டி அசிங்கமா சொல்லிடுவேன். முட்டாள் இன்ஜினியர்."
 கத்தி தீத்தாரு விஸ்வநாதன். கரண்ட் வந்தது. இன்ஜினியரே கதவ டிரில் பண்ணி தொறந்தாரு. உள்ள ஆதித்யாவும் அனிருத்தும்.....

மிச்ச நாலு கண்கள்- ஆதித்யா வயது 7, அனிருத் வயது 3

                                           அம்மா சொன்னவுடனே ஆதித்யாவும் அனிருத்தும் ரூமுக்குள்ள போனாங்க. அழுத்தர மாதிரி பூட்டுல இருக்கே அழுத்துவோம் அழுத்தினான் அனிருத். ஆதித்ய புக்ஸ் அரேன்ஜ்  பண்ண ஆரம்பிச்சான். அனிருத்துக்கும் பண்ணி கொடுத்தான். ஆதித்யா அனிருத் கிட்ட சொன்னான், "அனிருத் பாரு உனக்கு எப்டி வேத்துருக்கு. போய் கதவ சாத்து. ஏசி போடலாம்." கதவ சாத்தினான் அனிருத். ஏற்கனவே பூட்ட அழுத்தினதால கதவு பூட்டிகிச்சு. இந்த விஷயம் பசங்களக்கு தெரியாது.
                                           ஆதித்யா டிவி ஆன் பண்ணினான். அனிருத்துக்கு கதவு கிட்ட ஏதோ சத்தம் கேட்டது. "அண்ணா கதவுல சத்தம் கேட்டது." கூறினான் அண்ணா கிட்டே. "அப்பா சொன்னாரு அந்த ரூம்ல பட்டாசு வெடிச்சாலும் இங்க கேகாதுனு. அவர் கிட்ட சொல்லணும்." ரெண்டு பேரும் ஒரே நேரத்துல சொன்னங்க "அப்பா சத்தம் கேக்குது." ஒவ்வொரு தடவ கதவ தட்டற சத்தம் கேக்கும்போதும் சொன்னாங்க.
                                           ஆதித்யா மணிய பாத்துட்டு அனிருத் கிட்ட சொன்னான். "அன்னு சின்ன முள்ளு 9லயும் பெரிய முள்ளு 6லயும் இருக்கு. இப்ப நாம தூங்காட்டி அம்மா திட்டுவா." அனிருத் அம்மா வேணும்னு அழ ஆரம்பிச்சான்.  ஆதித்யாக்கும் பயம் வந்தது. அந்த நேரம் பாத்து டிவில வை திஸ் கொலவெறி பாட்டு வந்தது. ரெண்டு பெரும் பயத்த மறந்துட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சாங்க. பாட்டு முடிஞ்சதும் அனிருத் திரும்ப அழுதான். ஆதித்யா பீரோல இருந்து ரெண்டு சாரீ எடுத்து அனிருத் கிட்ட ஒன்னு கொடுத்தான்.அவன் அம்மா அனிருத் தூங்க வைக்க பாடுற கண்ணே கலைமனேன்கர பாட்ட பாடி அனிருத்த தூங்கவும் வெச்சான். அப்படியே அவனும் தூங்கிட்டான்.
                                           திடீர்னு கதவுல இருந்து  பயங்கரமான சத்தம் வந்துச்சு. ரெண்டு பேரும் எழுந்து கதவுகிட்ட போனா யாரோ கதவ தொறந்தாங்க. அவர் கிட்ட ஒரு மிசின் இருந்தது.

பத்து கண்களும் சேர்ந்து
                                         
                                          சுபா ரெண்டு பசங்களையும் கட்டி பிடிச்சா. முத்தமும் கொடுத்தா. "அம்மா, அனிருத் தூங்கல. அப்பறம் நான் கண்ணே கலைமானே பாடினேனா தூங்கிட்டான். என்ன வீசிங்காமா. என்னாச்சு?" கேட்டான் ஆதித்யா. அனிருத் வேகமா அப்பா கிட்ட போய், "ஹரிப்பா உள்ள கதவுல சத்தம் கேட்டுது. நான் கூட கேட்டதுன்னு சொன்னேனே. ஆதியும் சொன்னான். அதான் இந்த அங்கிள் செரி பண்ணாரா?" மழலையா கேட்டான். ஹரியோட அப்பா அவர் ரூம்ல இருந்து வந்து, "நாங்க எங்காத்துல ம்ரித்துன்ஜயா ஹோமம் பண்ணிருக்கோம். எந்த தப்பும் நடக்காது. போய் தூங்குங்கோ. யோவ் இன்ஜினியர் என்ன யா கட்டிருக்க?  ம்ரித்துன்ஜயா ஹோமத்தால இப்போ என் பேரன்க நல்லா இருக்கா. நீங்க தப்பு பண்ணலாம் யா. மனுஷாள் தானே. என் ம்ரிதின்ஜயா தேவி தப்பு பண்ணமாட்டா. நல்ல எல்லாத்தையும் படிச்சிண்டு வா திருப்பி. நாளைக்கு கொஸ்டின் கேப்பேன் பாத்துக்கோ." என சொன்னார்.விஸ்வநாதன் பசங்களுக்கு முத்தம் கொடுத்துட்டு அவர் வீட்டுக்கு கெளம்பினார்.
                                         ரெண்டு நாள் கழிச்சி, ஆதித்யா வேகமா ரூமுக்குள்ள போய் உள்பக்கமா பூட்டினான். சுபா சாவிய வெச்சு தொறந்து ஒரு அற விட்டா. அழுதுட்டே கேட்டான் ஆதித்யா, "அன்னிக்கி மட்டும் கிஸ் கொடுத்த. இப்போ ஏன் அடிக்கற." சுபா அறஞ்ச கன்னத்துல  ஒரு முத்தம் கொடுத்தா.
                 
                                            

ஆயிரம் ரூபாயின் கதை

                     
                        காவேரி, ஒரு அக்மார்க் தென் தமிழக கிராமப் பெண். நடந்த தேர்வில் எடுத்திருந்த நல்ல மதிப்பெண்களின் உதவியால், தமிழகத்தின் சிறந்த கல்லூரிகள் ஒன்றில் உயிர்தொழில்நுட்பவியல் (Biotechnology) படிக்கும் வாய்ப்பு அவளுக்கு கிட்டியது.
                     
                        பள்ளி படிப்பு முடிந்தவுடன் இன்ஜினியரிங் அல்லது மெடிக்கல் படிப்பில் சேர வேண்டும் என்பதே இப்போதைய கல்வி நிலையாக உள்ளது. அவ்வாறு சேர்ந்தவர்கள் தான் நல்ல மாணவர்கள். அவர்களுக்கே திருமண சந்தையில் நல்ல மதிப்பு. இதிலும் ஒரு பாகுபாடு பெயர் தெரியாத இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தால் நடுநிலை மாணவன். இன்ஜினியரிங் மெடிக்கல் தவிர வேறு எதை படித்தாலும் அவர்களை கடைநிலையர்கள்.

                       காவேரிக்கு இதில் முதல் நிலை. கோயம்புத்தூரில் தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியில் உயிர்தொழில்நுட்பவியல் படிக்கும் வாய்ப்பு. அவள் கல்லூரியில் தன கால்களை வைத்தபோது, ஏதோ வேற்று கிருகத்தில் கால் வைத்தது போல் அவளுக்கு மகிழ்ச்சி. அரசு கல்லூரி -கட்டணமும் குறைவு. இந்த அரசு கல்லூரியில் பல நிலைகளிலிருந்து வந்த மாணவர்களை காணலாம். சொந்த ஊர்களில் வேற்றுமை, முக்கியமாக செல்வ நிலையில் வேற்றுமை, இந்த கல்லூரி பல கூடல்களின் சங்கமம். காவேரி இதுவரை பாவாடை தாவணியையே உடுத்தி வந்தவள், நல்ல நாகரீகம் கொண்ட நாகரீக வளர்ச்சி இல்லாத இடத்தை சேர்ந்தவள் ஆயிற்றே. கல்லூரியில் இவ்வுடை அணிந்தால் கிண்டலுக்கு ஆளாகலாம் என தோழிகள் கூறியமையால், ஆயிரம் ரூபாய்க்கு மூன்று சுடிதார்களை வாங்கி வந்தாள். அவளுடைய பணக்கார தோழி, ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சுடிதார் வாங்கி கொடுத்திருந்தாள்.

                      கல்லூரி விடுதியில் இருவர் ஒரு அறையை பகிர்ந்து கொள்ளவேண்டும். காவேரியும் சென்னையை சேர்ந்த ஹர்ஷிதாவும் அறையை பகிர்ந்து கொண்டனர். ஹர்ஷிதா சென்னையின் சிறந்த பள்ளிகூடத்தில் படித்தவள். குட்டையிலும் குட்டை பாவாடை அவள் பள்ளி சீருடை. அந்த குட்டை பாவாடையே ஆயிரம் ரூபாய். உலகமயமாக்கல், நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆடைகளின் அளவை குறைப்பதில் வளர்ச்சி அடைந்துள்ளது. பிக்னி பள்ளி சீருடை ஆகிவிடும் 2500இல்.
                   
                    முதல் நாள் வகுப்புக்கு டீ ஷர்ட் ஜீன்ஸ் என தயாரானாள் ஹர்ஷிதா. கல்லூரி விதிமுறைப்படி சுடிதார் அல்லது சாரீ தான் அணிந்து வர வேண்டும் என சீனியர் சொல்ல, ஜப்பானிய எரிமலை போல் வெடித்தாள் ஹர்ஷிதா, ஏதோ இங்கிலீஷ் கெட்டவார்த்தையை சரளமாய் திட்டி விட்டு சுடிதாரில் சென்றாள்.
                 
                   ஹர்ஷிதாவிற்கு காவேரியுடன் அறையை பகிர்ந்து கொள்ள பிடிக்கவில்லை, காலையில் அவள் சொன்ன accustomed என்ற வார்த்தையின் அர்த்தத்தை மட்டும் எட்டு முறை கேட்டு விட்டாள் காவேரி. " accustomed கு அர்த்தம் தெரியல இவ கூட லம் இருக்கணும் தல விதி. ஜேசன் ஸ்டேத்தம் , ஏகான் யாருன்னு கேக்குறா பிட்ச்"    மனதுக்குள் முனகினாள் ஹர்ஷிதா.

                   கால போக்கில், காவேரியை புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஹர்ஷிதாவுக்கு கிடைத்தது. ஆங்கில மனமே இல்லாத பெண். டி ஷர்ட் ஜீன்ஸ் பெண்கள் அணிவதை திரைபடங்களில் மட்டுமே பார்த்தவள். செலவே செய்ய மாட்டாள். நன்றாக பாடுவாள். இப்போது ஆங்கிலம் புரிந்து கொள்வாள். தட்டுத்  தடுமாறி பேசவும் செய்வாள்.

                   காவிரிக்கு சென்னை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நாட்டம். இன்ஜினியரிங் சேர்க்கைக்கு ஜூலையில் சென்றதே முதல் முறை. அங்கு நேரம் கழிக்கவும் முடியவில்லை.ஹர்ஷிதவிடம் சென்னை பற்றி கேட்டாள்.
அப்படியே சென்னை பற்றி இருந்த பேச்சு ஹர்ஷிதாவின் பள்ளி பற்றி சென்றது.
                 
                "உனக்கு தெரியுமா என் ஸ்கூல் டெர்ம் பீஸ் மட்டும் 31,165 ரூபா. இப்ப பாரு எட்டு செமஸ்டர் சேத்தும் பீஸ் அத விட கம்மி."
                 "என்னது 31,000 ஆ  பகல் கொல்லையாள இருக்கு. லெவந்த் ட்வெல்த் சேத்தே எனக்கு ஆயிரம் தான் ஆச்சு."
                "நான் பிசிக்ஸ் ட்யூசனுக்கே மாசம் ஆயிரம் கட்டினேன்."
                "ஏன் டேர்ம்க்கு 31 வாங்கராங்களே  உன் ஸ்கூல்ல பிசிக்ஸ் சொல்லி தரலையா "
                "சொல்லி தந்தாங்க. எங்க அப்பாவோட ப்ரெண்ட்ஸ் பசங்க லாம்  ட்யூசன் போனாங்களாம் என்னையும் அனுப்பிடாறு."
                "ஆயிர ரூபா எங்க வீடு மாச வருமானம்."
                "அப்படி னா நீ 30 டைம்ஸ் அதவிட வாங்க போர."
                "சுசீந்தரம் தாணுமலையான் கிட்ட அத தான் வேண்டிகிட்டு இருக்கேன் பாப்போம்."
             

                நாட்கள் வேகமாக ஓடி அந்த நாள் வந்தது. கேம்பஸ் இன்டர்வியு. இன்ஜினியரிங் படிக்க வரும் மாணவர்கள் பலர் ஒரு பார்முலா ஓட தான் வராங்க.
                12th முடி ---> இன்ஜினியரிங் ஜாயின் பண்ணு எந்த ஸ்ட்ரீமா  இருந்தாலும் பரவா இல்ல ---> சாப்ட்வேர் வேலைல சேரு.
         
                இந்த பார்முலா காவேரியையும் விட்டு வைக்கவில்லை. வேலை கிடைத்தால் ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய்; வீட்டின் மாத வருமானம். கணிப்பொறி முன் அமர்ந்து வேலை செய்தால் நாளுக்கு ஆயிரம். ஏர் பிடித்து, சாக்கடைகளை சுத்தம் செய்து , உடலை வருத்தி கட்டிட வேலை செய்தால் மாதத்திற்கு ஆயிரம். இது எங்கே நியாயம்? கேட்டால் மூளைக்கு தான் அதிக பணம், உடல் உழைப்பு யார் வேண்டுமானாலும் செய்யலாமாம் என்கிறார்கள். எங்கே பில் கேட்ஸ் வந்து ட்ரைநேஜ் சுத்தம் செய்யட்டும் பார்க்கலாம். ஆறு செமெஸ்டர் படித்த Biotechnology காவேரிக்கு ஜாவா வேலை வாங்கி கொடுத்தது.  மொத்தம் ஆறு பேரை தேர்வு செய்தது அந்த நிறுவனம். ஒரு சிவில், 2 மெக்கானிகல், 1 உயிர்தொழில்நுட்பவியல், 2 எலெக்ட்ரிகல். ஒரு கணினி மாணவரையும் சேர்க்கவில்லை அந்த நிறுவனம். பால் சுரக்க காளை மாடுகளை வாங்கிய கோனார் கதை.

                காவிரிக்கு வேலை பெங்களூரில். நாளுக்கு ஒரு ஆயிரம் வாங்க போகும் ஆனந்தம் வேறு. ஆபீசுக்குள் நுழைந்தால் அப்படியொரு திகைப்பு. எல்லாம் மூடியும் தெரியும் வகையில் ஆடை அணிந்த பெண்கள் சிலர். சிகரட்டை குபு குபு என புகைக்கும் சில பெண்கள். இவளை போல இருக்கும் சில பெண்கள். இவளும் சற்று தேர்ச்சி அடைந்திருக்கிறாள். அடர்ந்த மயிர்நிரைந்த இவள் புருவம், மயிர் சற்றே நீக்கப்பட்டு வடிவம் மாறி நேர் கொடு போல இருக்கிறது. மேலே சுடிதார் கீழே ஜீன்ஸ் என்று இவளுக்கும் ஏற்பட்ட நாகரீக வளர்ச்சி. ஊதா நிறத்தில் பொட்டு, லிப்ஸ்டிக், பிளாஸ்டிக் கம்மல், வளையல், சுடிதார். கண்ணாடிக்கும் அதே நிறத்தில் ஒரு ப்ரேம். ஜாவா தொடக்கத்தில் கொரியமொழி படம் போல புரியாமல் இருந்தது. சிறப்பாக பணியாற்றினால் ஆயிரம் இன்னும் வளருமே, கற்று கொண்டாள்.

               அவள் அணியில் பணி புரியும் ஒருவர், நேரடியாக F1 கார் பந்தயம் கண்டு வந்தாராம். அதற்கு ஒரு விருந்து. Barbeque nation ஆம் ஆங்கிலம் தெரிந்தவனும் படிக்க திணறும் பெயர் அந்த ஹோட்டலுக்கு. தான் உண்பது என்ன உணவு என்றே விளங்கவில்லை காவேரிக்கு. பக்கத்தில் இருந்த ஆந்திராவில் இருந்து மெக்கானிகல் முடித்த ஜாவா ஸ்பெசலிஸ்ட் அவளுக்கு உணவுகளில் எது சைவம் என்று பிரித்து கொடுத்தான். இந்திய உணவுகளை சாப்பிட வேண்டாம் கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்று அறிவுரை வேறு. கடைசியாக ஐஸ்கிரீமில் முடிந்தது விருந்து.

              கட்டிய பில்லை பார்த்தல் காவேரி. ஒரு ஆளுக்கு ஆயிரம் ருபாய். அவள் உள்ளிருந்து ஏதோ சொன்னது இந்த ஆயிரம் தான் பல காவேரிகளின் மாத தேவை என்று.

             அதே நேரம் சென்னையில் டிவி செய்தி வாசிப்பாளர், "வறுமை கோட்டுக்கான எல்லை கோடு ஒரு நாளுக்கு நகர் புறத்தவறுக்கு ருபாய் 32 ஆகவும் கிராமப்புற மக்களுக்கு ரூபாய் 26 ஆகவும் மத்திய அரசு அறிவிப்பு."            
         

Wednesday, September 26, 2012

நான் நாயகி எண் இரண்டு

நாயகன்பால் அன்பு கொண்டு
அளவிலா காதல் செய்து
அறிவிலா நான்
அவன் அழகிலும் அறிவிலும் மயங்கி
கனாலோகத்தில் டூயட் பாட்டு என
சுகமாக சென்றது என் பாத்திரம்


இடைவேளை முன்னர்
சிற்றுண்டி சாலைக்கு
அவன் என்னை அழைத்து
காதலை சொன்னான்
காதலியோ நானில்லை
பக்கத்து நாற்காலியில்
பளிச்சென்ற ஆடையும்
அதீத அரிதாரமுமாய்
அழகு கூடி
பொய்யான அழகில் இன்னொருத்தி
எனக்கோ ஒப்பனை இல்லை

சட்டென உரைத்தது
கதை பற்றாக்குறையால் இணைக்கப்பட்டு
இடைவேளைக்கு பின்னர்
காதலனுக்கு தோழியாகி
இறுதி காட்சியில்
அவருக்கு குறி வைத்த குண்டை
நடுவினில் புகுந்து
என் மேல் வாங்கி
இன்னுயிர் நீக்கும்
இரண்டாவது கதாநாயகி என்னும்
தியாகச்செம்மல் நான் என்று